தளபதி விஜய்க்கு தந்தை மகன் என்று இரட்டை வேடம். தந்தை மதுரை மார்க்கெட்டில் கசாப்புக்கடை நடத்துகிறார். மகன் மைக்கேல் புட்பால் வீரராக இருக்கிறார்.
மைக்கேல் கதாபாத்திரம் பெண்களின் கால்பந்து பயிற்சியாளராக வருகிறது. இந்தக் கதாபாத்திரம் ஷாருக்கான் ஹாக்கி கோச்சாக நடித்த இந்திப் படத்தை தழுவி எடுக்கப் பட்டது.
ஸ்போர்ட்ஸ் கதை அதில் இருக்கின்ற பிகில் சத்தம் படத்தில் பல இடங்களில் விஜய் பிகில் ஊதுவார் என்பதால் விஜய் 63 படத்திற்கு ” பிகில் ” என்று பெயர் வைத்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். பிரபு தேவா இயக்கத்தில் வில்லு படத்தில் இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தார்கள். இப்போது அட்லி இயக்கத்தில் இருவரும் இரண்டாம் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இயக்குனர் அட்லி விஜய்யுடன் தொடர்ந்து பணியாற்றும் மூன்றாவது படம் பிகில்.
சிறந்த கதை சொல்லும் கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் நடித்துள்ளார். இந்தப் படத்துடன் விஜய் மற்றும் விவேக் இருவரும் 12 வது முறையாக இணைகிறார்கள்.
அதிரடி வில்லன் கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெரிப் நடித்துள்ளார். பரியேறும் பெருமாள் பட புகழ் கதிர் முதன்முறையாக விஜய்யுடன் நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்காக விஜய்க்கு கூடுதலாக ஒரு கோடி சம்பளம் வழங்கப்பட்டது என்று பேசிக் கொள்கிறார்கள்.
மெர்சலில் மருத்துவ துறை அரசியலைப் பேசியவர்கள் பிகில் படத்தில் விளையாட்டுத் துறை அரசியலைப் பேசி உள்ளார்கள்.
மெர்சலைப் போலவே இந்தப் படத்திலும் மத்திய மாநில அரசுகளின் எதிர்ப்பை சம்பாதிக்கும்படி நாட்டின் பிரச்சினைகளை வசனங்களாக எழுதி உள்ளார்கள்.
விளையாட்ட விளையாட்டா பாரு… இல்லனா என் விளையாட்ட பாப்ப போன்ற பன்ச் வசனங்கள் படத்தில் நிறைய உள்ளன.
இசைப்புயல் ரஹ்மான் இசையில் முதல் முறையாக விஜய் பாடியுள்ளார்.
ஆளப்போறான் தமிழன், ஒரு விரல் புரட்சி போன்ற அதிரடிப் பாடல்களைப் போலவே பிகில் படத்திலும் ஒரு அதிரடியான பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார். இந்தப் பாடலை தான் விஜய் பாடி உள்ளார் என்று செய்திகள் பரவுகிறது.
கல்பாத்தி அகோரமின் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் முதல் முறையாக விஜய் இணைந்துள்ளார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று கூறப் படுகிறது. இந்தப் படத்தின் மூலமாக விஜயை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் என்ற பெருமைக்கு உள்ளாகிறார் இயக்குனர் அட்லி.
Related Articles
பெண்களின் மார்பகங்கள் தமிழ் சினிமாவில் வ... தனக்கென பெரிய அளவில் ரசிகர் படை வைத்திருக்கும், குறிப்பாக பெண் ரசிகர்கள் வைத்திருக்கும் விஜய் அவர்களின் படங்களில், பெண்களின் மார்பகங்களை எப்படி எல்லாம...
முதன்முறையாக நடக்கும் பதினோறாம் வகுப்பு ... பல தனியார் பள்ளிகளில் பதினோறாம் வகுப்பு படிக்க வேண்டிய காலத்திலயே பண்ணிரண்டாம்
வகுப்பு பாடங்களை நடத்த தொடங்கிவிடுகிறார்கள். இதனால் மாணவர்கள் பண்ணிரெண...
நம்மோட திறமைகளை நாம காட்டிட்டே இருக்கணும... மலையாளத்தில் ஜி ஆர் இந்துகோபன் எழுதிய திருடன் மணியன் பிள்ளை என்ற புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எழுத்தாளர் குளச்சல் மு யூசுப். காலச்சுவடு பதிப...
பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள எ... கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி .எம்.சி), பெங்களுருவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை இன்று (திங்க...
Be the first to commenton "” பிகில் ” படம் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்!"
Be the first to comment on "” பிகில் ” படம் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்!"