இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1979ல் நடந்துள்ளது. இதுவரை இருபத்திமூன்றாம் பதிப்புகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்தப் புத்தகம் தான் வைரமுத்துவிற்கு பாடலாசிரியர் வாய்ப்பு வாங்கித் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புத்தகத்திலிருந்து சில கவிதைகள் :
- உறைக்குள் இருந்தால் தான் அதற்கு வாள் என்று பெயரா?
- குருவிகள்
தொலைக்காட்சிக் கோபுரத்தில் கூடுகட்டுவதால் மட்டுமே
திரையிலுங்கூடத் தெரியுமா என்ன?
- முள்ளை முள்ளால் எடுப்பது
முன்னோர் வழிதான்!
ஆனால்
கண்ணுக்குள் விழுந்த முள்ளுக்கு
அந்தப்
பழைய தத்துவம் பயன்படுமா?
- பொய்க்கு எப்போதும்
முரசடித்தே பழக்கம்
உண்மை எப்போதும்
புல்லாங்குழல் வாசிப்பதே வழக்கம்.
- ஆகாயத்தில்
வானவில்லுக்கு அடித்த
வர்ணம்
காய்ந்து விட்டதா என்று
தொட்டுப் பார்க்க
எம் விரல் நீள்வதில்லை
ஏழையின்
கண்ணீரைத் துடைத்துக்
காயவைக்கத்தான்
பத்து விரல்களும்
படபடக்கின்றன…
- ‘பாவம் மனைவி’
இந்த
இல்லறக் கிரிக்கெட்டில்
கட்டிலறைக்கும்
சமையலறைக்கும்
ரன்கள் எடுத்தெடுத்தே
ரணமாய்ப் போனாள்.
- மனைவியின் புன்னகை
திருவோட்டையும்
ஒரு
மகுடமாய் மாற்றிவிடும்;
அவள் கண்ணீரோ
மகுடத்தையும்
ஒரு
திருவோடாய் மாற்றிவிடும்.
- கல்லெல்லாம்
சிற்பமான பூமியில் தான்
சிற்பம் போன்ற செல்வியரெல்லாம்
கல்லாகி ஆகியே காலங்கழித்தார்கள்!
- கதிரவன் மரணம் கூடக்
கண்ணுக்கு அழகுதான்
ஓ
செத்தாலும் மேன்மக்கள்
மேன்மக்களே
- வானம் ஒரு நூலகம்
இன்னும்
வாசகர் தேவை
- சுதந்திர
வெளிச்சம்…
சேரியில்
விழாமல்…
மாளிகை
நிழல்களே…
மறைத்து
விட்டன…
தலைப்புகள் :
- திருத்தி எழுதிய தீர்ப்புகள்
- நடத்துங்கள்
- வித்தியாச அன்னங்கள்
- அந்தி
- வெயில் மறைவுப் பிரதேசங்கள்
- உறக்கம் கலைவதெப்போ?
மயக்கம் தெளிவதப்போ?
- இலக்கிய விபத்து
- உரைப்பதற்கு ஒன்றுண்டு
- விலக்கி வைக்கப்பட்டவர்கள்
- வடுகப்பட்டி முதல் பெரியகுளம் வரை
- வீடுபேறு
- பாரதி நினைக்கப்படுகிறான்
- அது ஒரு கல்வெட்டு
- ஒப்பந்தம்
- செவிடன் காதில்
- ஒரு பிரளயம் உசுப்பாமலா
- தன்மானம்
- பாலுக்கும் காவல்
- பாரதிதாசன் – ஒரு பார்வை
- இலையுதிர் காலம்
- கம்பனுக்கு ஒரு கேள்வி
- நான் காதலுக்காக வழக்காடுகிறேன்
- ராத்திரி விழிக்கட்டும்
- பேச்சு வியாபாரி
- நீ கிளையல்ல கீற்று
- நட்சத்திரங்கள்
- அது எந்தத் தை?
- நிறமொருநாள் சிவக்கும்
- காத்திருப்பு
- மன்னிப்பு பரிகாரமல்ல
- இயற்கையோடு இயைந்த வாழ்வு
- என்னை உனக்குள் தேடிய போது
- கணக்குப் பார்க்கையில்
- மரபு மாறவில்லைதானே
- தேர்தல் வாக்குறுதிகள்
- நம்பலாம்
- மெழுகுவத்தி
- கிளிஞ்சல்
- கண்ணீர் மருந்தாமோ?
- ஊகித்துக் கொள்ளுங்கள்
- எதார்த்தம்
- அவன் கலைமகளுக்குப் பாடஞ் சொல்லுகிறான்
- ஒரு மனிதகுமாரன் சிந்திக்கிறான்
என்ற தலைப்புகளின் கீழ் அற்புதமான பல கவிதைகளை படிக்கலாம். இந்த புத்தகத்தின் விலை ரூ 85 மட்டுமே.
Be the first to comment on "வைரமுத்துவின் “திருத்தி எழுதிய தீர்ப்புகள்” கவிதை தொகுப்பு ஒரு பார்வை!"