படிச்சு முடிச்சு வேலையில்லாமல் இருப்பவர்கள் பக்கோடா செய்ய கற்றுக்கொள்ளுங்கள்!

Image Credit: News18

வாராவாரம் எதாவது ஒரு அரசியல்வாதி எதாவது ஒன்றை உளறிக்கொட்டி நெட்டிசன்களிடம் வறுபடுவது வழக்கம். இந்த வாரம் சிக்கியிருப்பவர் அமித்ஷா.

வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதை விட பக்கோடா விற்பனை செய்வது மேல் என்று அமித்ஷா கருத்து தெரிவிக்க, பக்கோடா எப்படி தோன்றியது, பக்கோடாவில் எத்தனை வகை? பக்கோடா பயன் என்ன? என்று ஆராயத் தொடங்கிவிட்டார்கள். ஏனென்றால் இவர்கள் மாட்டு கோமியத்தை குடித்தால் கேன்சர் குணமாகும் என்று கூறியவர்களாயிற்றே என்பதால்.

எதிர்க்கட்சிகள் என்ன சொல்கிறது?

பக்கோடா விற்பது கேவலமான தொழிலா? பக்கோடா விற்று குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று தமிழிசையும் சுயவேலைவாய்ப்பு என்பது ஊக்கப்படுத்த வேண்டிய ஒன்று என்று ‘பக்கோடா விற்பது’ குறித்து அமைச்சர் ஜெயக்குமாரும் முட்டுக்குடுக்க, மாணவர்கள் பொறியியல் படித்தது பக்கோடா விற்கவா?பக்கோடா விற்கவும், தேநீர் விற்கவும் பிரதமரின் உதவி தேவையில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பதிலடி தந்துள்ளார். இன்னும் ஒரு சிலரோ விரைவில் பாரத ஜனதா கட்சியின் பக்கோடா பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று மோடி கலந்துகொள்ளும் நிகழ்விடங்களுக்கு வெளியே தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். பெங்களூர் பட்டதாரிகள் ஒரு கையில் பட்டத்தையும் மறுகையில் பக்கோடாவையும் வைத்துக்கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்?

தங்களுக்கே உரிய நக்கலான ஸ்டைலில் பக்கோடாஹே, பக்கோடா ஜனதா பார்ட்டி என்றும் ” போயிடாத எக்கேடா, செஞ்சு பழகு பக்கோடா “, ” வேலையில்லாம சும்மா இருக்குறவங்க பக்கோடா விக்கணும்னா சட்டுபுட்டுனு தமிழிசைக்கும் எச்.ராஜாவுக்கும் ஒரு கடைய போட்டுக்குடுங்க பாவத்த “,

” திரிமுந் பக்கோடா, ரிதிமுந் பக்கோடா ” என்று அந்நியன் பட வசனத்தையும், ” பக்கோடா வித்து பொழைங்கன்னு சொன்னிங்களே, அது முந்திரி பக்கோடாவா, முட்டைக்கோஸ் பக்கோடாவானு சொல்லவே இல்லையே அமைச்சரே! ” ” முந்திரி பக்கோடா இனிவரும் காலத்தில் ‘மந்திரி பக்கோடா’ ” என்று வந்தாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லை ” என்றும் #BakodaJanathaPart என்று டுவிட்டரில் ட்ரெண்டாக்கியும் வழக்கம்போல வச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி, இதற்குமுன் ஆட்சி செய்த காங்கிரஸ் நாட்டை நாசம் செய்துவிட்டு, எங்கள் மீது சேற்றை வாரி இரைக்கிறது. எவ்வளவு தான் சேற்றை வாரி இரைத்தாலும் தாமரை மலர்ந்தே தீரும் என்று ஆவேச உரையாற்றியுள்ளார். இதையடுத்து, மக்கள் உங்களிடம் “வேலைவாய்ப்பு”த் தான் எதிர்பார்க்கிறார்கள், ஆவேசமான உங்களுடைய பொய்ப்பேச்சை அல்ல என்று சோனியா காந்தி பதிலடி தந்துள்ளார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நம்ம அண்ணா யுனிவர்சிட்டி முதல் செமஸ்டர்ல 31% மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றிருக்காங்களாம். இத பார்த்தா உண்மையிலயே இன்ஜினியரிங் படிச்சவன் பக்கோடா விற்றுத்தான் பொழைக்கணும் போல. எதுக்கும் உஷாரா பக்கோடா செய்ய கற்றுக்கொள்ளுங்கள். விரைவில் தேசிய உணவாக அறிவித்தாலும் அறிவித்துவிடுவார்கள்.

 

Related Articles

கக்கனையும் காமராஜரையும் நாம தான் தேடி கண... " நான் எந்த கம்பெனியும் விலைக்கு வாங்கவும் வரல... அழிக்கவும் வரல... இன்னிக்கு என்ன நாள்... தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நாள்... நா என்னோட ஓட்டுப் போட...
செக்ஸ் எஜூக்கேசன் இன் இந்தியா! – ம... இந்தியாவில் சில காலங்களுக்கு முன்பு பெண்ணாக பிறந்துவிட்டால் உடனே எதாவது ஒரு கொலைக் கார கிழவி கள்ளிப் பால் ஊத்தி சாகடிக்கும். அதை அடுத்து கருவை ஸ்கேன் ...
இரா. பார்த்திபன் ஒரு பார்வை! – காந... இப்போது வரும் இளம் தலைமுறையினர் ஏதாவது ஒரு சின்ன விஷயத்தில் வெற்றி பெற்றுவிட்டாள், ஏதோ அவர்கள் பெரிய சாதனையை படைத்து விட்டது போல், உடனடியாக அடுத்தவர்க...
நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற உத்திரப... இந்த ஆண்டு நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற மாநிலமான உத்திரபிரதேசத்தைக் கண்டு வியக்காத ஆட்கள் இல்லை. " போயும் போயும் இந்த மாநிலம் எப்படிடா நீட் தேர்வு...

Be the first to comment on "படிச்சு முடிச்சு வேலையில்லாமல் இருப்பவர்கள் பக்கோடா செய்ய கற்றுக்கொள்ளுங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*