கொல்லிமலையில் விற்பனையாகும் வயாகரா கிழங்கு! – கொல்லிமலை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!

Some interesting information about Kolli Malai!

ராஜா திருவேங்கடம் எழுதிய கொல்லிமலை சித்தர்கள் புத்தகம் ஒரு பார்வை! 

 1. கொள்ளை அழகு கொல்லிமலை, 2. வல்வில் ஓரி, 3. அறப்பளீஸ்வரர் கோயில், 4. ஆகாய கங்கையும் மாசில்லா அருவியும், 5. காமப் பார்வை வீசும் கொல்லிப்பாவை, 6. மலை முழுங்கியும் தலை வணங்கியும், 7. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே… 8. சித்தர்களின் பூமி, 9. மருத்துவர்களும் ஞானிகளும், 10. கந்தங்களை ஆளும் சித்தர்கள், 11. பாம்பாட்டிச் சித்தர், 12. கோரக்க சித்தர், 13. அகத்திய சித்தர், 14. மச்சமுனி சித்தர், 15. நமசிவாய சித்தர், 16. அநாதி சித்தர், 17. சட்டைமுனி சித்தர், 18. இடைக்காடச் சித்தர், கடுவெளிச் சித்தர், 20. கல்லுளிச் சித்தர், 21. கொல்லிமலை மருத்துவங்கள், 22. தாம்பத்தியத்துக்கு உதவும் தண்ணீர் விட்டான் கிழங்கு, 23. ஐந்து கீரைகள்… அற்புத பலன்கள், 24. வியாதிக்கு என்ன மருந்து? 25. எப்படி போகலாம்? என்ற தலைப்புகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த தலைப்புகளின் கீழ் பல சுவாரஸ்யமான கதைகள், தகவல்கள் அடங்கி உள்ளன. புத்தகத்தின் விலை ரூ 75 மட்டுமே. 

கொல்லிமலை பற்றிய சில தகவல்கள் : 

 1. கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் நெருங்கிவந்து தொட்டுத் தழுவி முத்தமிடும் இடம் கொல்லிமலை. மனித உருவம் ஒன்று காலை நீட்டிப் படுத்திருப்பதைப் போல இருக்கிறது இந்த மலையின் அமைப்பு. வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் 72 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இந்த மலை கடல்மட்டத்திலிருந்து சுமார் 1300 மீட்டர் உயரத்தில் முழுவதும் மூலிகைகளால் நிரம்பி இருக்கிறது. இந்த மலை சதுரமாக காணப்படுவதால் சதுரகிரி என்றும் அழைக்கிறார்கள். 
 2. மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு போன்ற தமிழ் காப்பியங்களில் கொல்லிமலையைப் பற்றியக் குறிப்புகள் நிறையவே இருக்கின்றன. கொல்லிமலையில் பூத்துக் குலுங்கும் 165 வகையான பூக்களைப் பற்றி குறிஞ்சித் திணையில் கபிலர் வியந்து பாடி இருக்கிறார். 10ம் நூற்றாண்டில் கொல்லிமலையில் இருந்து தான் கற்களை யானை மீது ஏற்றி தஞ்சாவூருக்கு கொண்டுபோய் பெரிய கோயிலை கட்டியிருக்கிறார் ராஜராஜ சோழன். 
 3. ராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டதாக சொல்லப்படும் மதுவனம் என்ற மலைப்பிரதேசம் இந்தக் கொல்லிமலையாக இருக்ககூடும் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். 
 4. கொல்லிமலை மீது 275 குக்கிராமங்கள் இருக்கின்றன. 
 5. அரியூர், புலியஞ்சோலை, வாழவந்தி நாடு போன்ற இடங்களை அரசே ரிசர்வ் ஃபாரஸ்ட்டாக அறிவித்திருக்கிறது. இங்கெல்லாம் யானை, புலிகளின் நடமாட்டம் அதிகமாகவே இருக்குமாம். கருப்புக் கரடி, முயல், காட்டு நாய்கள், காட்டு எருமைகள் போன்றவற்றை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். 
 6. கொல்லிமலை பகுதிகளில் அன்னாசி, கொய்யா, மலை வாழை, பலா போன்ற பழ வகைகளும் காபி, மிளகு போன்ற பணப்பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கொல்லிமலைத் தேன் சுவை மிகுந்தது. இங்கு உள்ள வீடு தோறும் பலா மரம் தவறாமல் இருக்கிறது. கொல்லிமலை பலா பழத்தைப் பற்றி சங்க இலக்கிய பாடல்களிலயே பாடப்பட்டுள்ளன. 
 7. கி. பி 200ம் ஆண்டு கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிதான் ( ஓரி – ஒப்புமை அற்றவன் ) கொல்லிமலையை ஆண்ட வேந்தன். ஓரியின் மனைவி பெயர் வேண்மாள். இவர்களது மகள் பாவை. ஓரி இறந்த பிறகு மனைவி, மகள் இருவருமே உடன்கட்டை ஏறினார்களாம். ஓரியின் மகளான பாவையைத் தான் ‘ கொங்கலாயி அம்மன் ‘ என்ற பெயரில் கொல்லிமலைவாழ் மக்கள் தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். கடையேழு வள்ளல்களில் ஒருவரான காரியால் ஓரி கொல்லப்பட்டான். 
 8. கொல்லிமலை மக்களின் காவல் தெய்வம் அறப்பளீஸ்வரர். வளப்பூர் நாடு என்ற இடத்தில் தான் அறப்பளீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. இந்த இடத்தை தான் சதுரகிரி மலை என்று சொல்கிறார்கள். இந்த ஈஸ்வரனை ‘ இறந்த மீன்களுக்கே உயிர் கொடுத்த ஈஸ்வரன் ‘, என்று சொல்வார்கள். அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு ‘ மீன் கோயில் ‘ என்ற பெயரும் உண்டு. அறம் பள்ளிகொண்ட இடம் என்பதால் சிவனாருக்கு அறப்பளீஸ்வரர் எனும் திருநாமம். 
 9. அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு நேர் எதிரே கீழ் நோக்கி இறங்குகிறது படிகள். சுமார் 1000 படிகள் இறங்கினால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி இருக்கிறது. வல்வில் ஓரி கொல்லிமலையை ஆண்ட காலத்தில் ஆகாய கங்கையில் குளிப்பதற்காக தினமும் தனது படைபலத்தோடு வருவாராம். ஆகாய கங்கையில் குளித்தால் கங்கையில் புனித நீராடியதற்குச் சமம் என்று சொல்கிறார்கள். ஆடிப் பெருக்கு சமயங்களில் ஆகாய கங்கையில் நீராட கூட்டம் அலைமோதும். 
 10. அறப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் மாசில்லா அருவி உள்ளது. மாசு இல்லாத அருவி என்பதுதான் மாசில்லா அருவி என மாறி இருக்கிறது. 
 11. அறப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து வடக்கே நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கொல்லிப்பாவை கோயில். கொல்லிமலைக்கு அடிக்கடி வந்து தொந்தரவு தந்த அசுரர்களை ஒழிக்க ஈஸ்வரன் மாயன் என்ற தெய்வச் சிற்பியை அனுப்பி வைக்க அவர் உருவாக்கிய சிலை தான் காமப்பார்வை கொல்லிப்பாவை. கொல்லிப் பாவை என்கிற பெண் தெய்வம் இங்கே குடிகொண்டதால் தான் இந்த மலைக்கு கொல்லிமலை என்கிற பெயர் வந்ததாம். எட்டுக்கை அம்மன் என்று பெயர் கொண்ட இந்த தெய்வத்தை தென்னை ஓலை குடிசையில் வைத்து கொல்லிமலை மக்கள் இன்றும் வணங்கி வருகிறார்கள். 
 12. கொல்லிமலையில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் வீடுகளில் ‘ மலை முழுங்கி வேர் ‘ என்ற வேரை வீட்டுக்குள் வைத்து பூஜை செய்கிறார்கள். அதே போல தலை வணங்கி வேரும் உள்ளது. 
 13. செக்ஸ் உணர்வை தூண்டக் கூடிய ஆற்றல் கொண்ட தண்ணீர் விட்டான் கிழங்கு தற்போது வயாகரா கிழங்கு என்ற பெயரில் கொல்லிமலையில் கிடைக்கிறது. 

 

Related Articles

போலீஸ் துறையில் இருப்பவர்கள் எல்லாருமே ம...   சிவகார்த்திகேயனும் அப்பா சென்டிமென்டும்:  சிவகார்த்திகேயன் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்றால் யுவன் நா முத்துக்குமார் கூட்டணியில் உருவான தெய்வ...
பொறாந்தோமா நல்லதுக்காக நாலு பேர பொளந்தமா... பாசமான ஒரு நபரை இழத்தலும் அதற்கு வில்லனை சண்டியர் நாயகன் பழிவாங்குதலும் என்பதுதான் முத்தையா படங்களின் மையக்கதை.  தாய்ப்பாசம், மாமனார் பாசம், பாட்டி பா...
உலகிலயே மிகப்பெரிய செல்போன் ஃபேக்ட்ரியை ... உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உலகிலயே மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க இருக்கிறது சாம்சங் கம்பெனி.சாம்சங் நிறுவனத்தி...
கட் அவுட்களும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களு... ஊர் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை கவனித்துப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் பதினைந்து வயதில் இருந்து இருபத்தி ஐந்து வயதுக்கு...

Be the first to comment on "கொல்லிமலையில் விற்பனையாகும் வயாகரா கிழங்கு! – கொல்லிமலை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*