சதுரங்க வேட்டைப் பட பாணியில் டெல்லி தொழிலதிபரை ஏமாற்றிய தந்தை மகன்

அறிவியல் ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் உலோக தகட்டை விற்க இருப்பதாகச் சொல்லி, டெல்லி தொழிலதிபரிடம் 1.43 கோடி வாங்கி ஏமாற்றிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.

 

ரைஸ் புல்லர்(Rice Puller) எனக் கூறி மோசடி

டெல்லி தொழிலதிபரிடம் அந்த உலோக தகட்டை ரைஸ் புல்லர் என்று சொல்லி ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மோசடியில் ஈடுபட்ட தந்தை மகன் இருவரும் மோட்டார் மெக்கானிக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் உருவாக்கிய அந்தப் போலி உலோக தகடு சிறப்பு இயற்பியல் பண்புகளை கொண்டிருப்பதாகவும், பரிசோதனையில் வெற்றி பெறும் பட்சத்தில், வானியல் ஆராய்ச்சி நிறுவனமான நாஸாவிடம் அந்த தகட்டை 37500 கோடிக்கு விற்கலாம் என்றும் தொழிலதிபரிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி இருக்கிறார்கள். பரிசோதனைக்காகச் சிறப்பு ரசாயனங்களும், தற்காப்புக்காக உடல் முழுவதும் மூடிக்கொள்ளும் ஹஸ்மாட்(Hazmat) உடுப்பும் வைத்திருந்திருக்கிறார்கள். வெளிநாட்டு விஞ்ஞானிகள் தங்களுக்கு கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

காவல்துறை கூட்டு ஆணையர் அலோக் குமார இது குறித்து பேசும் போது ‘ சோதனைகள் தொடர்ச்சியாக தள்ளிவைத்து வந்ததை அடுத்து சந்தேகம் அடைந்த தொழிலதிபர் காவல்துறையை அணுகினார். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.’

 

ரைஸ் புல்லிங் என்றால் என்ன?

மோசடியில் ஈடுபட்ட விரேந்தர் மோகன் பிரார், 56, மற்றும் அவரது 30 வயது மகன், நிதின் மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரசாயனங்கள், பாதுகாப்பு உடுப்பு மற்றும் உலோக தகடு போன்றவை கைப்பற்றப்பட்டன.

ரைஸ் புல்லர் இடியினால் சக்தி பெறுவதாக நம்பவைக்கப் படுகிறது. தொடர்ந்து பல இடி, மின்னல்களால் சக்தி பெற்ற ரைஸ் புல்லரை வீட்டில் வைத்திருக்கும் பட்சத்தில், அளப்பரிய செல்வம் சேரும் என்றும் நம்பவைக்கப் படுகிறது.

அரிசியில் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு இரும்பைக் கலந்து, ஏற்கனவே காந்தத்தால் ஆன ரைஸ் புல்லரை அருகில் வைக்கும் பொழுது, காந்த கொள்கைகளின்(Magnetic Principles) படி ரைஸ் புல்லர் அரிசியை தன் பக்கம் இழுக்கும். இதைவைத்து மோசடியில் ஈடுபடுவோர் மற்றவர்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் இதுபோன்ற உலோக தகட்டால் அறிவியல் ஆராய்ச்சிக்கு எந்தப் பயனும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

பணக்காரர்கள் கூடும் இடங்களில் ரைஸ் புல்லர்கள் பற்றிய கதைகளை சொல்லி அதன் மீது பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்குவார்கள் தந்தையும், மகனும்.  இதை நாசாவிற்கு விற்க வேண்டுமானால், முதலில் இந்த உலோக தகடு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்றும் நம்ப வைப்பார்கள். மலைகளைப் பரிசோதனைக்கு ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்து, நாசா விஞ்ஞானி போன்ற தோற்றத்தில் வருவார்கள். ஆனால் தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி பரிசோதனையை தள்ளிவைத்துக் கொண்டே வந்ததால் சந்தேகம் கொண்ட தொழிலதிபர் காவல்துறையை அணுகினார். இதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Related Articles

அஜித்திற்குப் ” பில்லா ” வைப... இருவரின் துரத்தலில் இருந்து தப்பித்து வருகிறார் கேகே. அவர் மீது பைக் ஒன்று மோத கேகே அடிபடுகிறார். மலேசிய போலீஸ் அவரை ஆஸ்பத்திரியில்  சேர்க்கிறார்கள். ...
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொர... நடிகர் நடிகைகள் : ரஜினி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, ராம்தாஸ், விஜய்சேதுபதி, சசி குமார், சிம்ரன், திரிஷா மற்றும் கார்த்திக் சுப்புராஜின் தோஸ்துக...
விஜய் சேதுபதியின் தயாரிப்பில் உருவாகியிர... நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் சேதுபதியின் தயாரிப்பில் ஆரஞ்சு மிட்டாய், ஜூங்கா படங்களைத் தொடர்ந்து  மூன்றாவதாக வெளியாக இருக்கும் திரைப்படம் மேற்குத...
உங்கள் ஊர் பேருந்து நிலையம் சுத்தமாக இரு... சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்தப் படத்தில் " ஒரு நாடு எப்படி இருக்குங்கறத ரோட வச்சே சொல்லிடலாம் "...

Be the first to comment on "சதுரங்க வேட்டைப் பட பாணியில் டெல்லி தொழிலதிபரை ஏமாற்றிய தந்தை மகன்"

Leave a comment

Your email address will not be published.


*