” சுதந்திரம்கிறது மனுசங்களுக்கு மட்டும் அல்ல… எல்லா உயிர்களுக்கும் தான்… ” – அருவம் திரைவிமர்சனம்!

Aruvam movie review

தயாரிப்பு : டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன்

எழுத்து இயக்கம் : சாய் சேகர்

இசை : எஸ்எஸ் தமன்

ஒளிப்பதிவு : என் கே ஏகாம்பரம்

எடிட்டிங் : பிரவீன் கே எல்

சண்டை பயிற்சி : ஸ்டன்ட் சில்வா

நடிகர் நடிகைகள் : சித்தார்த், கேத்ரின் தெரசா, சதீஷ், காளி வெங்கட், ஆடுகளம் நரேன், 

கலப்பட உணவுகள் பற்றி பேசிய படங்களில் முக்கியமான படங்கள் என்றால் சூர்யாவின் மாற்றான், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களையும் கூறலாம். அந்த வரிசையில் இணைந்து உள்ளது சித்தார்த்தின் அருவம். இந்தப் படத்தின் டீசரும் ட்ரெய்லரும் ஸ்னீக்பீக் காட்சிகள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. ஒட்டுமொத்த படம் எப்படி இருக்கு என்பதை பார்ப்போம். 

படத்தின் ஆரம்ப காட்சிகள் இதுவும் பேய்ப் படமா என்ற சலிப்பைத் தருகின்றன. இது உண்மையிலயே பேய் படமா? அப்படியென்றால் அந்தப் பேய் நல்ல பேயா கெட்ட பேயா என்ற கேள்விகள் எல்லாம் கிளம்புகிறது. (அருவம் என்றால் உயிரற்றது, உருவமற்றது என்று அர்த்தம் என்பது படத்தை பார்த்த பிறகு புரிகிறது.)

விஜய் சாகர் பாடல் வரிகளில் ரோசினி பாடிய ஆகாயம் பாடல், விஜய் சாகர் பாடல் வரிகளில் யுவன் சங்கர் ராஜா பாடிய வீசிய விசிறி பாடல் என்று படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் உள்ளன. இரண்டு பாடல்களும் பெரிதாக மனம் கவரவில்லை. எஸ்எஸ் தமன் இசை என்றாலே எலக்ட்ரானிக் இசையாக காதை கிழிக்கும் என்ற பேச்சு உண்டு. ஆனால் இந்தப் படத்தில் அப்படி பேச வைக்கும்படி பாடல்கள் இல்லை. சுமார் என்று சொல்ல முடியாத ரகம். அதே சமயம்… இன்னும் சொல்லப் போனால் இந்தப் படத்தில் பாடல்களே தேவையில்லை. பின்னணி இசை ஸ்கெட்ச் படத்தை நினைவூட்டுகிறது, மகாமுனி போன்ற படத்தில் அருமையாக இசை போடும் தமன் ஏன் இந்தப் படத்தில் சொதப்பி உள்ளார் என்று தெரியவில்லை. 

பாய்ஸ், உதயம் என்ஹச் 4, எனக்குள் ஒருவன், ஜிகர்தண்டா, அவள், காவியத் தலைவன், சிகப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்களைப் போல இந்தப் படத்திலும் சித்தார்த்துடைய நடிப்பு பேசப்படும் என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றமே.. சுத்தத்தை விரும்பும் ஜெகன் கதாபாத்திரத்தில் சித்தார்த் ஓரளவுக்கு மட்டுமே நன்றாக நடித்துள்ளார். முதல் பாதியில் வெறும் இருபது நிமிடங்களுக்கு மட்டுமே வருகிறார் சித்தார்த். இரண்டாம் பாதியில் தான் இவருடைய நடிப்புத் திறமைக்கு ஓரளவுக்கு தீனி போடப் பட்டிருக்கிறது. கதை தேர்வில் கவனம் தேவை சித்தார்த்!. நாயகனுடன் கூடவே சுத்தும் காமெடி கதாபாத்திரத்தில் சொறிமுத்தாக நடித்துள்ளார் சதீஷ். வழக்கம் போல அவருடைய ஒன்லைன் காமெடி சிரிப்பை வரவழைக்கவில்லை. ராதாமோகன் பட புகழ் குமாரவேல் சித்தார்த்தின் நண்பனாக நடித்துள்ளார். தன் வேலையை சரியாக செய்துள்ளார். மெட்ராஸ் படத்திற்குப் பிறகு கேத்ரின் தெரசா ஓரளவுக்கு நல்ல படத்தில் நடித்துள்ளார் என்று எதிர்பார்த்தால் இதுவும் ஏமாற்றமாகவே உள்ளது. ஸ்மெல்லிங் சென்ஸ் இல்லாத ஜோதி டீச்சராக நடித்துள்ளார். கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரம் என்றாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது அவருடைய நடிப்பு. புடவையில் மிக அழகாக இருக்கிறார் கேத்ரின். ஆடுகளம் நரேன் நாயகியின் அப்பாவாக நடித்துள்ளார். தன்னுடைய வேலையை சரியாக செய்திருக்கிறார் நரேன். டேனியல் என்ற வில்லனாக நடித்தவர் பார்க்க செமயா இருந்தாலும் நடிப்பில் சுமாராகவே தெரிகிறார்.  இன்பர்மேசன் ஆர்டிஸ்ட்டாக காயத்ரி ரகுராம் நடித்துள்ளார், அவருடைய டப்பிங் குரல் சிரிப்பை வரவைக்கின்றன. ஸ்டன்ட் சில்வா வில்லனுக்கு கையாளாக நடித்துள்ளார். நடிப்பிலும் பெரிதாக கவரவில்லை. சண்டைக் காட்சிகளும் சுமாராக தான் இருக்கின்றன. சத்துணவு சந்தியா, முட்ட மூர்த்தி போன்ற கதாபாத்திரங்கள் மனதை கவர்கின்றன. 

கதை விவாதத்தில் நான்கு பேர் கலந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் காட்சிக்கு காட்சி புதுமையை காட்ட வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார்கள்., ஒரு சில இடங்களில் அவர்களின் எண்ணம் நிறைவேறி உள்ளது. அதே சமயம் ப்பா டேய் போதும்டா ரீல் அந்துப் போச்சு என்ற உணர்வையும் சில காட்சிகள் தருகின்றன. ஜோசியம் பார்க்கும் கூண்டுக் கிளிக்கு சுதந்திரதேவி எனப் பெயரிட்டது என இயக்குனர் ஆங்காங்கே கவனம் பெறுகிறார். 

” சுதந்திரம்கிறது மனுசங்களுக்கு மட்டும் அல்ல… எல்லா உயிர்களுக்கும் தான்… ” , ” தேவதைகள் முட்டாள்கள் னு… புக்ல படிச்சிருக்கேன்… இப்ப தான் நேர்ல பாக்குறேன்… “, ” சாவ பாத்து பயந்தவன் மாதிரி தெரியல… சாவடிக்க வந்தவன பாத்து பயந்தஜமாதிரி இருக்கு… “, ” வேலைக்காரன் மட்டும் உண்மையா இருந்தா பத்தாது முதலாளிங்களும் உண்மையா இருக்கனும் “, ” யூரியாவா பயிறுக்கே போட கூடாது… நீங்க வயிறுக்கு போடுறிங்களேடா… ” ” ஒருத்தன் செத்தா தான் பால் ஊத்துவாங்க… ஆனா நீங்க சாகடிக்கறதுக்குனே பால் ஊத்துருங்கிளேடா… ” , ” கலப்படம் இல்லாத உணவு என் கனவு ” கேன்சருங்கறது வியாதி அல்ல வியாபாரம்…”, ” தப்ப தட்டிக் கேட்க கூடாதுன்னு அஞ்சு லட்சம் தந்தாங்க… ” போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. அதே சமயம் சில வசனங்கள் படுமொக்கையாக கேட்டு பழகியதாக இருக்கின்றன. உச் கொட்ட வைக்கின்றன. ஒளிப்பதிவு ஓகே ரகம். எடிட்டிங் ஒரு சில இடங்களில் அமெச்சூர்டாக இருக்கிறது. நல்ல தகவலை சொல்ல வேண்டும் என்று முயன்று கதை அமைத்துள்ளார்கள். கதை ஓரளவுக்கு ஓகே ரகம் என்றாலும் திரைக்கதை படுசுமார். 

இந்தப் படத்திற்கு ஏன் U/A சர்டிபிகேட் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இதைவிட கொடூரமான படத்தை எல்லாம் U சர்டிபிகேட்டில் பார்த்து பழகிய நமக்கு இந்தப் படத்தின் சர்டிபிகேட் வியப்பை தருகிறது.  அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருப்பதால் ஒரு வாரத்திற்கும் மேல் எந்தப் படமும் ஓடுவதில்லை. அந்தக் காரணத்தினால் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க முடியாதவர்கள் ஹாட் ஸ்டாரிலோ விஜய் டிவியிலோ பார்த்துக் கொள்ளலாம். அதுவே போதுமானது. இன்னும் சுருக்கமாக சொன்னால் முதல் பாதி மொக்கை, இரண்டாம் பாதி சொதப்பலான டாக்குமென்ட்ரி! 

Related Articles

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து... தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. ...
ஆதித்ய வர்மா தமிழ் சமூகத்துக்கே கேடு! &#... தயாரிப்பு : E4 என்டர்டெயின்மென்ட்தயாரிப்பாளர் : சுரேஷ் செல்வராஜன்இயக்கம் : கிரிஸ்சேய்யாகதை : சந்தீப் ரெட்டிஒளிப்பதிவு : ரவி கே சந்திரன...
பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : ம... மத்திய பிரதேசத்தில் சிவாஜிராங் சிங் சௌஹானின் அமைச்சரவை 12 வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகளை இலக்கு வைக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வ...
ஜூலை18 – 5 years of வேலையில்லா பட்... * முதல் நாள் காலேஜ் வாசல்ல நின்னு அய்யா நாம இன்ஜினியர் ஆகப்போறங்கறது நினைச்சது என்னால மறக்கவே முடியாது... தம் அடிச்சேன் தண்ணி அடிச்சேன் கட் அடிச்சேன் ...

Be the first to comment on "” சுதந்திரம்கிறது மனுசங்களுக்கு மட்டும் அல்ல… எல்லா உயிர்களுக்கும் தான்… ” – அருவம் திரைவிமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*