ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவர்கள் இதை செய்வார்களா

Will they do it as per the request of the fans

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது புத்தர் கருத்து. அந்தக் கருத்திற்கு ஏற்றார்போல தமிழ் சினிமாவில் தங்களுக்குப் பிடித்த துறையில் கொடிகட்டி பறந்தவர்கள் எல்லாம் இன்று புதிய துறையில் வெற்றியை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் யார்யார் என்று பார்ப்போம். 

1.ஜீவி பிரகாஷ் குமார்

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவான வெயில் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜீவி பிரகாஷ் குமார். வெயில், அங்காடி தெரு, குசேலன், மதயானை கூட்டம், ஆடுகளம், பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், ராஜா ராணி என்று மிக குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்கள் மூலமாக நிறைய ஹிட் பாடல்களை தந்தவர் இசையமைப்பாளர் ஜீவி. விஜய் நடித்த தலைவா படம் இவருடைய 50வது படம். இப்படி இவருடைய இசைப் பயணம் நன்றாக போயிக் கொண்டிருக்க யாரோ இவர் மனதுக்குள் ஹீரோ ஆசையை விதைத்திருக்கிறார்கள். பென்சில் படத்தில் நடிகராக அறிமுகமானவர் தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, ப்ரூஸ் லீ, ஐங்கரன், 100% காதல் என்று இஷ்டத்துக்கு பல படங்களில் நடித்து தள்ளினார் ஜீவி. நாச்சியார், சர்வம் தாள மயம், சிகப்பு மஞ்சள் பச்சை ஆகிய மூன்று படங்களை தவிர மீதி அனைத்து படங்களுமே ஜீவிக்கு கெட்ட பெயரை தான் தந்தன. சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு ஜீவி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதன் காரணமாக நடிப்பிற்கு விடைகொடுத்து மீண்டும் இசைப்பயணத்தை முழு நேரமாக தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர். ஜீவி என்ன செய்வார்? அங்கிட்டு ஒரு கால் இங்கிட்டு ஒரு கால் என்றில்லாமல் இசையில் மட்டும் கவனம் செலுத்துவாரா? 

2.சந்தானம்

விஜய் டீவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் சந்தானம். சிம்புவின் மன்மதன் மூலமாக வெள்ளித் திரையில் காமெடியனாக அறிமுகம் ஆனவர். அதை தொடர்ந்து வல்லவன், பொல்லாதவன், பாஸ் என்ற பாஸ்கரன், ஓகே ஓகே, ராஜா ராணி, சிவா மனசுல சக்தி என்று பல படங்களில் காமெடியனாக பட்டாசு கிளப்பினார் சந்தானம். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென்று ஹீரோ அவதாரம் எடுத்துவிட்டார். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குத் துட்டு என்று மூன்று ஹிட் படங்கள் மட்டுமே தந்த ஹீரோ சந்தானத்தால் தொடர்ந்து ஜெயிக்க முடியவில்லை. இதனால் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஹீரோ சந்தானம் மீண்டும் பழைய சந்தானமாக வர வேண்டும். 

இவர்கள் இருவரும் ஹீரோ ஆசையால் வீணா போக, வடிவேலு, கருணாஸ், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அரசியல் ஆசையால் வீழ்ந்து கொண்டிருக்கின்றனர். நமக்கு அரசியல் வேணாம் தலைவா என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை இந்த நால்வரும் ஏற்பார்களா? 

Related Articles

கவிஞராக மாறிய மோடி! – கடல் குறித்த... சீன அதிபரின் வருகையால் பிரதமர் மோடி மாமல்லபுரம் செல்ல வேண்டி இருந்தது. கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டி இருந்தது. அந்த நிகழ்வின் புகைப் படங்கள்...
ஜீவாவின் கீ படம் எப்படி இருக்கு?... இயக்குனர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி உள்ள படம் கீ. பல மாதங்களுக்கு முன்பே ரிலீசாகி இருக்க வேண்டிய படம். தற்போது வெளியாக...
இந்தியாவில் நடப்பது சர்வதிகார ஆட்சி தான்... முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தை உண்மையிலயே ஆட்சி செய்பவர் எடப்பாடியைச் சார்ந்தவரா அல்லது குஜராத்தை சார்ந்தவரா என்பது தெர...
தனுசின் “அசுரன்” படம் பற்றிய... எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி எடுக்கப்படும் படம். வெற்றிமாறன் நாவலை தழுவி எடுக்கும் இரண்டாவது படம் இது. இதற்கு முன் லாக்கப் நாவலை தழ...

Be the first to comment on "ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவர்கள் இதை செய்வார்களா"

Leave a comment

Your email address will not be published.


*