கரூரில் பிகில் படம் ரிலீஸ் ஆகாது! – தியேட்டர் அதிபர்கள் அதிரடி முடிவு!

Bigil movie will not be released in karur - Theater owners Action Decision!

கல்பாத்தி எஸ் அகோரமின் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் பிகில். நயன்தாரா, ஏ ஆர் ரகுமான் என்ற பெரிய நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் இணைந்து உள்ளனர். இந்தப் படம் வருகிற அக்டோபர் 25ம் தேதியன்று தீபாவளி கொண்டாட்ட படமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீசாகாது என்ற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத் தக்கது. 

கரூரில் அஜந்தா, எல்லோரா, திண்ணப்பா, அமுதா, பொன் அமுதா, கலையரங்கம், கவிதாலயா  என்று ஏழு ஏசி தியேட்டர்களும் வெற்றி, லட்சுமிராம் என்று இரண்டு சாதாரண தியேட்டர்களும் உள்ளன. இதில் அமுதா, கவிதாலயா போன்ற தியேட்டர்கள் திருட்டு விசிடி கேசில் சிக்கி உள்ளன. அதை தொடர்ந்து மிகுந்த கெடுபிடியுடன் நடந்துகொள்கின்றனர் தியேட்டர்  அதிபர்கள். 

கடந்த சில வருடங்களாக இந்த தியேட்டர் அதிபர்கள் அனைவரும் ஒரே குழுவாக இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ண வேண்டும் என்றால் கூட book my show, ticket new போன்ற வெப்சைட்டுகள் உபயோகப் படுத்துவதில்லை. WWW.Karur cinemas.com என்ற தனியான வெப்சைட் தான் நடைமுறையில் இருந்து வருகிறது. அதே போல எந்த எந்த படத்தை யார் யார் தியேட்டரில் ஓட்டுவது என்ற விதிமுறையையும் அவர்கள் தங்களுக்குள் வகுத்துள்ளனர். 

ரஜினி படம் என்றால் கண்டிப்பாக கலையரங்கம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும். ஹாலிவுட் படம் என்றால் பொன் அமுதா தியேட்டரில் ரிலீஸ் ஆகும். தனுஷ் படம் என்றால் கண்டிப்பாக திண்ணப்பா தியேட்டரில் ரிலீஸ் ஆகும். ஆனால் இவை எல்லாம் சரியான நியாயமான விலைக்கு படத் தயாரிப்பு நிறுவனம் தியேட்டர் ரைட்ஸ் கொடுத்தால் மட்டுமே நடக்கும். கொஞ்சம் அதிகமான தொகை என்றால் அவை கரூரில் உள்ள எந்த ஏசி தியேட்டரிலும் ரிலீஸ் ஆகாது. 

கடந்த சில வருடங்களுக்கு  முன் வெளியான எந்திரன் படத்தை முன்னுதரணாமாக சொல்லலாம். எந்திரன் படத்தை தயாரித்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அவர்களோ தியேட்டரிக்கள் ரைட்ஸை ஓவர் விலைக்கு விற்க கரூர் தியேட்டர் அதிபர்கள் ஒரே முடிவாக அதிக விலைக்கு நாங்கள் படத்தை திரையிடப் போவதில்லை என எந்திரன் படத்தை நிராகரித்தனர். அதனால் வெற்றி தியேட்டர் என்ற சாதாரண பழைய தியேட்டரில் எந்திரன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டியிருந்தது. ஆக எந்திரன் படத்திற்கு கரூரில் அப்போது வரவேற்பு இல்லை. அதே நிலைமை இப்போது பிகில் படத்திற்கும் வந்துள்ளது. பிகில் பட தயாரிப்பு நிறுவனமோ தியேட்டர் ரைட்ஸை ஓவர் விலைக்கு விற்க கரூர் தியேட்டர் அதிபர்கள் படத்தை வாங்க மறுத்துள்ளனர். எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் எப்போதும் 110 ரூபாய் என்ற ஒரே விலையில் டிக்கெட் விற்கும் தியேட்டர் அதிபர்கள் பிகில் படத்தை வாங்க மறுத்தது நியாயமான செயல் என்றாலும் கரூரில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றமே. 

கடந்த வருடம் வெளியான சர்கார் திரைப்படம் பல மாவட்டங்களில் மிகச் சாதாரண தியேட்டர்களில் கூட 1000 ரூபாய், 500 ரூபாய் என டிக்கெட் விற்பனை நடந்தது. கரூர் அருகே உள்ள பரமத்தி வேலூரில் அபிராமி, கணேசா, சிவா என்று மூன்று தியேட்டர்கள் உள்ளன. அதில் சிவா தியேட்டர்  இந்த ஆண்டு தான் புதுப்பிக்கப்பட்டு ஏசி தியேட்டராக மாறி உள்ளது. கடந்த ஆண்டு சர்கார் வெளியான போது அபிராமி, கணேசா இந்த இரண்டு தியேட்டர்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன. இரண்டுமே மொக்கை தியேட்டர் என்றாலும் சர்கார் படத்திற்கு 350 ரூபாய், 250 ரூபாய் என்ற பெரிய விலையில் ஒரு டிக்கெட் விற்கப் பட்டது. இந்த ஆண்டு பிகில் படத்தின் டிக்கெட் விலை நியாயமாக இருக்குமா என்ற வினா இப்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. திரையில் நியாயம் தர்மம் பேசும் விஜய் நிஜத்தில் தன் படத்திற்கு நேரும் இந்த பித்தலாட்ட விற்பனையை இந்த ஆண்டாவது கண்டு கொள்வாரா? 

100 கோடி வசூல் : 

தமிழ் சினிமாவில் நூறு கோடி வசூல் என்ற விஷயத்தை உருவாக்கியது ரஜினியின் எந்திரன் படமே. அதை தொடர்ந்து துப்பாக்கி படம் அந்த வரிசையில் இணைந்தது. இப்போது எந்த படமாக இருந்தாலும் 100 கோடி வசூல் என்று சொல்லிக் கொண்டு பெருமை பீத்துவதை டிரெண்டாக வைத்துள்ளது. இதற்காக டிக்கெட் விலையை அதிகமாக்கி ரசிகர்களின் தலையில் மிளகாய் அரைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது சில தயாரிப்பு நிறுவனம் மற்றும் சில நடிகர்களின் வியாபார தந்திரம். கபாலி படத்தின் டிக்கெட்டுகள் 1000 ரூபாய், 2000 ரூபாய் என விற்பனை ஆனது. இதுகுறித்து ரஜினியிடம் தகவல் போக அடுத்தடுத்த படங்களின் டிக்கெட் விலை நியாயமாக விற்கப் பட்டது. அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லும் விஜய் தனது படத்தின் டிக்கெட் விலை குறித்து அறிக்கை ஏதேனும் விடுவாரா… 

Related Articles

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் ... தமிழகத்தில் கல்வி என்ன நிலைமையில் இருக்கிறது என்றும் அரசுப்பள்ளிகள் எப்படி இருக்கிறது என்றும் அரசுப்பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் எப்படி இயங்கி வருகிறார்க...
குழந்தைகளிடம் கேள்வி கேட்ட சிவகார்த்திகே... பசுமரத்தாணி போல என்பதற்கேற்ப ஒரு குழந்தை அதன் பத்து வயதிற்குள் என்ன என்ன பழக்கங்களை கற்றுக்கொள்கிறது? என்ன மாதிரியான சம்பங்களை பார்க்கிறது? என்ன மாதிர...
இந்த சமூகம் எதை கற்றுக்கொடுக்கிறது? நாமெ... மாரடைப்பு, சாலை விபத்து, தற்கொலை இந்த மூன்றும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் அதீத மன உளைச்சல். இப்படி மன உளைச்...
முலாம்பழம் ஜூஸ் குடிப்பதன் பலன்கள்!... கோடை காலம் தொடங்கி மண்டபத்திரம் மக்களே என்று நம்மை வாட்டி வதைத்து எடுக்கிறது. இந்த சூழலை சமாளிக்க சாலை ஓரங்களில் அமைக்கப் பட்டிருக்கும் சிறு சிறு கடைக...

Be the first to comment on "கரூரில் பிகில் படம் ரிலீஸ் ஆகாது! – தியேட்டர் அதிபர்கள் அதிரடி முடிவு!"

Leave a comment

Your email address will not be published.


*