பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை ஒரு பார்வை!

A view on Moondram Pirai movie

பாக்கிய லட்சுமி தனது தோழர் தோழிகளுடன் கடற்கரையில் கூத்தடித்துவிட்டு கார் ஓட்டிச் செல்கிறார். எதிர்பாராதவிதமாக கார் ஆக்சிடன்ட் ஆகிறது. விபத்தின் காரணமாக பாக்கிய லட்சுமிக்கு அம்னீசியா பிரச்சினை உண்டாகிறது. மனதளவில் ஐந்து வயது குழந்தையாக மாறுகிறாள். அம்மா அப்பாவை தெரியாது என்கிறாள். கொஞ்ச நாளைக்கு ஹோமில் வைத்திருக்கிறார்கள். திடீரென ஒருநாள் அவள் ஹோமில் இருந்து காணாமல் போகிறாள்.

சீனிவாசனை அவனுடைய நண்பன் விபச்சார விடுதிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு விஜி என்கிற புத்தி சுவாதீனம் இல்லாத பெண்ணை பார்க்க நேரிடுகிறது. மனதளவில் சிறுமியாக இருக்கும் பாக்கிய லட்சுமி, தான் விபச்சார விடுதியில் எப்படி சேர்ந்தேன் என்பதை விவரிக்க அவளை உடனே அங்கிருந்து தன் குடியிருப்புக்கு ரயிலில் அழைத்துச் செல்கிறான் சீனு. ரயிலில் அவர்களோடு பயணித்தவர்கள் பாக்கிய லட்சுமியை பைத்தியத்தைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். பாக்கிய லட்சுமியின் பெற்றோர் போலீசுக்குப் போகிறார்கள்.

மலைப்பாங்கான பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக சீனிவாசன் பணியாற்றுகிறார். பள்ளி நிறுவனத்தாரின் (வயதானவர்) இளம் மனைவிக்கு (சில்க்) சீனிவாசன் மேல் காதல். எப்படியாவது அவனை அடைந்துவிட மாட்டோமா என்ற ஏக்கம்.

விஜியை (பாக்கிய லட்சுமியை) பக்கத்து வீட்டு பாட்டியுடன் சேர்ந்துகொண்டு கவனித்து வருகிறான். விஜியை குழந்தையை நடத்துவது போலவே நடத்துகிறான். விஜியோ நாய்க்குட்டி சுப்ரமணியத்தோடு விளையாட்டுப் பிள்ளையாகவே காலம் கழிக்கிறாள். குரங்காட்டி வித்தை போல விளையாட்டு காட்டுவது விஜிக்குப் பிடித்த விளையாட்டு. அவ்வப்போது கோபம் வந்தால் விஜியை திட்டவும் செய்கிறான் சீனு.

ஒரு நாள்  நடராஜ் என்ற கொல்லன் தனியாக நடந்து வரும் விஜியிடம் உன் சுப்ரமணிக்கு கழுத்துல பெல்ட் போடலனா அத சுட்டுக்கொன்றுவாங்க… என் கூட வா பெல்ட் தரேன் என்று பாக்கிய லட்சுமியை ஏமாற்றி பாழடைஞ்ச மண்டபத்திற்கு அழைத்துச் சென்று கற்பழிக்க முயல்கிறான். அவனிடமிருந்து தப்பி வந்த பாக்கிய லட்சுமி வழிப்பிள்ளையார் அருகே நடந்துவந்த சீனுவிடம் நடந்ததை பற்றி கூறுகிறாள். உடனே அவனை அடித்து துவைக்கிறான் சீனு. பாக்கிய லட்சுமியைப் பற்றி செய்தித்தாளில் விளம்பரம் செய்கிறார்கள். அதைப் பார்த்த ரயில் பயணி பெற்றோரை தேடிச் சென்று சீனுவைப் பற்றியும் சீனு இருக்கும் இடத்தைப் பற்றியும் தகவல் கொடுக்கிறார்.

சீனு பணியாற்றும் பள்ளியில் இன்ஸ்பெக்சன் நடக்க இருக்க, சுப்ரமணியத்துக்கு பொட்டு வைக்கனும் இங்க எடுத்து தா என்கிறாள் விஜி. அப்புறம் வந்து எடுத்து தரேன் என்று சீனு சொல்ல விஜி தாமாகவே செல்ப்பில் இருக்கும் இங்க் பாட்டிலை எடுக்க முயல்கிறாள். செல்ப் கவழ்கிறது. பள்ளிக்கூட ரெக்கார்ட்ஸ் முழுக்க இங்க் அப்பிக் கிடக்கிறது. உடனே சீனு விஜியை திட்டுகிறான். சாப்பாடு செய்யாததால் கடைக்குச் சென்று சாப்பாடு வாங்கி வருகிறான். வரும் வழியில் சில்க் அவனை மறைத்து தன் வீட்டிற்கு விருந்திற்கு வரும்படி அழைக்கிறார். சனிக்கிழமை மதியமா வரேன் என்று சொல்லி வீட்டிற்குத் திரும்ப அங்கு விஜியை காணவில்லை. ஊரெங்கும் தேடி அலைகிறான். கடைசியில் அவள் வீட்டிற்கு வந்துவிட அவன் நிம்மதியாகிறான்.

சனிக்கிழமை மதியம் சில்க் வீட்டிற்குச் செல்ல சில்க்கோ அவனை படுக்கைக்கு அழைக்க முயல்கிறார். நான் உங்க கணவர் காசுல தான் சோறு திங்குறேன் அவருக்கு நான் துரோகம் பண்ண விரும்பல என்கிறான் சீனு. பக்கத்து வீட்டு பாட்டிக்குத் தெரிந்த பெண் ஒருவள் ஒரே நாளில் நோயைக் குணப்படுத்தும் வைத்தியர் பற்றிச் சொல்கிறாள். அங்கு விஜியை அழைத்துச் செல்கிறான் சீனு. பச்சிலை சாறு கொடுத்து பாக்கிய லட்சுமியை மயக்க நிலைக்கு கொண்டு செல்கிறார்கள். மாலை 4 மணிக்கு வாங்க என்று சீனுவிடமும் பாட்டியிடமும் சொல்ல சீனு திரும்புகிறான். பாட்டி மட்டும் வீட்டிற்குத் தனியாக செல்ல வழிப்பிள்ளையார் அருகில் அமர்ந்துகொள்கிறான் சீனு.

இந்த நேரத்தில் சீனுவை தேடி போலீஸ் வருகிறது. பாட்டி ஓடிவந்து சீனுவிடம் சொல்ல சீனு வைத்தியர் இருக்கும் இடத்திற்குச் செல்கிறான். அங்கு குணமான பாக்கிய லட்சுமியை அவர்களுடைய பெற்றோர்கள் தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். வைத்தியர் சீனுவைப் பற்றி பாக்கிய லட்சுமியின் பெற்றோரிடம் சொன்னதன் பேரில் போலீஸ் கேசை வாபஸ் வாங்குகிறார் பாக்கிய லட்சுமியின் அப்பா. அவர்கள் அங்கிருந்து செல்வதைப் பார்த்ததும் கார் பின்னாடியே ஓடுகிறான் சீனு. வைத்தியரிடம் நடந்ததைப் பற்றி விசாரிக்க, அவர்கள் ரயிலில் சென்னை செல்ல இருப்பது தெரிய வருகிறது.

ரயிலில் தன் அம்மாவோடு பாக்கிய லட்சுமி அமர்ந்திருக்க காரில் அடிபட்டு சேரில் விழுந்து எழுந்து வந்து அவளை பார்க்கிறான். விஜி விஜி என அழைக்க அவளோ கண்டுங்காணாதது போல் இருக்கிறாள். சீனு குரங்காட்டி ஆட்டம் ஆடிக்காண்பிக்க அவளோ ” பாவம் பைத்தியம் போல இருக்கு… ” என்று தின்பதற்கு உணவுப்பொருளை தூக்கி வீசுகிறாள். ரயில் போகிறது சீனு குரங்காட்டி வித்தை போல நடித்துக் காண்பித்துக்கொண்டே இருக்கிறான். ரயில் சென்றுவிட்டது.

ஒரு சிறுகதையைப் போல அமைந்துள்ள படம் என்றைக்கும் நம் நினைவிலிருந்து நீங்காதவை. இன்றும் பலருடைய செல்போன் ரிங்டோன்களாக கண்ணே கலைமானே பாடல் ஒலிக்கிறது. அதுவே அப்படத்திற்கு உண்மையான வெற்றி.

Related Articles

இதாங்க ஆயிரத்தில் ஒருவன் படத்தோட கதை!... இத்திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனையே. சோழ பாண்டிய வரலாற்றுக்கும் இத்திரைப்படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.ஒரு குக்கிராமம்... தற்போதைய தஞ்சாவ...
இன்ஜினியரிங் படிச்சதால தான் குடிச்சிட்டு... தயாரிப்பு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ்ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்எடிட்டிங்: பிலாமின் ராஜ்இசை: சாம் சிஎஸ்எழுத்து இயக...
கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகி... இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா marginal cost of funds based lending rate (MCLR) எம்சிஎல்ஆர் எனப்படும் கடன் திட...
ரயில் நிலையங்களுக்கும் இனி ரேங்க் கார்ட்... எண்பதுகளின் இறுதியில் வந்த நிறையத் தமிழ் திரைப்படங்கள் ரயிலை மையமாக வைத்து வெளிவந்தன. அப்போது ரயில் என்பது ஒரு ஆச்சரியம். புதிய நட்புகள் உருவாகும் இடம...

Be the first to comment on "பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*