அமைதியான வாழ்வே ஆனந்த வாழ்வு. அமைதியான உள்ளமே மகிழ்ச்சிக் கடலின் எல்லை.
இன்பமும் துன்பமும் பணத்தை பொறுத்தவை அல்ல. மனதை சார்ந்தவை. பணமானது பசியைத் தான் போக்கும். துன்ப உணர்ச்சியைப் போக்காது.
அனுபவம் ஒரு கடுமையான வாத்தியார். அது சோதனையை தந்த பிறகுதான் பாடத்தைப் போதிக்கிறது.
சந்தர்ப்பம் வரும் என்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். தங்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களைத் தேடிப் பெறுபவர் தான் வாழ்வில் முன்னேற்றம் காண்கிறவர்கள்.
நல்ல ஒழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன்மதிப்பாகும்.
எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மணம் செய்து கொள்வது ஒரு பெண்ணின் கடமையாகும். அதை எவ்வளவு காலம் தள்ளி வைக்க இயலுமோ அவ்வளவு காலம் தள்ளி வைப்பது ஓர் ஆணின் கடமையாகும்.
அதிகமான பொருள்களைப் பெறுவதை வெட்கமானதாகக் கருதும் மனிதனே மரியாதைக்குரியவன் ஆகிவிடுகிறான்.
நூல் நிலையம் என்பது மனித வாழ்வில் ஒரு ஆடம்பரமன்று. அவசியமேயாகும். உழைப்பால் களைப்பு அடைகிறவர்களே இன்பம் அடைகிறார்கள்.
சிந்தனை என்பது நாம் விரும்பி மேற்கொள்ளும் கற்பனையே.
விருப்பமில்லாது திணிக்கப்படும் கல்வி வேண்டாத உணவு.
உயிர் உள்ள வரையில் உழைத்து சாக விரும்புகிறேன். உழைக்க உழைக்கத் தான் எனக்கு உயிர் வாழ விருப்பம் இருக்கிறது.
தன் சொந்த மொழியில் முழுத்திறன் பெறாத எவனும் மற்ற மொழியில் திறன் பெற முடியாது.
மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆனால் அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது.
நாம் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
உண்மையான அறிவின் வேலை நகைச்சுவையுடன் இணைந்ததே.
வாழ்க்கையில் வெறுப்பை வெளிப்படுத்த சிறந்த வழி அமைதியாயிருப்பதே.
அன்பு காட்டுவது அறிவை பெறுவது இரண்டிற்கும் வரைமுறை இல்லை. இரண்டும் எல்லையற்றவை.
Related Articles
ஆதித்ய வர்மா தமிழ் சமூகத்துக்கே கேடு! ... தயாரிப்பு : E4 என்டர்டெயின்மென்ட்தயாரிப்பாளர் : சுரேஷ் செல்வராஜன்இயக்கம் : கிரிஸ்சேய்யாகதை : சந்தீப் ரெட்டிஒளிப்பதிவு : ரவி கே சந்திரன...
“ஹோம் ஸ்கூலிங்” முறை சிறந்தத... பிள்ளையை படிக்க வைக்கணும், என்ன படிக்க வைக்கலாம்? எங்க படிக்க வைக்கலாம்? என்ற
கேள்விக்கு இந்த சமூகத்தில் சமச்சீர்ல, சிபிஎஸ்சி ஸ்கூல்ல, இன்டர்னேஷ்னல் ...
உடல் உறுப்பு மாற்றத்தில் தமிழக அரசு செய்... கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் உறுப்பு "தானத்தில்" தமிழக அரசு இந்திய அளவில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. அதற்காக மத்திய அரசின் விருதையும் கூட பெற...
விமான நிலையத்தில் உயர்தர வசதிகளை அறிமுகப... கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தின் சேவையை அடிக்கடி பயன்படுத்தும் பயணிகள், மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசல் காரணமாக அங்கு வந்து செல்லும் பயண அனுபவத்தை ...
Be the first to commenton "பெர்னாட்ஷா பொன்மொழிகள் ஒரு பார்வை!"
Be the first to comment on "பெர்னாட்ஷா பொன்மொழிகள் ஒரு பார்வை!"