தல அஜித் பற்றிய 48 தகவல்கள்!

48 Information about Tala Ajith

கடந்த மே 1ம் தேதி அஜீத்துக்கு 48 வது பிறந்தநாள் அவருடைய ரசிகர்களால் கொண்டாட பட்டது. 48 வயதான அவரைப் பற்றிய 48 தகவல்கள்!

 

 1. தன்னை தேடி வருபவர்களுக்கு டீ காபி டிபன் வரை தானே செய்து பரிமாறுவார்.

 

 1. சினிமாக்காரர்களிடையே ஜி போட்டு பேசும் பழக்கம் இவரால் தான் வந்திருக்கும். யாரை தொடர்பு கொண்டாலும் ஹலோ ஜி என்பார்.

 

 1. இவர் படித்தது 10வது வரைக்கும் தான். இவர் பேசும் இங்கிலீஷ் செம ஸ்டைலிசாக இருக்கும்.

 

 1. எத்தனை கோடி கொடுத்தாலும் வெளிநாட்டு  குளிர்பான விளம்பரங்களில் மாடலிங் செய்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

 

 1. பைக் மெக்கானிக், பைக் கார் ரேசர், டெக்ஸ்டைல் பிசினஸ் மாடலிங் எல்லாவற்றையும் விட அவருக்கு கைகொடுத்தது அள்ளிக் கொடுத்தது சினிமா தான்.

 

 1. தங்க நகை அணிவதில்லை என்பதில் உறுதியாக இருந்தவர் காதல் மனைவி பிரியமாக அணிவித்த  மோதிரத்தை அப்படியே அணிந்திருக்கிறார்.

 

 1. அலைபேசியில் பேசும்முன், ” இப்போது பேச உங்களிடம் நேரமிருக்கிறதா… ” என குறுஞ்செய்தி அனுப்பி அனுமதி பெற்றே பேசுவார்.

 

 1. அஜீத்தின் ஆசைகளில் ஒன்று ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பது.

 

 1. கார் ரேஸ், கிரிக்கெட், ஸ்விம்மிங், ஏரோ பைலட், சமையல், போட்டோகிராபி இவை தவிர தற்போது கப்பல் ஓட்டவும் பழகுகிறார்.

 

 1. அஜித்தின் அப்பா சுப்ரமணியம் பாலக்காட்டு ஐயர். அம்மா மோகினி வடநாட்டுக்காரர்.

 

 1. வெளியூர் செல்லும் முன் அன்னையின் பாதம் பணிவார். அம்மாவின் பெயரில் அறக்கட்டளை வைத்து நற்பணிகள் செய்து வருகிறார்.

 

 1. ஹைதராபாத் பிரியாணி போல அஜித் பிரியாணி சினிமா நட்சத்திங்களிடையே பிரபலம். தம்முடன் நடிப்பவர்களுக்கு தாமே சமைத்துப் போட்டு அசத்துவார்.

 

 1. இவரது முதல் படம் ”  என் வீடு என் கணவர் “. மாணவராகச் சிறிய வேடத்தில் தோன்றினார்.

 

 1. தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி, ப்ரெஞ்ச் ஐந்து மொழிகளை பேசுவார்.

 

 1. பாதுகாப்பு கருதி பாயின்ட் 32 ரக பிஸ்டல் வைத்திருக்கிறார்.

 

 1. சமீபத்தில் சைவத்துக்கு மாறிவிட்டார்.

 

 1. தன்னிடம் வேலை பார்க்கிறவர்களுக்கு சீருடை, இன்சூரன்ஸ், இலவசமாக பைக் மற்றும் சொந்த வீடு என்று சகல வசதி செய்து கொடுத்திருக்கிறார்.

 

 1. தமது பிறந்த நாளை பசுமை தினமாக அனுசரித்து ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நடுங்கள் என்பது ரசிகர்களுக்கு தலயின் தலைப்புச் செய்தி.

 

 1.  செயின்ஸ்மோக்கராக இருந்தவர் காதல் மனைவியைக் கைப்பிடித்ததும் சிகரெட்டை விவாகரத்து செய்துவிட்டார்.

 

 1. தானே கார் பைக் ஓட்டிச்சென்றாலும் சாலை விதிகளை மீறுவதில்லை.

 

 1. 1999 மார்ச் 17, காலை 10.30 மணி. ‘அமர்க்களம்’ படிப்பில் ஷாலினியைப் பார்த்த அந்த நாள் பசுமையாக நினைவில் இருக்கிறதாம்.

 

 1.  எனக்கும் விஜய்க்கும் சரியான தீனி போடுற மாதிரி சப்ஜெக்ட் அமைந்தால் நடிக்க தயார் என்பது அஜித்தின் வாக்குமூலம்.

 

 1. ஒருபோதும் அரசியல் பேசுவதில்லை.

 

 1. அவரது ஹாபி பலநாட்டு நாணயங்கள், தபால் தலைகள், விதவிதமான கைக்கடிகாரங்கள், மினியேச்சர் ஹெல்மெட்டுக்கள், நவீன கேமராக்கள் போன்றவை.

 

 1. அவருடைய தைரியம் தன்னம்பிக்கை, உதவுகிற மனசு எளிமையாக வாழ நினைப்பது

 

 1. அன்பு  தான் இந்த உலகத்திலயே வலிமையான ஆயுதம்னு இப்ப உணர்றேன் என்பதுதான் அஜித்தின் அனுபவ மொழி.

 

 1. வாழு வாழ விடு இதுதான் அஜித்தீன் பாலிசி

 

 1. திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்ய இரண்டு தடவை சென்னையிலிருந்து  நடந்து போயிருக்கிறார்.

 

 1. அவரது வீட்டில் சின்னதாய் ஒரு நூலகம் உள்ளது.

 

 1. வாக்குச் சாவடி, விமான நிலையம், கோயில் எங்கு சென்றாலும் மக்களோடு மக்களாக வரிசையில் செல்வார்.

 

 1. தன்னை சந்திக்க வந்தவர்கள் டூவிலரில் வந்தால் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை அவர் வலியுறுத்துவார்.

 

 1. மகளுக்கு என்ன உணாவு பிடிக்கும் எனக்கேட்டு தன் கையால் சமைத்து பரிமாறுவார்.

 

 1. சின்சியாரிட்டி, டெடிகேசன், ஸ்பீடு இந்த முன்றும் அவரிடம் எனக்கு பிடித்தவை என்கிறார் திருமதி அஜித்.

 

 1. தேடி வரும் ரசிகர்களிடம் முதலில் உங்கள் வேலையை குடும்பத்தை கவனியுங்கள் பிறகு தான் மன்றம் என்பார்.

 

 1. மிஸ்டர் அஜீத் என்று தன் மகள் அனொஷ்கா பெயர்சொல்லி செல்லமாக அழைத்தால் மகிழ்ந்து போவார் தல.

 

 1. அஜித்தை பேபி என்றழைப்பார் மனைவி ஷாலினி

 

 1. யாரும் கற்றுக் கொடுக்காததை வாழ்க்கையில் அனுபவம் நிறைய கற்றுத் தரும் என்பது அவருடைய அனுபவ மொழி.

 

 1. அஜீத் சாய் பாபாவின் தீவிர பக்தர்.

 

 1. அவரது நண்பர்கள்  வட்டாரத்தில் குட்மார்க் பெற்றவர் ஐ ஸ்பெசலிஸ்ட் விஜய் சங்கர் ( இவர் நடிகர் ஜெய்சங்கரின் மகன் )

 

 1. பழகிய நண்பர்கள் பத்திரிக்கையாளர்கள் யாரை சந்தித்தாலும் முதலில் ஒரு ஹக். பிறகு தான் உடல்நல குடும்ப நல விசாரிப்புகள்.

 

 1. ஒரு மனிதரை ஒரு முறை பார்த்துப் பேசினால் போதும் அவருடைய நடை உடை முகபாவனையை அப்படியே செய்துகாட்டுவார் அஜீத்.

 

 1. இவர் ஒரு ரசனைமிக்க புகைப்பட கலைஞர். தம்முடன் நடிப்பவர்களை அவர்களூக்கே தெரியாமல் போட்டோ எடுத்து லேமினேசன் செய்து அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.

 

 1. இன்டீரியர் டெக்ரேசனில் பிரமாதமான டேஸ்ட் கொண்டவர்.

 

 1. ‘ அமைதி… அருமையான பீலிங்… அதை ஆழ்ந்து அனுபவிக்கனும் அதை ஆன்மீகம் தரும் என்று நம்புகிறேன்’ என்பார்.

 

 1.  ஒரு பொறுப்பு மிக்க தந்தையாக குழந்தையை ஸ்கூலுக்கு கூட்டிச் செல்வது பேரன்ட்ஸ் மீட்டிங்கில் கலந்துகொள்வது போன்ற செயல்களை தவறாமல் செய்கிறார்.

 

 1. விஜய் மனைவி சங்கீதாவும் அஜீத் மனைவி ஷாலினியும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்.

 

 1. வீட்டில் மனைவி விளையாடுவதற்காக ஷட்டில் கோர்ட் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

 

 1. ஓய்வாக இருந்தால் திருப்பதி வெங்கடா சலபதியை தரிசிக்க கிளம்பிவிடுவார்.

Related Articles

திருடனாகுவது எப்படி? இதோ சில டிப்ஸ்! திர... முதலில் கள்ளச் சாவிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதில் எத்தனை வகைகள் உள்ளன எந்த மாதிரியான பூட்டுகளுக்கு எந்த மாதிரியான சாவிகளை போட வேண்டும் எ...
அசீஃபா பானுவின் மரணத்துக்கு நீதி வழங்கப்... ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்துக்கு உட்பட்ட ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி அச...
இனி இரயில்களில் உணவுக்கு அதிக விலை வைக்க... இரயிகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களா நீங்கள்? இரயிலில் தரப்படும் உணவுகளின் விலை மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கா...
நான்கு முறை தங்கம் வென்ற மாரத்தான் வீராங... தற்போதைய காமன்வெல்த் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று அதிக பதக்கங்கள் வென்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இது போன்ற உலக அள...

Be the first to comment on "தல அஜித் பற்றிய 48 தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*