நீங்க சினிமாவில் கேமரா மேன் ஆக வேண்டுமா? இந்த அடிப்படை தகவல்கள தெரிஞ்சுக்கங்க…

Do you want to be a cinematographer in Film Industry

Technical Details

 1. Close up – காமிரா கிட்டத்தில் பார்ப்பது
 2. Close shot – கொஞ்சம் விலகிப் பார்ப்பது
 3. Two shot – இரண்டு தலைகள்
 4. Three Shot – மூன்று தலைகள்
 5. Medium close up – அடிக்கடி திரைக்கதைக்குப் பயன்படும் கோணம். இது கிட்டத்திலும் இல்லாமல் ரொம்ப தூரத்திலும் இல்லாமல் ஆரோக்கியமான தூரம்.
 6. Long shot – முழுமையான ஒரு செட்டையோ இயற்கைக் காட்சியையோ பார்ப்பது.
 7. Full shot – எல்லாக் கதாபாத்திரங்களையும் காமிரா பார்ப்பது
 8. Dolly Tracking shot – காமிரா நகர்வது. ( பெரும்பாலும் ஒரு கதாபாத்திரத்துடன் ).
 9. Dolly in – ஒரு பொருளையோ கதாபாத்திரத்தையோ நெருங்குவது.
 10. Point of view – ஒரு கதாபாத்திரன் கோணம்
 11. Reverse angle – முதலில் காமிரா வைத்ததற்கு நேர் எதிராக வைப்பது
 12. Pan – மெல்ல காமிராவால் காட்சியைப் பெருக்குவது
 13. Process shot – மற்ற படத்திலிருந்து ஒரு துண்டு
 14. Split screen – ஒரே பிரேமில் இரண்டு காமிராக்களில் இருந்து வரும் பிம்பம்.
 15. Zoom – லாங் ஷாட்டிலிருந்து க்ளோஸ் ஷாட்டுக்கு விரைவாகச் செல்வது
 16. Insert – உள்ளே செருகப்படும் க்ளோசப்
 17. Interior – உட்புறம்
 18. Exterior – வெளிப்புறம்
 19. Tight close shot – மிக நெருக்கமான ஷாட்
 20. Close shot – நெருக்கமான ஷாட்
 21. Close Mid shot – நெருக்கமான இடைநிலை ஷாட்
 22. Mid shot – இடைநிலை ஷாட்
 23. Mid long shot – தூரமான இடைநிலை ஷாட்
 24. Long shot – காட்சி நடக்கும் இடத்தைக் காட்டப் பயன்படும் தூரமான ஷாட்
 25. Extreme long shot – காட்சி நடக்கும் இடத்தைக் காட்டப் பயன்படும் முழுமையான மிகத் தூரமான ஷாட்
 26. Top angle shot – மேலிருந்து கீழ்நோக்கிய கேமரா கோணம்
 27. Low angle shot – கீழிருந்து மேல்நோக்கிய கேமரா கோணம்
 28. Trolly shot – இரு தண்டவாளங்கள் மீது பொருத்தப்பட்ட பலகையில் கேமராவை வைத்து நகர்த்தி படம் பிடிக்கும் முறை
 29. Round trolly shot – வட்ட வடிவ தண்டவாளத்தைப் பயன்படுத்தி படம் பிடிக்கும் முறை
 30. Crane shot – கேமராவை கிரேனில் பொருத்தி படம்பிடிக்கும் முறை
 31. Suggestion shot – எதிரெதிரே இருக்கும் இருவரில் ஒருவரது முகத்தையும் மற்றவரது முதுகையும் பார்த்த நிலையில் கேமரா இருக்கும் நிலை
 32. Intercuts – ஒரு காட்சியின் இடையிடையே இன்னொரு காட்சியைக் காட்டுவது
 33. Zoom Forward – கேமராவை நகர்த்தாமல் லென்ஸின் பரப்பை முன்னோக்கி நகர்த்துவது
 34. Zoom Back – கேமராவை நகர்த்தாமல் லென்ஸின் பரப்பை பின்னோக்கி நகர்த்துவது
 35. Tilt up – கேமராவை கீழிருந்து மேல்நோக்கி உயர்த்துதல்
 36. Tilt down – கேமராவை மேலிருந்து கீழ்நோக்கி இறக்குதல்
 37. Panning shot – கேமராவை வல இடமாக அல்லது இட வலமாக திருப்புதல்
 38. Stop Black shot – காட்சியிலிருந்து பொருளோ நபரோ திடீரென மறைவது
 39. Reverse shot – தலைகீழ் படப்பதிவு
 40. Silent shot – பின்னணி இசை மற்றும் வசனமற்ற ஷாட்
 41. Super imposing shot – ஒரு காட்சி படிமத்தின் மீது இன்னொரு படிமத்தை இணைத்துக் காட்டுதல்
 42. Montages shot – பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு
 43. Voice overlap – ஃபிரேமில் இல்லாதவரின் குரல் ஒலித்தல்
 44. Re – collection – முந்தைய காட்சிகளை நினைவு கூர்தல்
 45. Back drop – பின்புலம்
 46. Freez – பிம்பம் அசையாத தோற்றம்
 47. Arial view shot – மிக உயரத்திலிருந்து (உயரத்தில் பறக்கும் பறவையின் கோணத்திலிருந்து) செங்குத்தாக கீழ்நோக்கிய கோணம்.
 48. Flashcut – ஒரு காட்சியின் இடையில் ஏற்கனவே நடந்த காட்சியைக் காட்டுவது.
 49. Studycam shot – ஒளிப்பதிவாளர் உடம்பில் கேமராவைப் பொதித்துக்கொண்டு படமாக்கும் முறை.
 50. Dissolve shot – ஒரு காட்சிப் படிமம் மெல்ல மறைந்து இன்னொரு காட்சிப் படிமம் தோன்றுதல்.

இவை வெறும் அடிப்படை தகவல்கள் மட்டுமே. கேமிரா ஆங்கிள்கள் குறித்து எழுத்தாளர் வேடியப்பன் மற்றும் கேமரா மேன் சி. ராஜ் குமார் ஆகியோர் நிறைய புத்தகங்கள் எழுதி உள்ளனர். அவை அமேசானில் கிடைக்கின்றன. நிறைய தமிழ் திரைப்படங்களின் திரைக்கதை புத்தகங்கள் உள்ளன. அவற்றில் கேமரா ஆங்கிள்கள் பற்றி தெளிவான தகவல்கள் உள்ளன. பத்திரிக்கையாளர் மற்றும் வலைப்பேச்சு புகழ் ஜெ. பிஸ்மியின் கடைகளில் திரைக்கதை புத்தகங்கள் கிடைக்கின்றன. 

Related Articles

மெல்போர்னில் நடக்கவிருக்கிறது உலகக் கோப்... 2020 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டம் மெல்போர்ன் நகரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. போட்டிகள் நடை...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதி... தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது கட்சியான அதிமுக மூன்று அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்...
செந்தில்பாலாஜி vs செந்தில் நாதன் –... வருகிற மே 19ம் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு  கூட்டம் கூட்டுதல் பணப்பட்டுவாடா செய்தல் போன்ற பணி...
பத்திரிக்கை அல்லது மாத இதழை வெற்றிகரமாக ... வாசக எழுத்தாளர்கள் என்ற வார்த்தையை பெரும்பாலானோர் கேள்வி பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பெரும்பாலானோருக்கு பத்திரிகைகள், இதழ்கள் படிக்கும் பழக்கம்...

Be the first to comment on "நீங்க சினிமாவில் கேமரா மேன் ஆக வேண்டுமா? இந்த அடிப்படை தகவல்கள தெரிஞ்சுக்கங்க…"

Leave a comment

Your email address will not be published.


*