காகிதம் சேர்ப்பவரின் மகன் மருத்துவ படிப்பிற்கான எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் வெற்றி!

Winner-at-AIIMS-Examination---Ashram-Chowdhury

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ளது விஜய்கஞ்ச் மண்டி. இப்பகுதியில் உள்ள குப்பைகளைச் சேகரித்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர் ரஞ்சித் மற்றும் மம்தா. இவருக்குப் பிறந்த அஷ்ராம் சவுத்ரி என்ற இருபது வயது மகன் குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் பொறுப்புடன் படித்து எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்.

கடந்த மே மாதம் நடந்த எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ரிசல்ட்டில் இவர் அகில இந்திய அளவில் 707 வது ரேங்க்கும் ஓபிசி பிரிவில் 141 வது இடத்தையும் பிடித்து இருக்கிறார். அதே போல நீட் தேர்வும் எழுதி இருக்கிறார். நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 2763 வது ரேங்க்கும் ஓபிசி பிரிவில் 803 வது ரேங்க்கும் பெற்று இருக்கிறார்.

இப்போது ஜோத்பூர் மருத்துவ கல்லூரியில் இவருக்கு இடம் கிடைத்து இருக்கிறது. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் போது ஒரு முறை உடல்நிலை சரி இல்லை என்று தன் அப்பாவுடன் மருத்துவமனைக்குச் சென்று இருக்கிறார். அப்போது மருத்துவர் மருந்துகளை எழுதிக் கொடுத்து சில நிமிடங்களில் ஐம்பது ரூபாய் சம்பாதித்ததும் தன்னுடைய அப்பா நாள் முழுக்க சம்பாதித்தும் ஐம்பது ரூபாய் சேர்க்க முடியாமல் தவித்ததும் அவரை மிகவும் பாதித்து இருக்கிறது. அப்போது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு கண்டவர் இன்று தன் கனவை நிறைவேற்றி இருக்கிறார்.

ரியல் ஹீரோ!

Related Articles

கொள்ளையடிக்கும் போட்டித்தேர்வு பயிற்சி ம... தமிழகத்தில் பால்வாடி முதல் பட்டப்படிப்பு வரை அத்தனையும்  வியாபாரம் தான். பஸ் கண்டக்டர் டிக்கெட்டை தருவது போல பணத்தை வாங்கிக்கொண்டு சர்வ சாதாரணமாக டிகி...
சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் ரம்யாகிர... முதலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவை உணர்வைப் பற்றிப் பார்க்கலாம்.  தன்னுடைய சினிமா பயணத்தின் ஆரம்ப காலத்தில் சரியான வெற்றிப்படங்கள் அமைய...
ஆண்ட்ரியா – அதிகம் கொண்டாடப்பட வேண... ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் வக்கீல் அப்பாவிற்கு மகளாக பிறந்தவர் ஆண்ட்ரியா. ஏ. ஆர் ரகுமான் இசையில் உருவான ஒரு காபி விளம்பரத்தில் தமிழ் பட சிவாவுடன் ...
தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடா? அவர... ஆன்மீகத்தில் உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கிறதா? இவர் எழுதிய புத்தகத்தை படியுங்கள்! ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண...

Be the first to comment on "காகிதம் சேர்ப்பவரின் மகன் மருத்துவ படிப்பிற்கான எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் வெற்றி!"

Leave a comment

Your email address will not be published.


*