ரஜினியின் 100 மரணமாஸ் வசனங்கள் ஒரு பார்வை!

A view on 100 Maranamas dialogues of rajinikanth

  1. எனக்கு மரியாதை வேண்டாம், வேலைக்கு மரியாதை கொடுங்க…
  2. இது எப்படி இருக்கு?
  3. எப்போதுமே ஒருத்தர குறைச்சி மதிப்பிடக் கூடாது. ஆஞ்சநேயர ராவணன் குறைச்சி மதிப்பிட்டதாலதான இலங்கையே அழிஞ்சு போச்சு
  4. எதிரிகளை மன்னிச்சிருவேன், ஆனா முதுகுல குத்துற துரோகிய மன்னிக்கவே மாட்டேன்…
  5. எந்த குற்றத்தையும் மன்னிப்பேன். நம்பிக்கை துரோகத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்.
  6. நினைக்கறது கனவு காண்றது இதெல்லாம் என் சரித்திரத்திலே இல்ல… நினைச்சா அத அனுபவிச்சிரனும், இதான் என்னோட பாலிசி…
  7. விசுவாசம்ங்கறது வேலைக்காரனுக்கு மட்டுமில்ல முதலாளிக்கும் இருக்கணும்…
  8. என் தங்கச்சி பட்டினி கிடக்கிற நாள் இந்த காளி செத்த நாளா இருக்கும்…
  9. கையும் காலும் இல்லேன்னாலும் இந்த காளி பொழச்சிக்குவான். கெட்ட பய சார் அவன்…
  10. தடி எடுத்தவனுக்குத் தான் மரியாதை, தன்மானம் உள்ளவனுக்கு மரியாதை இல்லை…
  11. பொம்பள, அரசியல்வாதி ரெண்டு பேரும் நினைக்றத அடையறதுக்கு எதுவும் செய்வாங்க. ஆனா என்ன நினைக்றாங்கன்னு அவுங்களுக்கே தெரியாது…
  12. உலகத்துல ரொம்ப கொடுமையானது இரண்டு. ஒன்று வறுமை, இன்னொன்னு சாவு.
  13. சத்தியம் நெருப்பு மாதிரி, அத எதற்குள் போட்டு அடைச்சாலும் அத எரிச்சிக்குட்டு வெளியே வந்துடும்…
  14. பணத்துக்கும் பிணத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுக்குமே நல்லவர் யார்? கெட்டவர் யார்னு தெரியாது. இரண்டுமே புதைக்கப்பட வேண்டிய ஒன்னுதான்…
  15. செத்த பிணத்துக்குத் தான் ஆபத்து வராது… ஒரு பிணம் மாதிரி வாழ்க்கை நடத்த நான் தயாரா இல்ல…
  16. இந்த உலகத்துல எதை எடுத்தாலும் ஒன்றைவிட ஒன்று பெட்டரா தோணும்… அதுக்காக மனதை மாத்திக்கிட்டே போகக்கூடாது…
  17. பணத்துல கருமியா இருக்கிறது தப்பில்ல. அன்புல கருமியா இருக்கக் கூடாது… அன்பு காட்ட ஆள் இருந்தா யாருமே அனாதை இல்லை…
  18. தொழில்ல அக்கறையும் ஆர்வமும் இருந்தா வண்டியும் ஓடும், வாழ்க்கையும் ஓடும்…
  19. சீவிடுவேன்…
  20. உழைப்பு பொழுது போக்கா இருக்கணும்… பொழுது போக்கு உழைப்பாகாது…
  21. நான் முதல்ல இந்தியன், அப்பறமாத் தமிழன்…
  22. ஒரு கதர் சட்டை போட்டா ஒரு நெசவாளன் வீட்டில் அடுப்பெறியும்…
  23. கடவுள் தான் நமக்கு செய்யணும், நாம கடவுளுக்கு செய்யக் கூடாது…
  24. ஒரு பெண்ணோட சுத்தத்த சீப்ல பாக்கலாம்… அவளோட சிக்கனத்த சோப்புல பாக்கலாம்…
  25. உலகத்திலேயே ரெண்டே ஜாதி தான்… ஒன்று ஆண் ஜாதி, மற்றது பெண் ஜாதி…
  26. கோழையா நூறு வருசம் வாழ்றத விட வீரனா ஒரு நாள் வாழ்ந்துட்டு செத்தா போதும்…
  27. தீவிரவாதம் ரத்தம் குடிக்குது, ரத்தம் விலை மதிக்க முடியாத தேசிய சொத்து…
  28. எதையும் ஆக்க நினை, அழிக்க நினைக்காதே…
  29. கற்பனைகள் சில நேரம் உண்மைகள சாப்பிட்டு விடும்…
  30. நான் யாரோட பாதையிலும் போகல… நான் போற இடமெல்லாம் பாதையாகணும்…
  31. யாரோட நிழல்லயும் சோம்பேறியா இருக்க மாட்டேன்… என்னோட நிழல்லயும் சோம்பேறிகள இருக்கவிட மாட்டேன்…
  32. வாழ்க ஒழிக கோஷம் வேண்டாம்… ஒருத்தர் பேசி லட்சம் பேர் கேட்கக் கூடாது… லட்சம் பேரோட உழைப்பு தெரிந்த ஒருவார் வழிகாட்ட வேண்டும்…
  33. தரம் பார்க்கவில்லை என்றால் தரணியெங்கும் வேலை உண்டு.
  34. நாம சந்தோசஷமா இருக்கணும்னா நமக்கு மேல இருக்கறவங்களோட ஒப்பிட்டு பாக்க கூடாது… நமக்கு கீழ இருக்கறவங்களோட ஒப்பிட்டு பாக்கணும்… இன்பம் துன்பம் இரண்டுக்குமே மனசுதான் காரணம்…
  35. பணத்தை அளவா சம்பாதிச்சா அது நம்மள காப்பாத்தும்… அளவுக்கு மீறி சம்பாதிச்சா பணத்தை நாம காப்பாத்தணும்…
  36. பொம்பளைங்க வீட்டு நிலமைய புருஷன்கிட்ட சொல்றதோட நிறுத்திக்கணும். அத தீர்க்குறது புருஷனோட கடமை.
  37. ஒரு மனுஷனை தெய்வமா மாத்துறதும் பெண் தான்… ஒரு மனுஷனை மிருகமா மாத்துறதும் பெண் தான்… என்னை மிருகமாக்கிடாத…
  38. இந்த அலெக்சோட பேரைக் கேட்டாலே கர்ப்பத்துல இருக்கற குழந்தை அவுங்க அம்மா வாயையும் சேர்த்துப் பொத்தும்…
  39. குறி வச்சு அடிச்சா காக்காவையும் அடிக்கலாம்… மனசு வச்சு அடிச்சா கடவுளையும் அடையலாம்…
  40. ஒரு பொண்ணு வீட்டைவிட்டு வெளிய போனா புருஷன் கூட போகணும்… இல்லேண்ணா நாலுபேரு தூக்கிட்டு போகணும்…
  41. குழந்தைகளை 3 வயது வரை கடவுள் மாதிரி பாத்துக்கணும்…

16 வயசு வரைக்கும் எதிரி மாதிரி கண்காணிக்கனும்… 16 வயசுக்கு மேல நண்பர்களா பாவிக்கணும்…

  1. நேற்றுங்கறது இறந்து போன ஒன்று… நமக்கு திரும்ப கிடைக்காது… நாளைங்கறது பொறக்குமா? பொறக்காதா? நமக்குத் தெரியாது… இன்னிக்குத் தான் நமக்கு சொந்தமானது… இப்ப இந்த 24 மணிநேரம் ஆண்டவன் நமக்கு கொடுத்த வரப் பிரசாதம்… அத நாம வீணாக்க கூடாது…
  2. நியாயத்துக்காக எதையும் தூக்கி எறிய நான் தயங்க மாட்டேன்…
  3. கை, கால் இருக்கில்ல… நாலு இடத்துல பத்து பாத்திரம் தேயி… இல்லேண்ணா பட்டினி கிடந்து சாவு… ஆனா சாராயம் மட்டும் விக்காத…
  4. காதல் வியாபாரமல்ல, அது வாழ்க்கை… அதை விலை கொடுத்து வாங்க முடியாது…
  5. பங்களாவில் அடிமையாக இருப்பதை விட குடிசையில் ராஜாவாக இருக்க விரும்புகிறேன்.
  6. கடவுள் எல்லோரையும் பசியோடு எழுப்புவாரே தவிர பசியோடு தூங்க விடமாட்டார்…
  7. மத்தவங்க சொத்து, பெண் மீது ஆசப்படக் கூடாது…
  8. உப்பு போட்டவங்கள உள்ள வரைக்கும் நினைக்கணும்…
  9. அநியாயம் பண்றவங்கள அடிச்சு தூள் பண்ணிடனும்…
  10. பொம்பளைய அடிக்றவனுக்கும் ஊனமுற்றவங்கள அடிக்கிறவனுக்கும் என் அகராதில ‘ பொட்டை ‘ னு அர்த்தம்…
  11. பணம் சம்பாதிக்கறவன் தான் பதவியைத் தேடிப் போவான்… மக்கள் சேவை செய்றவனை பதவி தேடி வரும்…
  12. நான் சொல்றதத் தான் செய்வேன்… செய்றத தான் சொல்வேன்…
  13. தேசப்பிதாவ மதிக்கலேன்னா நீங்க உங்கள மதிக்காத மாதிரி, பிறந்த நாட்டையே மதிக்காத மாதிரி…
  14. மற்றவர்களுக்கு மரியாதை தராத மனிதர்கள் அந்த மரியாதையை தங்கள் வாழ்க்கையில் பெறவே முடியாது…
  15. வன்முறையில் ஈடுபடுகிறவன் மத்தவங்களையும் அழிச்சுடுவான்… தானும் அழிஞ்சுடுவான்…
  16. கத்திய தூக்கியவனுக்கு கத்தியால் தான் சாவு… துப்பாக்கிய தூக்கியவனுக்கு துப்பாக்கியால் தான் சாவு
  17. பணம் பொருள் இருக்கிறவங்க எல்லாம் நிம்மதியானவங்க இல்ல… உடம்புல வியாதியும் மனசுல கவலையும் இல்லாம இருக்கறவங்க தான் நிம்மதியானவங்க…
  18. ‘பெட்’டுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்… ஏன்னா

உருவாகுறதும் பெட்…

உறவாடுறதும் பெட்…

உயிர்போறதும் பெட்…

  1. ரசனை உடையில இல்லீங்க உள்ளத்துல இருக்கு…
  2. நான் தட்டியும் கேட்பேன், கொட்டியும் கொடுப்பேன்…
  3. கஞ்சிக்கு வழியில்லாதவன் கேட்டா உயிரைக்கூட கொடுப்பேன்… பணம் பதவி பந்தாவோட என்கிட்ட விளையாட நினைச்சா உயிரையே எடுத்துருவேன்..
  4. கிருதாயுகத்துல ராமன் கடவுள்…

கலியுகத்துல காசுதான் கடவுள்…

  1. நான் இரண்டு விஷயத்துல கரெக்டா இருப்பேன்… ஒன்று பேச்சு, இன்னொன்னு மூச்சு… இன்னிக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு கிடையாது.. மூச்சு இருக்கற வரைக்கும் ஒரே பேச்சு…
  2. நீங்க என் கால வாற நினைச்சீங்க… நான் உங்க கால வாரி வுட்ருவேன்… நம்ம அரசியல் மாதிரி…
  3. நாம மக்களை ஏமாத்தினா அஞ்சு வருஷம் கழித்து மக்கள் நம்மள ஏமாத்திடுவாங்க…
  4. மேல இருக்கறவன் உனக்கு பணம் அந்தஸ்து எல்லாத்தையும் கொடுத்திருக்கான்… ஆனா நீ கீழ இருக்கறவன துன்பபடுத்துற… அதனால கீழ இருக்கறவன் மேல இருக்கறவன்ட்ட சொல்றான் அதனால மேல இருக்கறவன் என்னை மாதிரி ஆள கீழே அனுப்புறான்…
  5. என்ன தொழில் செய்றோம்ங்கறது முக்கியமில்ல… எப்படி வாழ்றோம்ங்கறதுதான் முக்கியம்…
  6. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு… அநியாயத்தை கண்டா அடிச்சு தூள் பண்ணு, ஆண்டவன் எப்பவும் உன் பின்னாலயே இருப்பான்..
  7. பணக்காரங்க பழிவாங்க ஆயிரம் வழி இருக்கு… ஏழைங்க பழிவாங்க ஒரே வழிதான் இருக்கு சீவிடுவேன்…
  8. மனிதன் தான் பணத்தை சம்பாதிக்கனும் பணம் மனிதனை சம்பாதிக்க கூடாது…
  9. பொண்டாட்டிய புருசன் மதிக்கலேன்னா நரகம்… புருஷனை பொண்டாட்டி மதிக்கலேன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நரகம்…
  10. பணத்த விட அன்பு பெருசு…

ஆஸ்திய விட அன்பு பெருசு…

  1. ரவுடிகளுக்கு இந்த உடம்பு அடங்காது… ஏன்னா இது மூட்டை தூக்கின உடம்பு…
  2. எப்போதும் தன்னந்தனியா நின்று ஜெயிப்பது தான் என் வழக்கம்…
  3. கவலையை மறக்க மனுஷன் குடிக்க ஆரம்பிச்சா இந்த உலகமே குடிக்க வேண்டியது தான்…
  4. வீடு சொத்து பணம் இருக்கறவன் பணக்காரன் இல்ல… நல்ல தாய் தந்தை, நல்ல மனைவி, நல்ல குழந்தை இருக்கிறவன் தான் பணக்காரன்…
  5. எதையும் முதல்ல வாங்கிக்குவேன்… அப்புறந்தான் திருப்பிக் கொடுப்பேன்… அன்பும் சரி, அடியும் சரி…
  6. உயிர் இருக்கிற வரைக்கும் இந்த உடல் இங்குதான் நடமாடும்… இறந்த பிறகு என் ஆவி நடமாடும்…
  7. நான் நினைச்சா தலைவன் இடத்துக்கு சுலபமா வந்துடுவேன்… ஆனா நான் தொண்டன் தான். எப்போதும் தொண்டன் தான்…
  8. உதவி செய்யணுங்கற எண்ணம் இருந்தால் ஆண்டவன் எண்ணி கொடுக்கமாட்டான் அள்ளிக் குடுப்பான்…
  9. பொம்பள எவ்ளோ படிச்சிருந்தாலும் எவ்ளோ பெரிய வேலையில இருந்தாலும் வீட்டு வேலை செய்யாதவ பொம்பள இல்ல…
  10. ஒரு தப்பை தண்டிச்சு பல கெட்ட காரியங்கள் நடக்க காரணமா இருக்கிறதவிட ஒரு தப்பை மன்னிச்சு பல நல்ல காரியங்கள் நடக்க காரணமா இருக்கலாம்…
  11. பொம்பளைய மதிக்காதவன் ஆம்பள இல்ல… ஆம்பளய மதிக்காதவன் பொம்பள இல்ல… என்ன தான் துணிச்சல் இருந்தாலும் பெண்கள் பொறுமையா இருக்கணும், அப்பதான் பெருமையா வாழ முடியும்…தந்தை, கணவன், மகன் இவங்ககிட்ட ஒரு பெண் தோத்தா அது தோல்வியில்லை… துக்கம் சந்தோசம் இரண்டையும் ஒரே மாதிரி ஏத்துக்கிறவதான் பெண்…
  12. அண்ணாமலை போடுவது நியாயக் கணக்கு… கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா இருக்கும்…
  13. சொந்த பிரச்சினைக்காக பந்த்துங்கற பேர்ல அரசாங்க சொத்தை நாசப்படுத்தினீங்க… இப்ப உனக்கு விழுந்த அடி உன் தலைவனுக்கு விழும் ஜாக்கிரதை…
  14. எல்லோரும் எதிர்பார்க்கிறத நான் செய்ய மாட்டேன்… நான் செய்யும்போது யாரையும் எதிர்பார்க்க மாட்டேன்…
  15. கடன் வாங்கறதும் தப்பு, கடன் கொடுக்கறதும் தப்பு. இரண்டிலுமே நிம்மதி இருக்காது.
  16. உன் வாழ்க்கை உன் கையில்
  17. ஜப்பான்காரன் வேலை செய்யலனா செத்துருவான்… சீனாக்காரன் சூதாடலைன்னா செத்துருவான்… இங்கிலீஷ்காரன் தன்னை பெருமையா நினைக்கலேன்னா செத்துருவான்… இந்தியாக்காரன் பேசலன்னா செத்துருவான்..
  18. நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான்… கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கைவிட்ருவான்…
  19. நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி
  20. என்கிட்ட இருக்கற கூட்டம் நானா சேர்த்த கூட்டமில்ல அன்பால தானா சேர்ந்த கூட்டம்…
  21. நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது… ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்…
  22. கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திருப்பி வாங்கி பழக்கமில்லை…
  23. ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்…
  24. மீசை முளைத்தவனெல்லாம் ஆம்பள இல்ல… அப்பா, அம்மா சொத்துல வாழாம சொந்தமா உழைச்சு முன்னேறுகிறவன் தான் மீச வச்ச ஆம்பள…
  25. என் வழி தனி வழி…
  26. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிற எதுவும் நிலைக்காது…
  27. பொம்பளைக்கு பொறுமை வேணும் அவசரப்படக் கூடாது… அடக்கம் வேணும், ஆத்திரப்படக் கூடாது… அமைதி வேணும், அதிகாரம் பண்ணக் கூடாது… கட்டுப்பாடு வேணும், கத்தக் கூடாது…

பயபக்தி வேணும், பஜாரித்தனம் கூடாது… மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கனும்…

  1. நீங்க ஒரு ஆம்பிளய கல்யாணம் பண்ண ஆசைப்படுறிங்க… நான் ஒரு பொம்பளைய கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்… அந்த பொம்பள நீங்க இல்ல…
  2. என்கிட்ட நிறைய ஆள் பலம் இருக்கு… ஆனா அவர்கள நான் சுயநலத்திற்கு பயன்படுத்தினது இல்ல…
  3. நான் தனி ஆள் இல்ல…
  4. தெரியாம செய்த தவறுக்கு மன்னிப்பு உண்டு…

தெரிஞ்சே செய்ற தவறுக்கு மன்னிப்பு கிடையாது…

  1. அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது…
  2. பொம்பள புள்ளிங்க ஊர் சுத்துனா கெட்டு போயிடுவாங்க… ஆம்பள புள்ளைங்க வீட்ட சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க…
  3. இந்த பாபாவுக்கு சல்யூட் அடிக்கவும் தெரியும், சவுக்கால் அடிக்கவும் தெரியும்…
  4. அன்பா பழகினா அடங்கிப் போவேன்… அதிகாரம் பண்ணினா அடக்கிட்டுப் போவேன்…
  5. லகலகலகலகலகலக…
  6. பேரைக் கேட்டாலே சும்மா அதிருது இல்ல…
  7. சாகுற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வாழ்ற நாள் நரகமாயிடும்…
  8. கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும்… சிங்கம் சிங்கிளாத் தான் வரும்…
  9. மகிழ்ச்சி!

 

Related Articles

ஜியோ போன் 2வில் வாட்சப், பேஸ்புக், யூ டி... இந்தியாவிலயே அதிக ஜிஎஸ்டி வரி கட்டி வரும் நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் விளங்கி வருகிறது. ஜியோ இலவச இணைய சேவை திட்டத்தின் மூலம் இந்தியா முழுக்க பெரும்ப...
செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரஜினி கட்சி ... கடந்த டிசம்பர் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வர...
உத்தர பிரதேசத்தில் எண்பது ஆண்டுகளுக்குப்... உத்திரபிரதேசத்தில் நடந்து வரும் சாதி ஆதிக்கம் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. சக மனிதனை ஜாதியின் பெயரில் பொதுவெளியில் நிர்வாணமாக்கி அ...
ஹெச். வினோத்! – இவர் வெற்றிமாறனும்... வேலூர் மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட இயக்குனர் ஹெச். வினோத், ஆரம்பகாலத்தில் ஆர். பார்த்திபனிடம் பச்சைகுதிரை என்ற படத்திலும், விஜய் மில்டனின் கோலி சோடா...

Be the first to comment on "ரஜினியின் 100 மரணமாஸ் வசனங்கள் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*