“பர்த்டே செலிபிரேசன் வீடியோ லின்க்” பற்றி பெண்கள் என்ன சொல்கிறார்கள்?

women says about birthday Celebration linkbro trend

கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளம் முழுக்க அதிகம் பேசப்பட்ட வார்த்தை “link bro” என்பது தான். இலங்கையை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் உல்லாச வீடியோ குறித்த விவகாரம் அது. ஒரே நாளில் இந்தியா முழுக்க “link bro” என்று டிரெண்டானதைப் பற்றி சமூக வலைதளங்களில் உள்ள பெண்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். 

பதிவு1: 

உடம்பு தான் இங்க பிரதானம்.. உடம்பு தான் இங்க கௌரவம்..

செக்ஸ் வீடியோக்கள். நிர்வாணப் படங்கள் எல்லாமும் என்னதான் நாங்க உடன் பட்டாலும் பட்டவர்தனமா அதை வெளிப்படுத்திடும் பொழுது எங்களோட ஒட்டுமொத்த தைரியமும் தன்னம்பிக்கையும் உடைஞ்சிப் போவது தான் உண்மை.. இங்க நிறைய பேர் பேசறதை கண்கூடாகப் பார்க்கிறேன்.. உடல் ,நிர்வாணத்தை உடைத்தெறிஞ்சி வந்தா இப்படியான ப்ளாக்மெயில் குற்றங்களிலிருந்து தப்பிக்கலாம் என்று.. வெளிவரவேண்டும் என்றும் உடைத்தெறிய வேண்டும் என்றும் கத்திக்கொண்டிருக்கிறார்கள் ..

அது இயலாத காரியம்..உடலை வைத்து தான் பலதும் கற்றுத் தரப்படுகிறது.. மிகப்பெரிய கௌரவமே உடல் தான் என்பது போல சமூகமும் கூட கற்றுத்தருகிறது.. இங்க எத்தனை ஐடியில பெண்களோட மார்பகங்கள் தெரியும் படியாக போட்டோக்களை இட்டு காமத்தை வெளிப்படுத்தியிருப்பிங்க.. எத்தனை பேர் செக்ஸ் என்னும் விடயத்துக்காக தன் ஐடி பக்கம் முழுவதும் பெண்களையும் அவர்களின் சதைகளையும் பயன்படுத்தியிருப்பிங்க..

பெண்களின் உடம்பை வைத்து ஆர்கஸம் அடையும் மனிதர்களின் மத்தியில் 5% நிர்வாணத்தைக் கடந்து வா அதெல்லாம். ஒன்றுமில்ல என்று சொல்லும் மனிதர்கள் தோற்றுப் போகிறார்கள்.. ஏனெனில் ஐந்து சதவீதம் மட்டுமே பெண்களை சதைகளாகப் பார்ப்பதில்லை.. ஆனால் 95% பேர் அதை ரசிப்பவர்கள் வீடியோ கேட்பவர்கள் .. ஆராதிப்பவர்கள்.. ஆர்கஸம் அடைகிறவர்கள் தான்..

திடீரென்று நாங்களே உடன் பட்ட அந்த உடலை வைத்து மிகப்பெரிய அவமானம் நடக்கும் பொழுது உடைந்தும் போகிறோம் , மனச் சிதைவும் ஏற்படுகிறது.. உடலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எந்த பெண்ணினுடைய கேரக்டருக்கும் தைரியத்திற்கும் கொடுப்பதில்லை… உடலை பிரதானமாய் வைத்துதான் காதலும் நிகழ்கிறது.. எல்லாமும் நடக்கிறது.. அப்படியிருக்க அந்த உடல் எனும் கௌரவத்தை விட்டுத் தருவது அசாதாரணமானது..

பெண்கள் வீடியோக்கள் வெளிய வந்துடுச்சி போட்டோ வந்துடுச்சினு தற்கொலை செய்துகிட்டா நல்லது தான்… வரவேற்கத்தக்கது. ️

பதிவு 2: 

அந்த பொண்ணு தற்கொலை முயற்சி பண்ணியிருக்காம். அதுக்கு அந்த வீடியோவ share பண்ணவங்க தான் காரணமாம். இப்டி லூசுத்தனமா சொல்லிட்டு திரியுதுங்க சில பைத்தியங்க. 

எனக்கு ஒரு விஷயம் நெஜமாவே புரியல.. எதை வீடியோ எடுக்கணும் எதை வீடியோ எடுக்க கூடாதுனு கூட தெரியாத அளவுக்கு அந்த பொண்ணு என்ன சின்ன பப்பாவா. அப்டியே எடுத்தாலும் கூட இருக்கவன் நம்பிக்கையானவனா இல்லையா, அவனை இவ்ளோ நம்பி வீடியோ எடுக்கறமே டெக்னாலஜி விரவி கெடக்கற இந்த காலத்துல அது வெளிய லீக் ஆவாதுங்கறதுக்கு என்ன உத்திரவாதம். நாம பண்றது சரியா தப்பான்னு கூடவா தெரியாது. 

சரி அந்த timeல போதைல இருந்தாங்கன்னே வெச்சுப்போம். போதைல இருக்கும்போது ஆண்களை விட பெண்களுக்கு தான் உள்ளுக்குள்ள இருக்க எச்சரிக்கை அலாரம் வழக்கத்தை விட அதிகமா அடிக்கணும். ஏன்னா இந்த சமுதாயம் குடிக்கற பெண்ணையும் குடிக்கற ஆணையும் ஒரே மாதிரி பாக்கறதில்ல. 

ஆண் குடிச்சா அவன் ஆம்பளை அப்படித்தான் இருப்பான்னு சொல்லுவாங்க. அதே சமயம் ஒரு பெண் குடிச்சா அவ ஒரு ஊர் மேயறவ bla bla bla… ரெண்டு பேருக்கும் ஒரே போதைதான் ஒரே கம்பெனி சரக்கு தான்.. ஆனா கிடைக்கற பட்டம் மட்டும் வேற. சில ஆண்களுக்கு இந்த மாதிரி வீடியோ லீக் ஆகற மேட்டர்லாம் ஒரு பிரச்சனையே இல்ல. துடைச்சு போட்டுட்டு அடுத்து எவ கெடைப்பானு போயினேயிருப்பானுங்க. 

ஆனா அதிகம் அசிங்கப்படறது அவமானத்துக்கு உள்ளாகறது பெண்கள் தான். தினம் தினம் இந்த மாதிரி எவ்வளவோ விஷயங்கள் கண் முன்னாடி நடக்கறதை பார்க்கிறோம், கேக்கறோம், படிக்கறோம். அப்படியிருந்தும் செக்ஸ் வெச்சுக்கறதை வீடியோ பண்றாங்கனா அது மிகப்பெரிய முட்டாள்தனம். அதுக்கான பின்விளைவுகளை அனுபவிச்சு தான் ஆகணும். வேற ஆப்ஷனே இல்ல. 

இந்த மாதிரியான பிரச்சனைகள் வராம இருக்கணும்னா…

  1. பெண்கள், ஒருத்தன் மேல 200% நம்பிக்கை வெச்சாலுமே கூட அந்தரங்கமான விஷயங்களை எவ்வளவு வற்புறுத்தினாலும் வீடியோ எடுக்க அனுமதிக்க கூடாது. No means no…
  2. அப்படியொரு வீடியோ லீக் ஆகி எல்லாருக்கும் தெரிய வந்துட்டா தற்கொலை முயற்சி எல்லாம் பண்ணாம. அசிங்கம் அவமானம் பத்தியெல்லாம் கவலைப்படாம தைரியமா…’ஆமா அதுக்கின்னா இப்ப… ‘னு கேட்டுட்டு டிரஸ்ல ஒட்டின மண்ணை தட்டி விடற மாதிரி தட்டி விட்டுட்டு what’s next? னு போயிக்கினே இருக்கணும்… 🙂 அந்தளவுக்கு மன வலிமை இருக்கணும்  

இல்லனா இந்த மாதிரி பிரச்சனைகளும் அதன் பின்பான தற்கொலைகளும் தொடர்ந்துட்டே தான் இருக்கும்.

 

Related Articles

அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் அருந்துவது மூ... ஹைபோநெட்ரீமியா(hyponatremia) என்பது ரத்தத்தில் சோடியத்தின் அளவைக் குறைக்கும் ஒரு நோய் ஆகும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையான மூளை வீக்கத்...
கருப்பு சட்டை காரர்களையும் கருப்பு நிற ம... கருப்பு - அழகு:கருப்பு நிறம் பெண்களுக்கு ஏன் அவ்வளவு பிடித்திருக்கிறது என்று பெண்களிடம் கேள்வி எழுப்பினால் இதற்கெல்லாம் சரியான பதில் சொல்ல முடியாத...
சட்டக்கல்லூரியில் படித்து டாக்டர் ஆகணும்... Pariyerum Perumal (2018) - IMDB Rating - 9.6/10 எல்லா ஊரிலும் கூட்டம் அதிகம் கூடாத ஒரு தியேட்டர் இருக்கும். காரணம் அந்த தியேட்டர்களில் மட்டும் தான் ந...
ப்ளாக் பஸ்டர் படங்கள் இயக்குவது எப்படி?... முதலில் வில்லனுக்கான அறிமுக காட்சி இருக்க வேண்டும். காரணம் வில்லன் தான் படத்தின் நாயகனே என்பதற்காக.வில்லனின் எண்ட்ரி செம மாஸாக இருக்க வேண்டும். அ...

Be the first to comment on "“பர்த்டே செலிபிரேசன் வீடியோ லின்க்” பற்றி பெண்கள் என்ன சொல்கிறார்கள்?"

Leave a comment

Your email address will not be published.


*