செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிறது என்பது மட்டுமல்ல இன்று சிட்டுக்குருவிகள் தினம் என்பது கூட புரூடா தான்!

Sparrows are getting extinct due to cell phone towers but we are celebrating Sparrow day

கடந்த சில வருடங்களாக மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  செல்போன் டவர்கள் ஊரெங்கும் முளைக்கத் தொடங்கிய காலத்தில் செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் இனத்திற்கு அழிவு ஏற்படும். செல்போன் டவரிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்க உறுப்பை நேரடியாகப் பாதித்து அதன் இனத்தையே அழிக்க வல்லது என்று பொய்யான செய்தியை பரப்பி வந்தனர். அதே போல தான் இன்று கொண்டாடப்பட்டு  வரும் சிட்டுக்குருவிகள் தினமும்.

மார்ச் 20 ம் தேதியை சிட்டுக்குருவிகள் தினம் என்பதுமே புரூடா தான். மார்ச் 20ம் தேதியை எந்த அமைப்பும்  சிட்டுக்குருவிகள் நாள் என்று அதிகார பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் இந்த நாளை சிட்டுக்குருவிகள் தினம் என்று கொண்டாடப்பட்டு வருவதற்கு முக்கிய காரணம் முகமது திலாவர் என்ற பறவை ஆர்வலர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்தவர் முகமது திலாவர். செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிறது என்ற தகவல்கள் பரவியதற்கு முக்கிய காரணம் இவர் தான். இவரது பிறந்த நாளையை சிட்டுக்குருவிகள் தினமாக கடந்த 2010ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் கூறிய செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் பாதிக்கப்படுகிறது என்ற தகவல் அறிவியல் பூர்வமாக உண்மையில்லை என்றாலும் சிட்டுக்குருவிகள் மீது அவர் கொண்டிருந்த காதல் அலாதியானது.

பறவைகளை நேசியுங்கள்

வீட்டுமனைகள் பல்கிப் பெருகி வருவதால் பறவைகளின் நிலைமை கவலைக்குரியதாக மாறி இருக்கிறது. குறிப்பாக நமது தேசிய பறவை மயிலின் நிலைமையோ சொல்லி மாளாது. தனது குஞ்சுகளிடன் சாலைகளில் சுற்றித்திரிக்கிறது. இதைவிட கொடுமை டெல்லியின் மாநிலப் பறவை சிட்டுக்குருவி. அதே டெல்லி காற்று மாசுபாட்டில் முதலிடம் வகிப்பது. கோடை தொடங்கிவிட்டது. இனி உங்கள் வீடுகளில் தானியங்களையும் தண்ணீரையும் வைத்து அவற்றை பாதுகாக்க முற்படுங்கள்.

Related Articles

கடன் மீட்பு முகவர்களால் டிராக்டர் ஏற்றிக... ஐந்து லட்சம் கடன் தொகைக்காக விவசாயி ஒருவரை டிராக்டர் ஏற்றிக் கொன்ற விவகாரம் உத்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடன் மீட்பு முகவர்க...
ரசிகர்களின் மனதை கவர்ந்த அருண்விஜய்யின் ... இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் மார்ச் 1ம் தேதி வெளியாக இருக்கும் படம் தடம்.தற்போது அந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி ...
பெண்கள் அரசியலுக்கு வர தயங்குவது ஏன்? அர... பிரதீபா பாட்டில், சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, செல்வி ஜெ ஜெயலலிதா, தமிழிசை சவுந்தரராஜன், நிர்மலா சீதாராமன், ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் என்று தற்...
இந்திய அளவில் சிறந்த நிர்வாகம் செய்வதில்... சாமுவேல் பால் என்ற பிரபல பொருளாதார நிபுணர் பப்ளிக் அப்பேர்ஸ் சென்டர் என்ற மையத்தை 1994ல் தொடங்கினார். நாட்டில் சிறந்த நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பத...

Be the first to comment on "செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிறது என்பது மட்டுமல்ல இன்று சிட்டுக்குருவிகள் தினம் என்பது கூட புரூடா தான்!"

Leave a comment

Your email address will not be published.


*