அவர் சீக்கிரம் சாக வேண்டும் என்று நினைப்பது என்ன விதமான மனநிலை? மக்கள் ஏன் இப்படி கேவலமான மனநிலை உடையவர்களாக மாறினார்கள்?

dmk cheif dr.karunanidhi health condition

திராவிட முன்னேற்ற கழக தலைவர் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷியமே. கடந்த ஜூன் மாதம் தனது தொண்ணூற்று ஐந்தாவது பிறந்த நாளை கொண்டாடியவர் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பே நவீன நாற்காலியில் அமர்ந்துவிட்டதாலோ என்னவோ இந்தக் கட்டை எப்போது மண்டையப் போடும் என்ற கேவலமான மனநிலையுடன் அவரது இறப்பை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகம் இன்று விடுமுறை கிடையாது கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது வதந்தி என்று அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அந்த அளவுக்கு ஒருவரின் இறப்புக்காக ஏங்கிக் கிடக்கிறது இந்த சமூகம். வாட்சப்பில் ஏகப்பட்ட வதந்திகள். பேஸ்புக்கில் ஏகப்பட்ட கலாய் மீம்கள்.

நாம நல்லா இருக்கமோ இல்லையோ மத்தவன் நல்லா இருக்க கூடாது என்ற மனநிலை தான் இன்றைய மக்களிடம் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. அவ்வளவு ஏன் நம் நண்பன் அசிங்கப்படும் போது கஷ்டத்தில் வாடும் போது நம் மனம் உள்ளுக்குள் சிரிக்கிறது. ஆனால் வெளியே முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு வருந்துவது போல் நடிக்கிறோம். எவ்வளவு கீழ் தரமான செயல் இது. நாம நல்லா இருக்கணும் நம்மள மாதிரி நம்மள சுத்தி இருக்குறவங்களும் நல்லா இருக்கணும் என்ற எண்ணம் இங்கு எத்தனை பேரிடம் காணப்படுகிறது.

சொந்தக் காரன் ஒருவன்  சாதாரணமாக சாலையில் அடிபட்டால் ச்ச பெரிய விபத்தா இருந்திருக்க கூடாதா, ஸ்பாட்டிலயே செத்திருக்க கூடாதா, செத்து இருந்தால் நல்லா இருந்திருக்குமே என்று மனம் அடித்துக் கொள்கிறது. இன்று எலவு வீட்டிற்கு சிரித்துக் கொண்டு செல்பவரின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. ஆக மனிதாபிமானம் இல்லாத மனித உருவத்தில் இருக்கும் மிருகங்களாக நாம் மாறிவிட்டோம் என்பது தான் உண்மை.

எப்போது இந்த கட்டுமரம் சாவும், நமக்கு எப்போது பள்ளி, கல்லூரி விடுமுறை விடுவார்கள் என்று மாணவர்கள் ஏங்கிக் கிடக்கிறார்கள். அவர்களுடைய இந்த மனநிலை அப்படியே பெற்றோர்களின் மனநிலையை அல்லவா காட்டுகிறது. இந்த ஒட்டுமொத்த சமூகத்தின் மனநிலையை அல்லவா பிரதிபலிக்கிறது.

மாணவர்கள் தான் இப்படி என்றால் முப்பது வயதுக்குள் இருக்கும் ஐடி இளைஞர்கள் இளைஞிகளும் இதே போலவே இருக்கிறார்கள். ஆசிரியப் பெருமக்களும் இதே மனநிலையில் இருக்கிறார்கள்.

காவேரி மருத்துவமனைக்கு முன்பு குவிந்து கிடப்பவர்களில் எத்தனை பேர் உண்மையிலயே அவர் பூரண நலம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று காத்துக் கிடக்கின்றனர். வெகு சிலராகவே இருப்பார்கள். கூட்டத்தில் இருக்கும் அத்தனை மக்களும் இறப்பு செய்திக்காகவே காத்துக் கிடக்கின்றனர். குறிப்பாக ஊடகத் துறையினர் இந்த விஷியத்தில் படு கேவலமாக நடந்து கொள்கின்றனர். இப்போது செயல்படும் ஊடகத் துறையினரை நினைத்துப் பார்க்கும் போது கேப்டன் காரித் துப்பியதில் தவறே இல்லை என்பது புரிகிறது.

இன்னும் சொல்லப் போனால் வதந்திகளை கிளப்பி விடுவதே இந்த ஊடகங்கள் தான். ஒவ்வொரு நியூஸ் சேனலும் லைவ் அப்டேட்ஸ் கொடுக்கிறேன் என்று

இந்தாளு அப்படி என்ன செஞ்சாரு அலரு சாகக் கூடாதுன்னு நாங்க வேண்டிக்கறதுக்கு, பண்ணது எல்லாம் ஊழல், திருட்டுத் தனம், தன்னுடைய குடும்பத்துக்கு மட்டும் நல்லது பண்ணாரே தவிர, தன்னுடைய குடும்பத்துக்குன்னு ஏகப்பட்ட சொத்து சேத்து வச்சாரே தவிர ஓட்டுப் போட்ட மக்களுக்கு இந்தாளு அப்படி என்ன தான் செஞ்சாப்ல… என்று பலர் எதிர் வாதம் செய்து வருகிறார்கள் சமூக வலைதளங்களில். இந்த வாதம் தவறு. அவர் அரசியலைப் பொறுத்தவரை எப்படிப்பட்டவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர் தமிழுக்கு என்று செய்த நல்ல தொண்டுகள் இருக்கிறது. அதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் அவரு எதுவுமே செய்யல என்று ஒரே அடியாக மட்டம் தட்டுவது தவறான செயல். இந்த மனநிலையுடன் வரும் மீம்ஸ்களை தயவு செய்து ஆதரிக்காதீர்கள். உங்களைப் பார்த்து இன்னொரு சமூகம் வளர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. நீங்கள் மரணப் படுக்கையில் இருக்கும் போது, ஊர்ல எல்லோரும் நீ எப்ப சாவின்னு காத்துக்கிட்டு இருக்காங்க என்று உங்களிடம் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும். நமக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி என்ற மனநிலையில் வெளியே வாருங்கள்.

Related Articles

சர்வதேச அளவில் செயல்பட்டு வந்த ஆபாச இணைய... இந்த தலைப்பை பார்த்ததும் எத்தனை பேர் பிரேசர்ஸ், பார்ன்ஹப், எக்ஸ்என்எஸ்எஸ், எக்ஸ்வீடியோஸ் பக்கங்களுக்கு விரைந்தீர்கள் என்பது தெரியவில்லை. ஆனால் சர்வதே...
பாக்யராஜின் நேர்மையை பாராட்டும் ரசிகர்கள... சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் என்ற அறிவிப்பு வந்த நாளில் இருந்தே இந்தப் படம் பற்றி பலவாறு பேச்சு அடிபட்டது. ...
வதந்திகள் பரவாமல் இருக்க சில புதிய கட்டு... ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நண்பர்கள் தினமாம். ஆனால் நேற்று யாரோ ஒருவர் வாட்சப்பில் நண்பர்கள் தினம் வாழ்த்துக் கூற, மக்களும் நேற்று தான் உலக நண்பர்கள் தினம் ப...
ஐஎஸஐஸ் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்ட 39... 2014 ஆம் ஆண்டு இராக்கில் காணாமல் போன 39 இந்தியர்களை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக முன்னாள் இராணுவ தளபதிக்கும், மத்திய அமைச்சர் ஜெனரல் விகே சிங்கு...

Be the first to comment on "அவர் சீக்கிரம் சாக வேண்டும் என்று நினைப்பது என்ன விதமான மனநிலை? மக்கள் ஏன் இப்படி கேவலமான மனநிலை உடையவர்களாக மாறினார்கள்?"

Leave a comment

Your email address will not be published.


*