ரகசிய ஆவணங்களைக் கசியவிட்ட இந்திய விமானப்படை அதிகாரி கைது

IAF-Officier-Arun-Marwaha

இந்திய விமானப்படையின் ரகசியங்களைக் கசிய விட்ட குற்றத்திற்காக இந்திய விமானப்படையில் குழு கேப்டனாக பணியாற்றி வரும் அருண் மர்வாஹா என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ  என்னும் உளவு அமைப்புக்கு அவர் இந்திய விமானப்படையின் ரகசியங்களைக் கசிய விட்டு இருக்கிறார். அவரது வயது ஐம்பத்து ஒன்று.

சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டிருந்த அருண் மர்வாஹா, தன் திறன்பேசியின் மூலம் இரகசிய ஆவணங்களையும், இந்திய விமானப்படை தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வந்த போர் பயிற்சிகளின் நிழற்படங்களை வாட்சப் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கில், இரண்டு பெண்கள் பேஸ்புக் மூலம் அருண் மர்வாஹாவுக்கு அறிமுகம் ஆகியிருக்கின்றனர். பாலுணர்வைத் தூண்டும் வகையில் தொடர்ந்து அவரிடம் இணையத்தில் பேசி அவரிடம் இரகசிய ஆவணங்களை அனுப்பச் சொல்லி கேட்டிருக்கின்றனர். இதை ஆங்கிலத்தில் ஹனி டிராப்பிங் என்று அழைக்கின்றனர். அவரிடம் போலியான பேஸ்புக் கணக்கில் இருந்து பேசிய அந்த இரண்டு பெண்களும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிற்காக வேலை பார்த்து வருபவர்கள்.

புது டெல்லி லோதி காலணி காவல் நிலையத்தில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டம் 3 / 5 / 9 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டு இருக்கிறது.

அவரிடம் இரகசிய ஆவணங்களை பெற்ற அந்த இரண்டு பெண்கள் பற்றியும், அந்தப் போலியான இரண்டு பேஸ்புக் கணக்குகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Articles

தையல் தொழிலாளிகள் சந்திக்கும் பிரச்சனைகள... உடைகள் என்ற ஒரு விஷயம் கண்டுபிடித்த காலத்திலிருந்தே தையல் என்கிற ஒரு விஷயமும் இருந்துகொண்டு வருகிறது. பல வருடங்கள் கடந்து உடைகள் ஒவ்வொரு காலகட்டத்திற்...
“சைக்கோ பெண்களுக்கான படம்!”... கடந்த ஜனவரி 24ம் தேதியன்று ரிலீசான மிஷ்கினின் சைக்கோ படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படத்திற்கான நேர்மறை எதிர்மறை விமர்சனங்க...
பொன்னீலனின் பொட்டல் கதைகள் ஒரு பார்வை!... சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் கதை தொகுப்பு தான் " பொட்டல் கதைகள் " புத்தகம்.ஆதிகாலத்து உரல்,மாற்றம், இஞ்சியும் சுக்...
வெறும் கையால் கழிப்பறையைச் சுத்தம் செய்த... அரசியல்வாதிகளின் கரங்கள் கறை படியாதிருத்தல் அறம். ஆனால் மற்றுமொரு அரசியல்வாதியின் கரங்களில் கறை பட்டிருக்கிறது. இம்முறை நேர்மறையாக. மத்திய பிரதேசம் ரே...

Be the first to comment on "ரகசிய ஆவணங்களைக் கசியவிட்ட இந்திய விமானப்படை அதிகாரி கைது"

Leave a comment

Your email address will not be published.


*