“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்!

Let's take a look at two pictures that emphasize that hope is life!

Cast away

பறக்கும் விமானம் பழுதாகி கட்டுப்பாடின்றி கடலுக்குள் தரையிறங்க கொட்டும் பெரு மழையில் ஒற்றை ஆளாக ரப்பர் டுயூபை கட்டிப் பிடித்துக்கொண்டு சிக்கித் தவிக்கிறான் நாயகன். இரவு நேர கடல் சீற்ற காட்சிகள் மிக அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகளை பார்க்கும்போது நமக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அங்கிருந்து ஒற்றை ஆளாக தப்பித்து நாயகன் தீவு ஒன்றில் ரப்பர் படகுடன் கரை ஒதுங்குகிறான். கரையோரத்தில் நின்றுகொண்டு உதவிக்கு ஆட்களை அழைக்கிறான். பசியால் வாடுகிறான். இயற்கையாய் கிடைக்கும் தேங்காய் நீரை பருகுகிறான். மலை மீது ஏறி உதவிக்கு வருமாறு கத்துகிறான். கால் பாதங்களில் ரத்த காயங்கள் ஏற்பட காலுக்கு துணிகளை கட்டிக்கொண்டு மலை ஏறுகிறான். மலையில் நின்று கடலை பார்க்கும் காட்சி அருமையான காட்சி. 

தன்னுடன் விமானத்தில் பயணித் ஒருவரின் சடலம் கரை ஒதுங்குகிறது. அவருடைய உடலில் இருந்து தனக்கு தேவையான உடைமைகளை எடுத்துக்கொள்கிறான். குறிப்பாக டார்ச் லைட்டை எடுத்துக்கொள்கிறான். அந்த சடலத்தை புதைத்துவிட்டு அதன் அருகே உள்ள பாறையில் குறிப்புகளை பற்றி எழுதுகிறார். அந்த லைட்டை வைத்து இரவு நேரத்தில் கடலில் பயணிக்கும் கப்பலை உதவிக்கு அழைக்கிறான். ஆனால் உதவி கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் தன்னிடம் இருக்கும் ரப்பர் படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் போகிறான். ஆனால் பேரலைகள் அவனை வீழ்த்த படகு கற்பாறையில் குத்தி கிழிகிறது. கூடவே அவனுடைய கால்களும் பாறையில் குத்தி கிழிகிறது. மீண்டும் கரைக்கே திரும்புகிறான். 

விடிய விடிய தீ மூட்டும் மரக்கட்டையை தேய்த்து தேய்த்து கை கிழிந்து ரத்தம் வருகிறது. அப்படி இருந்தும் முயற்சியை கைவிடாமல் தீப்பிடிக்க வைக்க முயல்கிறான். தீப்பிடிக்கிறது. விறகுகளை அடுக்கி இரவு முழுக்க தீயை எரிய வைத்து அதன் மூலம் உதவியை கேட்கிறான். ஆனால் யாரும் வந்தபாடில்லை. 

ஒரு புட்பால் ஒன்று கரை ஒதுங்க அந்தப் புட்பாலில் ரத்தத்தை தடவி அதில் மூக்கு கண்களை வரைந்து அதை ஒரு மனிதனாக நினைத்து அந்த புட்பாலிடம் பேசுகிறான். அப்படியே நான்கு வருடங்கள் கடந்து போகிறது. உடல் மெலிந்து முடி வளர்ந்து பாலா பட ஹீரோவைப் போல உருமாறுகிறான். தன்னுடைய பெயரான வில்சன் என்ற பெயரையை அந்த பந்திற்கு வைத்து அதனுடன் திட்டமிட்டு ஒரு பல நாட்களாக மரக்கட்டைகளை சேமித்து வைத்து படகு அமைத்து கடலுக்குள் இறங்குகிறான். ராட்சத அலைகளை கடக்கிறான். நடுக்கடலில் பெருமழையில் சிக்கி தவிக்கிறான். திமிங்கிலம் ஒன்று அவனை கடந்து செல்கிறது அமைதியாக. வில்சன் என்ற கால்பந்து படகிலிருந்து விலகி கடலுக்குள் போக நாயகன் படகை ஒரு கையில் பிடித்துக்கொண்டு பந்தை எட்டிப்பிடிக்க கடலுக்குள் செல்கிறான். ஆனால் பந்து விலகி நெடுந்தூரம் சென்றுவிடுகிறது. உணவின்றி பல நாட்களாக கடலுக்குள் மரப்படகில் மிதந்தபடி தவிக்க பிறகு ஒரு கப்பல் மூலமாக நாயகன் மறுவாழ்வு பெறுகிறான். அந்த நாயகன் நினைத்திருந்தால் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அவன் நம்பிக்கையை கைவிடாமல் இறுதிவரை போராடிக் கொண்டே இருப்பான். அப்படி நம்பிக்கையுடன் போராடியதால் தான் அவனால் பெரும் அலைகளை எல்லாம் கடந்து தன் வாழ்வை மீட்டு க்கொள்ள முடிந்தது. ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் இந்தப் படமும் ஒன்று. அடுத்ததாக இன்னொரு படத்தைப் பார்ப்போம். 

The shawshank redemption 

The shawshank redemption என்பது தான் அந்தப் படம். ஹீரோ ஒரு வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறான். அவனுடைய மனைவி கள்ளக்காதலுடன் படுக்கையில் இருப்பதை நாயகன் பார்க்கிறான். தன் மனைவியை கொள்ள வேண்டும் என்று துடிக்கிறான், ஆனால் கோபத்தை கட்டுப்படுத்தி எதுவும் செய்யாமல் இருக்கிறான். அப்படி இருந்தும் நாயகி யாரோ ஒருவனின் துப்பாக்கியால் கொல்லப்படுகிறாள். அந்த கொலைப்பலி நாயகன் மீது விழுகிறது. அவன் இல்லை இல்லை என்று சொன்ன போதும் அவனை சிறையில் அடைக்கிறார்கள். 

சிறைக்குள் நுழைந்ததும் ரெட் என்பவன் நாயகனுக்கு நண்பனாகிறான். ரெட் என்பவன் பல ஆண்டுகளாக பரோல் நிராகரிக்கப்பட்டு சிறை தண்டனையை அனுபவிப்பவன். சிறை அதிகாரிகளை ஏமாற்றி போதை பொருட்களை சிறைக்குள் வர செய்து பணம் சம்பாதிப்பவன். அவனுடைய உதவியால் கற்பாறையை வெட்டும் சிறிய கோடாரி ஒன்றை வாங்குகிறான் நாயகன். அந்த கோடாரியால் அவன் சிறையிலிருந்து தப்ப போகிறானா என்ற சந்தேகம் ரெட்டுக்கும் இன்னும் சிலருக்கும் இருந்தது. ஆனால் அந்தக் கோடாரியால் சுரங்கம் வெட்ட முடியாது என்று கண்டிப்பாக ரெட்டுக்குத் தெரிந்திருக்க அவன் அந்த கோடாரி விஷியத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

ரெட், நாயகன் இருவரும் இன்னும் நெருங்கிய நண்பர்களாகுகிறார்கள். ஒருமுறை அவர்கள் இருவரும் மற்ற நண்பர்களும் சிறையின் ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டிருக்க அப்போது காவலாளி ஒருவன் அரசாங்கத்தை ஏமாற்றி கருப்பு பணத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது என தெரியாமல் தவிக்க அப்போது நாயகன் அவனுக்கு ஐடியா கொடுக்கிறான். காவலாளியும் அவன் சொன்னது போல் செய்து கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிறான். அதை தொடர்ந்து மற்ற காவலாளிகளும் வார்டனும் தொடர்ந்து அவன் உதவியை பெற்று அரசாங்கத்தை ஏமாற்றி பணம் சேர்க்கிறார்கள். இந்நிலையில் நாயகனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓரின சேர்க்கையாளன் ஒருவன் போலீஸ்காரர்களால் உதைக்கப்பட்டு கைகால்கள் முறிந்து வீல் சேரிலயே தன் காலத்தை கழிக்கும் நிலைமைக்கு மாறினான். போலீஸ் மற்றும் வார்டன் இருவரும் நாயகனுக்கு அவ்வளவு சப்போர்ட்டாக இருக்கிறார்கள். நாயகன் மீது உள்ள அக்கறை காரணமாக அவனை வேறு வேலை செய்யவிடாமல் சிறை நூலகத்திற்கு அவனை உதவியாளராக மாற்றுகிறார்கள். ப்ரூக் என்ற வயதானவர் காகத்தை செல்லப்பிராணியாக வளர்த்திக் கொண்டிருந்தவர் நாயகனை தன் உதவியாளனாக சேர்த்துக் கொள்கிறார். அங்கு உள்ள புத்தகங்கள் ரொம்ப குறைவாக இருக்கின்றன இன்னும் நிறைய புத்தகங்கள் வேண்டுமென்று தொடர்ந்து அரசாங்கத்திற்கு சிறை மேலதிகாரி மூலம் கடிதம் எழுதி அனுப்புகிறான். இந்நிலையில் விடுதலையாகி போன ஃப்ரூக் வெளியே சென்று என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கு முன் அவர் எழுதிய கடிதம் நாயகனுக்கு வர அவன் ப்ரூக் செய்து கொண்டது தவறு என்றும் நம்பிக்கை தான் வாழ்க்கை என்றும் நண்பன் ரெட்டிடம் கூறுகிறான். 

நாயகன் சிறைக்குள் இருந்துகொண்டே பலருக்கு படிப்பு சொல்லி கொடுத்து டிகிரி வாங்க வைக்கிறார். அப்படி ஒரு இளைஞன் அவனிடம் பாடம் படிக்க ஆரம்பித்து டிகிரி முடிக்க முயற்சி செய்கிறான். ஆனால் படிப்பு ஏறாத காரணத்தால் அவன் பறிச்சையை பாதிக்குமேல் எழுதாமல் வருத்தப்படுகிறான். அவன் ஒருமுறை நாயகனிடம் “நான் ஒரு பைத்தியக்கார கொலகாரன பாத்தேன்… அவன் ஒருநாள் கள்ளக்காதலனோட படுத்திருந்த பெண் ஒருத்தியை சுட்டுத்தள்ளியதாகவும் அந்தப் பழி அவன் புருசன் மீது விழுந்துருச்சு என்று சொன்னான்…” என்று சொன்னதும் நாயகன் கலங்குகிறான். வார்டனிடம் சென்று அந்தக் கொலைகாரனை பற்றி விசாரிக்க முயல வார்டனோ அவனை உதாசினப்படுத்தி துரத்தி வாரக் கணக்கில் இருட்டறையில் அடைக்கிறார். 

நாயகனுக்கு அந்த தகவலை சொன்ன கைதி வார்டனால் கொல்லப்படுகிறான். புத்திசாலித்தனமான நாயகனை தனக்கு கீழேயே வைத்து அவன் மூலமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது வார்டனின் ஆசையாக இருக்கிறது. அதனால் நாயகனை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு இருட்டறைக்குள் தள்ளுகிறான் வார்டன். ஒரு மாதம் இருட்டறை வாழ்க்கை முடிந்ததும் நாயகன் தன் நண்பன் ரெட்டிடம் விரக்தியாக பேசுகிறான். விடுதலை அடைந்தால் நான் சொல்லுற இடத்திற்கு சென்று நான் சொல்லுறத எனக்காக செய்யனும் என்கிறான். அவன் அன்று முழுக்க மனம் இறுகிப் போய் முகத்தை சோர்வாக வைத்திருக்க சுற்றி இருக்கும் நண்பர்கள் அவன் எதாவது தவறான முடிவை எடுத்துவிட போகிறான் என்று வருந்துகின்றனர். குறிப்பாக நண்பன் ரெட் அன்று இரவு முழுக்க தூங்காமல் தவிக்கிறான். அடுத்த நாள் விடியற் காலையில் அனைவரும் தங்கள் அறையிலிருந்து வெளியே வர நாயகன் அறை மட்டும் அமைதியாக இருக்கிறது. காவலாளிகள் அவன் அறைக்குச் சென்று பார்க்க அங்கு நாயகனை காணவில்லை. என்ன ஆனது எப்படி தப்பித்தான் என்பது புரியாமல் இருக்க அவனுடைய அறைக்குள் இருக்கும் சினிமா நாயகியின் போஸ்டரை கிழித்தால் தெரிகிறது பாதை. அந்த குட்டி சுத்தியலால் இருபது வருடங்களுக்குள் சுவரை துளைத்து சாக்கடை குழாயை உடைத்து முக்கால் கிலோமீட்டர் அந்த நாற்றம் பிடித்த குழாய்க்குள்ளயே பயணித்து வெளியேறுகிறான். முதல் வேளையாக பேங்கிற்கு சென்று தன்னுடைய அக்கௌண்டிலிற்கும் பணம் அனைத்தையும் எடுக்கிறான். சிறை வார்டன் செய்த ஊழல்களை பற்றிய டாக்குமென்ட்களை பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பிவிட்டு ஊரைவிட்டு கிளம்புகிறான் நாயகன். நண்பன் ரெட் ஆச்சர்யத்தில் மூழ்கிறான். ஊழல் செய்த வார்டனை தேடி வருமான வரித்துறையினர் வர வார்டன் தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்து போகிறார்.  

ரெட் சில நாட்களில் பரோலில் விடுதலை அடைகிறான். ப்ரூக் வாழ்ந்ததை போலவே ஒரு கடையில் வேலை பார்க்கிறான். நாயகன் சொன்னது நினைவுக்கு வர அந்த இடத்திற்குச் சென்று பார்க்கிறான் ரெட். அந்த இடத்தில் நாயகன் எங்கு வாழ்கிறான் என்பதற்கான அட்ரஸ்சும் பயணச் செலவுக்கான பணமும் இருக்கிறது. இருவரும் சந்தித்து கட்டிப்பிடிக்கிறார்கள். அதோடு படம் முடிகிறது. 

நம்பிக்கை தான் வாழ்க்கையே என்பதை அழுத்தமாக உணர்த்தும் இந்த இரண்டு படங்களை நாம் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும். இந்த ஊரடங்கு விடுமுறையில் இந்தப் படங்களை பாருங்கள். இந்த இரண்டு படங்களுமே தமிழ் டப்பிங்கில் கிடைக்கின்றன. பார்த்து முடித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் இந்தப் படத்தை கண்டிப்பாக காட்டுங்கள். 

 

Related Articles

முதலையை பிடித்த பிரதமர்! – கலாய்த்... மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பாரத பிரதமர் மோடி. நேற்று (ஆகஸ்ட் 13) அந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்ப பட்டது. அந்த நிகழ்ச்சியில் ...
மார்ச் மாதமே மண்டைய பிளக்கும் வெயிலா? &#... சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நூறு டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருக்கிறது. மார்ச் மாதமே இந்த நிலைமை என்றால் மே மாதங்களில் என்னென்ன பாடுபட போகிறோமோ? ...
பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் எல்லை ... ஜம்முவில் பாகிஸ்தான் படை வீரர்களின் குண்டுவீச்சு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு வீரர் மற்றும் பொதுமக்கள் ஐந்து பேர் உயிர் இழந்தனர். எல்லை பாதுகாப்பு கோட...
அண்ணாவின் ” வேலைக்காரி ” நாட... கதாபாத்திரங்கள் : வேதாசல முதலியார் - வட்டியூர் ஜமீன்தார் சரசா - வேதாசல முதலியாரின் மகள் மூர்த்தி - வேதாசல முதலியாரின் மகன் அமிர்தம்...

Be the first to comment on "“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்!"

Leave a comment

Your email address will not be published.


*