சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச்சும் ஹார்ட் அட்டாக்கும் !

Heart attack for all Chennai Super Kings matches

நடந்து வரும் ஐபிஎல் தொடரில் இன்று இரவு எட்டு மணிக்கு பெங்களூர் அணியுடன் மோத இருக்கிறது, சென்னை சூப்பர் கிங்ஸ். ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலி இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இன்று நடக்கும் ஆறாவது மேட்சுக்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் ஆட்டம் பெங்களூரில் உள்ள சின்னப்பா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. சொந்த மண்ணில் ஆடும் பெங்களூருடன் போட்டி என்பதால் சிஎஸ்கே ஜெயிக்கப் போகிறதா இல்லை மண்ணைக் கவ்வப் போகிறதா என்று எதிர்பார்ப்புகள் பலமாக உள்ளது.

எதிர்பார்ப்புகள் ஒரு புறமிருக்க, கர்ப்பிணி பெண்கள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் இந்த மேட்ச்சை பார்க்காதிங்க என்றும், ஊர்ல இன்னிக்கு எத்தன பேர் மாரடைப்பு வந்து சாகப் போறானோ என்றும், சுகர் பேஷண்ட்டெல்லாம் உசாரா இருங்கடா என்றும், மெடிக்கல் இன்னிக்கு வித்தது பூராவும் காய்ச்ச மாத்திர தானாம் என்றும் சமூக வலை தளங்களில் மீம்ஸ்கள் தெறித்துக் கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு பீதியை கிளப்பி வைத்திருக்கிறது சிஎஸ்கே. மும்பை இந்தியன்ஸ் போல சட்டுபுட்டுனு ஆட்டத்தை முடிக்காமல் கடைசி ஓவர் வரைக்கும் மேட்ச்சை திகிலாக கொண்டு சென்று ரசிகர்களின் உடற்சூட்டை இதயத் துடிப்பை அதிகரிக்க வைத்து நகம் கடிக்க வைத்த பிறகு ஆட்டத்தை முடிப்பதை ஸ்டைலாகவே வைத்திருக்கிறார்கள்.

ஜோக்ஸ் அபார்ட், இன்றைய சூழலில்

எல்லோர்க்கு உள்ளேயும் இனம் அறியாத படபடப்பு உள்ளது. சமூக வலை தளங்களில் வெறுப்பு உணர்வு பிரச்சாரம், இடைவிடாத பிரேக்கிங் நியூஸ், மண்ட பத்திரம் மக்களே என்று மிரட்டும் சுட்டெரிக்கும் வெயில் என்று பல காரணங்கள் மக்களை இன்று படபடப்புக்கு ஆளாக்கி உள்ளது. மாரடைப்பு போன்ற நோய்கள் இன்று இளைய சமுதாயத்தை அதிகம் பாதிக்கத் தொடங்கிவிட்டது. இரவு நண்பன் வைத்த ட்ரீட்டில் சிக்கன் உண்ட இளைஞன் விடிவதற்குள் இறந்து விட்டான் மாரடைப்பால். உடலுறவின் போது மாரடைப்பு வந்து உயிரிழந்த இளைஞன் போன்ற செய்திகளை இப்போது அதிகம் காண முடிகிறது.

குடும்பத்தில் சண்டை, ஏமாற்றம், பொருளாதார நெருக்கடி, வொர்க் லோடு, வேலையின்மை, தனிமை, தோல்வி போன்ற பல காரணங்களால் ஏற்படுகிற மன அழுத்தம், மன சோர்வு, மனப் பதற்றம் என்று நம் வாழ்க்கை முறை நெஞ்சு வலியில் வந்து நிற்கிறது. இப்படி பாதிக்கப் படுவோரிடம் அவருடைய பாதிப்பு மாரடைப்பு தானா என்பதை கண்டறிய மூன்று விசயங்களை நாம் கவனிக்க வேண்டி உள்ளது. அந்த மூன்று விசியங்களை S, T, R என்ற மூன்று எழுத்துக்களால் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள். S என்றால் smile, T என்றால் Talk, R என்றால் Raise Both Arms என்ற மூன்று விசியங்கள் தான் அவை. கூட்டம் நிறைந்த பகுதிகளான பொது இடங்களிலோ அல்லது ஏதாவது ஒரு விசேச வீடுகளிலோ அல்லது வீட்டில் சிஎஸ்கே மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும் போதோ இளம் வயது ஆண், பெண் அல்லது முதியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தடுமாறுவது போல் தெரிந்தால் அல்லது கீழே விழுவதைக் கண்டால் உடனே அவர்மீதான கவனத்தை அதிகப் படுத்துங்கள். ஆனால் அப்படி பாதிக்கப் பட்டவர்களோ தனக்கு ஒன்றுமில்லை சாதாரண தலை சுற்றல் தான், சாதாரண பித்த வாந்தி தான் என்று சமாளிப்பார்கள். அவர்களை அப்படியே விட்டுவிடக் கூடாது. இவை மாரடைப்புக்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். மாரடைப்பு வருவதை உடலில் உள்ள உறுப்புகளில் முதலில் உணர்வது மூளை தான். அதனால் தான் தலை சுற்றல் ஏற்படுகிறது. அவர்களை மேற்குறிப்பிட்ட மூன்று செயல்களை செய்ய சொல்ல வேண்டும். இந்த மூன்று செயல்களையும் அவரால் இயல்பாக செய்ய முடிகிறது என்றால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அர்த்தம். அதே சமயம் இம்மூன்று செய்ய முடியாமல் திணறுகிறார் என்றால் அவரை அருகே இருக்கும் மருத்துவ மனைக்கு உடனே அழைத்துச் சென்று பரிசோதிக்க வேண்டும் என்று அர்த்தம். அடுத்ததாக அவரை நாக்கை வெளியே நேராக நீட்ட சொல்ல வேண்டும். நேராக நீட்ட முடியாமல் வாயின் ஓரத்தில் கோணிய படி நீட்டினால் அவருக்கு மாரடைப்பு என்று அர்த்தம். மறந்துடாதீங்க அது STR.

யெல்லோவுக்கு விசில் போடுவது, தல தோனிக்கு விசில் போடுவது எல்லாம் இருக்கட்டும். சுற்றி இருப்பவர்கள் மீது சாதி, மத, பேதம் அற்ற அன்பை பொழியுங்கள். தல தோனி எப்படி தன் மகள் மீது அன்பை பொழிகிறார் அது போல உங்கள் பிள்ளைகள் மீது அன்பு செலுத்துங்கள். குட்டி பாப்பா ஜீவா எப்படி தன் அப்பாவை கொண்டாடுகிறாள், அது போல சுற்றி இருக்கும் அம்மாக்கள் அப்பாக்கள் மீது அன்பை பொழியுங்கள். அன்பு ஒன்றே உலகை வெல்லும் ஆயுதம். அத்தகைய அன்பை செலுத்த மறந்து மனிதம் என்பதை புறக்கணித்து எதை தைடி ஓடுகிறோம், எதற்காக ஓடுகிறோம் என்று தெரியாமல் எனக்கு முன்னாடி இருக்கவன் ஓடுறான் அதனால நானும் ஓடுறேன் என்று செம்மறி ஆட்டுக் கூட்டமாய் வாழாமல் நிறுத்தி நிதானமாய் இந்த பிறப்பை ரசித்து ருசித்து வாழுங்கள். மாரடைப்பு உங்களை எட்டிக் கூட பார்க்காது.

Related Articles

டெல்லி – மீரட் இடையே இந்தியாவின் ம... டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் மீரட்டுக்கு செல்லும் அதிவேக சாலை பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது. 149 கிலோ மீட்டர்கள் தொலைவு உள்ள இந்த இ...
காகிதம் சேர்ப்பவரின் மகன் மருத்துவ படிப்... மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ளது விஜய்கஞ்ச் மண்டி. இப்பகுதியில் உள்ள குப்பைகளைச் சேகரித்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர் ரஞ்சித் மற்ற...
” பிகில் ” படம் பற்றிய சுவார... தளபதி விஜய்க்கு தந்தை மகன் என்று இரட்டை வேடம். தந்தை மதுரை மார்க்கெட்டில் கசாப்புக்கடை நடத்துகிறார். மகன் மைக்கேல் புட்பால் வீரராக இருக்கிறார். ...
சிம்டாங்காரன் பாடல் வரிகளின் அர்த்தம் இத... கடந்த சில நாட்களாக இணையத்தை கலக்கி வரும் வார்த்தை சிம்டாங்காரன். பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்தப் பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையில் பம்பா பாக்கியா, விபின...

Be the first to comment on "சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச்சும் ஹார்ட் அட்டாக்கும் !"

Leave a comment

Your email address will not be published.


*