பிரெய்லி வடிவ புத்தகமாகத் திருக்குறள் வெளிவந்தால் 250 மில்லியன் பார்வையற்றோர் பயனடைவார்கள்!

Thirukkural to be in Braille form book, 250 million blind people will be benefited

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ராம்குமார் என்ற பார்வையற்ற வக்கீல் திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பிரெய்லி வடிவில் வெளியிட வேண்டுமென்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

உலகின் மிகத்தொன்மையான நூல் திருக்குறள். உலக அளவில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது திருக்குறள். இது வரை 107 க்கும் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஆனால் பார்வையற்றோர் படிக்கும் வகையில் பிரெய்லி வடிவில் இதுவரை எந்த மொழியிலும் திருக்குறள் புத்தகம் வெளிவரவில்லை. இதனால் உலகம் முழுக்க உள்ள 250 மில்லியன்  பார்வையற்றோர் மற்றவர் துணையின்றி திருக்குறளை படிக்க முடியாத சூழலில் உள்ளனர்.

இதையடுத்து, ராம்குமார் தொடர்ந்த வழக்கில், ” திருக்குறளை பிரெய்லி வடிவமைப்பில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் புத்தகமாக வெளியிட்டால் உலகம் முழுக்க 250 மில்லியன் பார்வையற்றோர் பயனடைவார்கள். கல்வி உரிமைச் சட்டபடி பார்வையற்றோரும் திருக்குறளை கற்றறிந்து பயனடையும் வகையில் பிரெய்லி புத்தகம் வெளியிடுவது அதிகாரிகளின் கடமை, ஆனால் அவர்களோ இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் நீதிமன்றம் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்  ” எனக் குறிப்பிட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் எம். சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் தமிழ் மொழி மற்றும் கலாச்சார துறை முதன்மைச் செயலர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர், தமிழ்நாடு பார்வையற்றோர் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் உள்ளிட்டோருக்குப் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 13க்குத் தள்ளிவைத்தனர்.

Related Articles

சட்டக்கல்லூரியில் படித்து டாக்டர் ஆகணும்... Pariyerum Perumal (2018) - IMDB Rating - 9.6/10 எல்லா ஊரிலும் கூட்டம் அதிகம் கூடாத ஒரு தியேட்டர் இருக்கும். காரணம் அந்த தியேட்டர்களில் மட்டும் தான் ந...
பெருமாள் முருகன் எழுதிய பீக்கதைகள் சிறுக... வேக்காடு, பீ வாங்கியின் ஓலம், பீ, கடைசி இருக்கை, கருப்பணார் கிணறு, அத்தை வீட்டுக் கோடை, தோழர் பிஎம்மின் வெற்றி, வராக அவதாரம், கருதாம்பாளை, சந்தனச் சோப...
குழந்தை பெற்றுக்கொள்வதை திட்டமிட்டு தள்ள... முதலில் திட்டமிடுதல் சரியா? என்ற கேள்விகள் இல்லாமல் மனிதன் சுதந்திரமாய் வாழ்ந்தான். பிறகு உணவு சமைப்பது, சேமிப்பது தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாகத் திட்டமிட...
ரொட்டி சாப்பிட்டுருப்பீங்க, ரோபோ கையால ச... இந்தியாவிலேயே முதல் முறையாக ரோபோக்களை கொண்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் வகையில் ஒரு உணவகம் வடிவகைப்பட்டுள்ளது. மொமொ (Momo) என்று பெயரிடப்பட்டுள்...

Be the first to comment on "பிரெய்லி வடிவ புத்தகமாகத் திருக்குறள் வெளிவந்தால் 250 மில்லியன் பார்வையற்றோர் பயனடைவார்கள்!"

Leave a comment

Your email address will not be published.

*