” கென்னடி கிளப் ” திரைப்படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!

Some interesting information about Kennedy Club movie
  1. வெண்ணிலா கபடி குழு படத்தை அடுத்து கபடியை கதைக்களமாக வைத்து சுசீந்திரன் இயக்கும் இரண்டாவது படம் கென்னடி கிளப்.
  2. இந்தப் படத்தின் மூலமாக சுசூந்திரனும் இயக்குனர் பாரதிராஜாவும் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றி உள்ளார்கள். இதற்கு முன் பாண்டிய நாடு படத்தில் இணைந்து பணியாற்றினார்கள்.
  3. கென்னடி கிளப் என்பது ஒட்டன்சத்திரம் எனும் ஊரில் உள்ள நிஜ கபடி குழுவின் பெயர். கென்னடி கிளப் படத்தில் கபடி வீராங்கனைகளாக நடித்தவர்கள் நிஜ கபடி வீராங்கனைகள்.
  4. செல்வம் என்ற நிஜ கபடி பயிற்சியாளரின் கதாபாத்திரத்தில் இயக்குனர் சசிகுமார் நடிக்கிறார். நல்லுசாமி (இயக்குனர் சுசீந்திரனின் அப்பா) என்ற நிஜ கபடி பயிற்சியாளரின் கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிக்கிறார்.
  5. இந்த படத்தில் வரும் கபடி மேட்சுகள் நிஜமாக நடத்தப்பட்ட கபடி மேட்சுகள். இதற்காக 12 கேமிராக்களை வைத்து படம் பிடித்திருக்கிறார்கள்.
  6. பெண்கள் கிரிக்கெட் பற்றி முதல் முறையாக கனா படம் பேசியது. பெண்கள் கால்பந்து போட்டியை பற்றி விஜய்யின் பிகில் படம் பேச இருக்கிறது. பெண்கள் கபடியை பற்றி கென்னடி கிளப் பேசுகிறது. பெண்கள் கபடியை முதன்முதலாக பேசும் படம் இது என்பது குறிப்பிடத் தக்கது.
  7. இதற்கு முன் பல முறை இணைந்த சுசூந்திரன் – டி இமான் கூட்டணி இந்தப் படத்திலும் தொடர்ந்து உள்ளது.
  8. சுசூந்திரன் இயக்கத்தில் வெளியான அழகர்சாமியின் குதிரை திரைப்படம் தேசிய விருது வென்றது. அதை தொடர்ந்து இந்தப் படத்திற்கு ( கென்னடி கிளப் ) தேசிய விருது எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாரதிராஜாவுக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
  9. ஆதலால் காதல் செய்வீர், வில் அம்பு படங்களை தொடர்ந்து கென்னடி கிளப் படத்தை தனது சொந்த ப்ரொடக்சன் நிறுவனமான நல்லுசாமி பிக்சர்ஸ் மூலமாக தயாரிக்கிறார் சுசூந்திரன்.
  10. கென்னடி கிளப் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாக இருக்கிறது.

 

Related Articles

பிரபஞ்சனின் மயிலிறகு குட்டி போட்டது புத்... புத்தகம் : மயிலிறகு குட்டி போட்டதுவகை : கட்டுரைத் தொடர் (புதிய தலைமுறை)ஆசிரியர் பற்றி...இயற்பெயர் : சாரங்கபாணி வைத்திலிங்கம்பிறந்த இடம...
4 years of எனக்குள் ஒருவன் – மார்ச... இயக்குனர் பிரசாத் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் என்ற ரீமேக் திரைப்படம் வெளியாகி இன்றோடு ( மார்ச் 6, 2015 ) நான்கு வர...
சன்னி லியோன் என்ன சாதி? – இந்தச் ச... அடப்பாவி... சன்னி லியோனோட சாதியாடா நமக்கு முக்கியம்... அவ ____ தாண்டா நமக்கு முக்கியம்... இப்படி பச்சையாக கமெண்ட் அடிக்கும் மக்கள் தான் இங்கு நிரம்பிக...
பாஜக ஆதரவாளர்களுக்கு எழுத்தாளர் இரா. முர... 37 எம்பியும் வேஸ்ட், தமிழகத்துக்கு வளர்ச்சித் திட்டங்கள் வராது என்று சங்கிகள் ரொம்பத்தான் கவலைப் பட்டுத் திட்டுகிறார்கள். திட்டிக் கொண்டே கவலைப் படுகி...

Be the first to comment on "” கென்னடி கிளப் ” திரைப்படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*