அப்பா விஸ்வநாத். இராணுவ வீரர். 24 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றி உள்ளார். அம்மா விசாலாட்சி.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ராணுவ வீரராக சேர முடிவுசெய்து பெங்களூரில் அல்சூர் ராணுவ முகாமில் ஆறுமாதம் கார்டன் பாயாக இருந்தார்.
இவருடைய அப்பாவின் மறைவு இவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ஆகும்.
இவருடைய ஹேர் ஸ்டைல் தான் இவருக்கு சோறு போடுகிறது. எந்தப் படத்திற்காகவும் முடிவெட்டாதவர் பரியேறும் பெருமாள் படத்திற்காக முடி வெட்டினார்.
தர்ம பிரபு, கூர்கா ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து தர்மம் குறும்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வினின் இயக்கத்தில் உருவாகும் மண்டேலா படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
தர்ம பிரபு படத்தில் வசனம் எழுதியவர் ராஜ சேகர் இயக்கும் ஒரு படத்திற்கு கதை எழுதி உள்ளார்.
நடிகர் சந்தானத்தைப் போல இவரும் விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் இருந்து வந்தவர். அது மட்டுமின்றி லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
சினிமா வாய்ப்புக்காக 100 கம்பெனிகளில் ஏறி இறங்கி என்று 16 வருடங்கள் போராடியே இந்த நிலைமைக்கு வந்துள்ளார்.
இவர் நடித்த படங்களிலயே இவருக்கு மிகவும் நடித்த படம் ஆண்டவன் கட்டளை. ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் காமெடியனாக நடிப்பதையே இவர் மிகவும் விரும்புகிறார்.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று முடிவோடு இருக்கிறார்.
Related Articles
ஆடுகளம் “பேட்டைக்காரன்” மாதி... இயக்குனர் வெற்றிமாறனின் 2வது படம். ஆறு தேசிய விருதுகளை குவித்த படம் "ஆடுகளம்." இந்தப் படத்தில் தனுஷ், கிஷோர், கவிஞர் ஜெயபாலன், டாப்ஸி, முருகேசன் ஆகியோ...
செல்போன் டவர் தெரியும், சீனத்தின் காற்று... இன்று செல்போன் டவர் இல்லாத கிராமங்கள் குறைவு. செல்போன் டவர் வைத்துத் தான் முகவரி அடையாளம் சொல்லும் அளவுக்கு அவை பெருகி விட்டன. கதிர்களைப் பரப்பிக்கொண்...
நேபாள விமான விபத்தில் 49 பேர் பலி... 71 பேருடன் பயணித்த விமானம் ஒன்று நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கியதில் 49 பேர் கொல்லப்பட்டு இருக்க...
Wings App வழியாக இந்தியாவின் முதல் இணைய ... இந்தியாவிலயே முதன் முறையாக இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது பிஎஸ்என்எல்.பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் விங்க்ஸ் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு இந்...
Be the first to commenton "யோகி பாபு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!"
Be the first to comment on "யோகி பாபு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!"