சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்!

Some interesting information about superstar Rajinikanth!
 1. சூப்பர் ஸ்டார், ஸ்டைல் மன்னன், வசூல் சக்ரவர்த்தி என்றெல்லாம் புகழ் பெற்றுள்ள ரஜினிகாந்த் 12 – 12 – 1950 அன்று பெங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் ராமோஜிராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ரமாபாய். ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ். சத்ய நாராயண ராவ், நாகேஸ்வர ராவ் ஆகியோர் இவரது அண்ணன்கள்.
 2. சின்ன வயதில் பெங்களூர் பசுவங்குடியில் அமைந்துள்ள பிரீமியர் மாடல் ஸ்கூல் என்ற பள்ளியில் ரஜினிகாந்த் சேர்க்கப் பட்டார். படிப்பைவிட விளையாட்டிலயே அவருக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. ஏழு வயதிலயே தாயை இழந்தார். கட்டுப்பாடு இல்லாமல் வளர்ந்ததால் முரட்டு சுபாவம் ஏற்பட்டது. எனினும் படிப்பில் சோடை போகாமல் எஸ். எஸ். எல். சி யில் தேறினார்.
 3. ரஜினிகாந்த் தன்னைப் போல் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று அவர் தந்தை ஆசைப்பட்டார். ரஜினிகாந்த் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பவில்லை. ஆயினும் அவரை கட்டாயமாக கல்லூரியில் சேர்த்து விட்டனர்.
 4. சினிமா மோகம் கொண்ட ரஜினிகாந்த் கல்லூரியில் கட்டுவதற்காக கொடுத்த 200 ரூபாயை எடுத்துக் கொண்டு சென்னைக்கு ஓடினார். சினிமாவில் சேருமுன் ஒரு வேலை தேடிக்கொள்ள விரும்பி மூட்டை தூக்கினார். தச்சுப் பட்டறையில் வேலை பார்த்தார். அந்த வருமானம் போதாததால் பெங்களூர் திரும்பினார்.
 5. அங்கு முதலில் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்தார். பிறகு தச்சுப் பட்டறை, ஒர்க் ஷாப், லாரி ஷெட் என்று பல இடங்களில் வேலை பார்த்துவிட்டு மீண்டும் மூட்டை தூக்கினார். கிடைக்கும் பணத்தை கொண்டு சினிமா பார்ப்பார் குடிப்பார்.
 6. தன் தம்பி நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று விரும்பிய சத்திய நாராயணா ரஜினியை பஸ் கண்டக்டர் வேலையில் சேர்த்து விட்டார். கண்டக்டர் வேலை பார்க்கும் போதே ரஜினி ஸ்டைலாக இருப்பார். அவர் சினிமாவில் சேர்ந்தால் பெரிய நடிகராகலாம் என்று நண்பர்கள் அவர் ஆசையை தூண்டி விட்டனர். அதனால் கண்டக்டர் வேலையை உதறிவிட்டு சென்னையில் உள்ள நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார். அங்கு படிக்கும் போது கல்லூரியில் உரை நிகழ்த்த வந்த இயக்குனர் கே. பாலச் சந்தரை சந்தித்தார்.
 7. ரஜினிகாந்த் என்ற இளைஞனுக்குள் ஒரு சூப்பர்ஸ்டார் ஒளிந்திருப்பதை தெரிந்துகொண்ட பாலச்சந்தர் தன்னுடைய ” அபூர்வ ராகங்கள் ” படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளித்தார். சிறு வேடம் என்றாலும் முக்கியமான வேடம். யார் அந்த புதுமுகம் என்று ரசிகர்கள் கேட்கிற அளவுக்கு ரஜினி நடித்தார்.
 8. பின்னர் பாலசந்தர் தன்னுடைய மூன்று முடிச்சு, தப்பு தாளங்கள் ஆகிய படங்களில் கதாநாயகன் வேடம் கொடுத்தார். படிப்படியாக ரஜினி முன்னேறினார். இயக்குனர் ஸ்ரீதர் தயாரித்த இளமை ஊஞ்சலாடுகிறது என்ற படத்தில் கமல்ஹாசன், ரஜினி இருவருக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப் பட்டது.
 9. மசாலா படங்களில் நடித்து வந்த ரஜினி முள்ளும் மலரும் படத்தில் ஷோபனாவின் அண்ணனாக மனத்தை தொடும் விதத்தில் நடித்தார். பாலாஜி தயாரித்த பில்லா, ஏ வி எம்மின் முரட்டுக்காளை முக்தா பிலிம்சின் பொல்லாதவன், மகேந்திரனின் ஜானி போன்ற படங்கள் ரஜினியை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தின.
 10. ரஜினிகாந்தின் 100 வது படம் ஸ்ரீராகவேந்திரா.
 11. மாறுபட்ட வேடங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என்று அவர் நிரூபித்த படங்கள் ” ஆறிலிருந்து அறுபது வரை ” , ” எங்கேயோ கேட்ட குரல் “.
 12. சிவாஜி புரொடக்சன்ஸ் ” மன்னன் ” , பாலசந்தரின் அண்ணாமலை ஆகியவை சூப்பர்ஹிட் படங்களாக அமைந்தன. ஆர். எம். வீரப்பன் தயாரித்த பாட்சா படத்தின் மூலம் வெற்றியின் சிகரத்துக்கே சென்றார் ரஜினி.
 13. பின்னர் எம் ஜி ஆர் பாணியில் தன் இமேஜை உயர்த்தக் கூடிய படங்களில் மட்டும் நடிப்பது என்ற முடிவு எடுத்து அண்ணாமலை, முத்து, படையப்பா ஆகிய படங்களில் நடித்தார். இதில் முத்து படம் டான்சிங் மகாராஜா என்ற பெயருடன் ஜப்பானில் திரையிடப்பட்டு சக்கை போடு போட்டது.
 14. படையப்பா வசூலில் சரித்திரம் படைத்தது. ரஜினி நடித்த இந்து படமான அந்தா கானூன் பெரும் வெற்றி பெற்றது. ரெட் ஸ்டோன் என்ற ஆங்கில படத்தில் இவரே வசனம் பேசி நடித்தார்.
 15. ரஜினிகாந்த் லதா திருமணம் 26- 2- 1981 ல் திருப்பதியில் நடந்தது. இவர்களுக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்ற இரண்டு புதல்வியர் உள்ளனர். இவர்களில் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை மணந்து கொண்டார். சவுந்தர்யா அப்பாவை போலவே திரைப்பட உலகில் தடம் பதித்தார். கோச்சடையான் என்ற படத்தை இயக்கி உள்ளார்.
 16. சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். 1996 ல் நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அவர் தி மு க – தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக டெலிவிசனில் பேசியது அந்தக் கூட்டணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.
 17. சென்னையில் கட்டிய ரூ 10 கோடி மதிப்புள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை தமிழக மக்களுக்கு பிற்காலத்தில் தானமாக வழங்குவதாக ரஜினிகாந்த் உயில் எழுதி வைத்திருப்பது குறிப்பிடத் தக்கது.தெய்வ பக்தி மிக்க நடிகர் இவர். வயது ஆக ஆக ஆன்மீகம் அவரை அதிகம் ஆட்கொண்டு வருகிறது. மௌனமே என் ஆயுதம் என்கிறார்!

 

Related Articles

அசுரன் படத்தில் உங்களுக்குப் பிடித்த வசன... கடந்த ஆயுத பூஜை அன்று வெளியாகி இன்றுவரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அசுரன். இந்தப் படத்தில் உள்ள வசனங்கள் வட்டார வழக்கு உச்சரி...
ரகசிய ஆவணங்களைக் கசியவிட்ட இந்திய விமானப... இந்திய விமானப்படையின் ரகசியங்களைக் கசிய விட்ட குற்றத்திற்காக இந்திய விமானப்படையில் குழு கேப்டனாக பணியாற்றி வரும் அருண் மர்வாஹா என்பவர் கைது செய்யப்பட்...
பகுத்தறிவுள்ள அம்மாக்களால்தான் சாதி, மத,... இயக்குனர் ராம் பத்திரிக்கையாளர் ஜெயராணி கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஜோதிமணி இசை தமிழ்நதி ஆதவன் தீட்சண்யா தமயந்தி ஜி. ...
தூத்துக்குடி போராட்டத்தின் போது உயிரிழந்... ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொண்ணூற்று ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. சரியாக நூறாவது நாள் வரும் போது எந்த முன் அறிவிப்பும் இன்றி, சரியான...

Be the first to comment on "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*