கதை வசனம் சங்கர்தாஸ் எழுத திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். ஒருநாள் கூத்து எனும் அட்டகாசமான படத்தை தந்தவரிடம் இருந்து மான்ஸ்டர் எனும் ஜாலியான படம் கிடைத்திருக்கிறது.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றுகிறார் நாயகன். அதன் படி எல்லா உயிருக்கும் வாழ உரிமை உண்டு என்பதை பின்பற்றும் நாயகன் புதிதாக ஒரு வீடு வாங்குகிறார். அங்கு ஒரு எலி வசித்து வருகிறது. அந்த எலி நாயகனுக்கு தோழனாக வில்லனாக விளங்குகிறது. எடால் வைத்து எலியை பிடித்த நாயகன் இரக்கப்பட்டு எலியை உயிரோடு விடுகிறார். பின்னர் எலியின் டார்ச்சர் அதிகமாகவே எலியைப் பிடித்துக்கொள்ள விதவிதமாக முயல்கிறார். கடைசியில் எலியை பிடித்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.
தொடர்ந்து வில்லனாகவே நடித்து வந்த எஸ் ஜே சூர்யாவுக்கு ஹீரோவாக இது நல்ல வெற்றியைத் தந்த படம் என்றே கூற வேண்டும். தன்னுடைய இன்னொரு முகமான காமெடி முகத்தை நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். சின்ன சின்ன எக்பிரசன்கள் மூலமாக சிரிக்க வைக்கிறார். பிரியா பவானி சங்கர் படத்திற்கு கூடுதல் அழகு. நாயகன் கூடவே வரும் கருணாகரன் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சிரிப்பு வருகிறது. பாடல்கள் மனதை கவரும் வகையில் அவ்வளவாக இல்லை. பின்னணி இசை பக்கா. குறிப்பாக எலியின் என்ட்ரிக்களை காட்டும்போது ஒலிக்கும் பின்னணி இசை மிரட்டுகிறது.
படத்தின் இன்னொரு பலம் கிராபிக்ஸ் டிசைனிங். நிஜ எலியைப் போல அட்டகாசமாக அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளார்கள்.ஒளிப்பதிவு அருமை. குறிப்பாக எலியின் பார்வையில் தெரியும் பச்சைநிற காட்சிகள் அருமை. எளிதில் யூகிக்க கூடிய கிளைமேக்ஸ் என்றாலும் ( ஆல்பா திரைப்படத்தின் கிளைமேக்ஸைப் போலவே இந்த திரைப்படத்தின் கிளைமேக்ஸ் உள்ளது ) அழகான முடிவு. இந்தப் படத்தை பார்த்து முடித்த ஒவ்வொருவரும் இனி எலியை கொல்லும் முன் ஒருகணம் யோசிப்பார்கள். எல்லா உயிர்க்கும் வாழ உரிமையுண்டு என்பதை இயக்குனர் அழகாக கூறி உள்ளதால் குடும்பங்கள் இந்தப் படத்தை கொண்டாடியே ஆக வேண்டும்.
Be the first to comment on "குடும்பங்கள் கொண்டாடும் எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர்! – ஒரு பார்வை!"