வெண்ணிலா கபடி குழு, ஜீவா படங்களை மிஞ்சியதா கென்னடி கிளப்? – கென்னடி கிளப் விமர்சனம்!

Kennedy Club movie review

கபடி உருவான கதையில் ஜல்லிக்கட்டுக்காக உருவான கபடி, 32 நாடுகளில் விளையாடாப்படும் கபடி பற்றி தகவல்கள் சொல்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் தகவல்கள் சுருக்கமாக ஷார்ப்பாக இருக்கிறது. கதை திண்டுக்கல்லில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் நடக்கிறது. ஒட்டன்சத்திரம், நெய்க்காரன் பட்டி, என்ற ஊர்களை கேட்கும் போது வெண்ணிலா கபடி குழு நினைவுக்கு வருகிறது. அதே சமயம் சசிகுமாரின் கதை சொல்லலில் நகர்கிறது படம். அவர் விவரிக்கும் விதம் ஏனோ தானோ என்று இருப்பதால் ரசிகர்களுக்கு திரையின் மீதான ஈர்ப்பு குறைகிறது. 

நிஜ கபடி வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் அறிமுகம் மனதை கவர்கிறது. ஆண் அடக்கனும் பெண் அடங்கனும் எழுதி வச்சது யாரு என்ற அறிமுகப் பாடலுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. விசில் சத்தமும் இமானியின் பின்னணி இசையும் உடலை சிலிர்க்க வைக்கிறது. உன்னாலே உன்னாலே முடியாது என்றால் என்ற பாடலின் வரிகள் அருமை. கேட்பதற்கும் இதமாக இருக்கிறது. இந்தப் பாடல் பல விருதுகள் வெல்ல வாய்ப்பு இருக்கிறது.  

முருகானந்தம் கதாபாத்திரத்தில் சசிகுமாரும் சவடமுத்து கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும் நடித்துள்ளனர். படத்தின் ஆலமரம் பாரதிராஜா என்றால் நிலத்தை பிளந்து செல்லும் விழுதுகளாக சசிகுமாரும் கபடி வீராங்கனைகளும் நடித்துள்ளனர். சசி குமார் சில இடங்களில் சமுத்திர கனியாகத் தெரிகிறார். சூரி வரும் போதெல்லாம் தியேட்டரில் ஆங்காங்கே சிரிப்பலைகள். சுசூந்திரன் சூரி காம்பினேசன் நன்றாகவே வொர்க் அவுட் ஆகி வருகிறது, தொடரட்டும்! கலையரசியின் கணவனாக நடித்த ராஜ குமாரன் செய்யும் காமெடிக்கு தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கிறது. அவர் நல்ல காமெடி நடிகராக வர வாய்ப்பு உள்ளது. 

உடல் பாகங்கள் குறித்த கேலிக்கு உள்ளாகும் கபடி பெண்கள், உள்ளூர் குடிகாரர்களால் அவர்களுக்கு உண்டாகும் பிரச்சினை, வீராங்கனைகளுக்குள் உள்ள ஈகோ சண்டை, வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் பதவியில் உள்ள  பெரிய மனிதர்கள் செய்யும் ஊழல், தேர்வு கமிட்டியால் வாய்ப்பிழந்த வீராங்கனை விசம் அருந்துதல், மற்ற மாநில அணி தமிழ்நாட்டு அணியை ஏளனமாக பார்த்தல், தேர்வுக் குழு தமிழகத்தை ( ஏழை மாணவிகள் அணியை ) புறக்கணித்தல் போன்ற விசியங்களை நன்றாகவே காட்டி உள்ளனர். ஆனால் இவை எல்லாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்துவிட்டதால் புதுமையாக எதுவும் தோன்றவில்லை. டுவின்ஸை வைத்து டுவிஸ்ட் என்ற விசியம் புதுமை! கபடி விளையாட்டு பற்றிய டீட்டெய்லிங் அருமை (சூப்பர் டேக்கல்), அதற்காக படக்குழு நன்றாகவே உழைத்துள்ளது. 

“சிலர தட்டிக் கொடுத்தாலே கேப்பாங்க… சிலர தட்டி தட்டி கொடுத்தா தான் கேப்பாங்க… “, ” இவிங்களாம் அட்வைஸ் கேக்குற ஜாதி இல்ல… அடி வாங்குற ஜாதிங்க… “, ” அனுபவம் கொடுக்குற மாதிரி அட்வைஸ் தராது… “, ” உலகத்துல சாதனை செஞ்சு பேர் எடுத்தவன்லா ஒரு காலத்துல நிராகரிக்கப்பட்டவன் தான்… “, ” வீராங்கனை என்ற வார்த்த ராணுவத் துறை, விளையாட்டு துறைல மட்டும் தான் சொல்வாங்க… “, ” விழுந்தா விழுந்த தடம் எழுந்திரிக்கிறது தான் ஸ்போர்ட்ஸ் மேன் ஆட்டிடியூட்… “, ” பொண்டாட்டிய தாங்குறவன்லா ராஜ குமாரன் தான்… “, ” கடைசி தீக்குச்சிய பத்த வைக்கும் போது இருக்கற கவனம் முத தீக்குச்சிய பத்த வைக்கும்போதும் இருக்கனும்… ” போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. 

தேர்ந்தெடுத்த கதைக்காக லவ் யூ சுசீந்திரன்! பட் படம் சுமார் தான். வெண்ணிலா கபடி குழு, ஜீவா படங்களை நெருங்கவில்லை “கென்னடி கிளப்”. சுசூந்திரனால் இந்த கதைக்களத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்க முடியும் என்ற போதிலும் கதை விவாதத்தில் நான்கு பேர் இருந்த போதிலும் ஏனோ சொதப்பி உள்ளார். 

Related Articles

ஆப்ரிக்காவின் உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சா... கடல் மட்டத்தில் இருந்து 5895 மீட்டர் உயரம் இருக்கும் ஆப்ரிக்காவின் மிக உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறி சாதனை புரிந்திருக்கிறான் ஹைதராபாத்தைச் சேர...
49 வது கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு ... 49-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. சர்வதேச திரைப்பட விழா என்றாலே அதில், நம் நாட்டின் பாரம்பரியம் மற்றும் ...
சர்வதேச அளவில் செயல்பட்டு வந்த ஆபாச இணைய... இந்த தலைப்பை பார்த்ததும் எத்தனை பேர் பிரேசர்ஸ், பார்ன்ஹப், எக்ஸ்என்எஸ்எஸ், எக்ஸ்வீடியோஸ் பக்கங்களுக்கு விரைந்தீர்கள் என்பது தெரியவில்லை. ஆனால் சர்வதே...
இரா. பார்த்திபன் ஒரு பார்வை! – காந... இப்போது வரும் இளம் தலைமுறையினர் ஏதாவது ஒரு சின்ன விஷயத்தில் வெற்றி பெற்றுவிட்டாள், ஏதோ அவர்கள் பெரிய சாதனையை படைத்து விட்டது போல், உடனடியாக அடுத்தவர்க...

Be the first to comment on "வெண்ணிலா கபடி குழு, ஜீவா படங்களை மிஞ்சியதா கென்னடி கிளப்? – கென்னடி கிளப் விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*