பேஸ்புக்கில் புதிதாக வரவிருக்கிறது டவுன்வோட் பட்டன்

பேஸ்புக் பயனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான டிஸ்லைக் (DisLike) பட்டனுக்கு மாற்றாக அந்த நிறுவனம் நிறைய புதிய மேம்படுத்தல்களைச் செய்து வருகிறது. பேஸ்புக் பதிவுகளில் சம்பந்தமே இல்லாமல் கருத்து சொல்பவர்கள், மனதைப் புண்படுத்தும் விதத்தில் பின்னூட்டம் இடுகிறவர்களைக் குறிவைத்து நிறைய ஆராய்ச்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டவுன்வோட் (Downvote) என்னும் முறையைப் பரிசோதனை செய்து பார்த்து இருக்கிறது பேஸ்புக்.

அமெரிக்காவில் மட்டும்

இந்த டவுன்வோட் என்னும் முறையை மற்றுமொரு செய்தி ஒருங்கிணைப்பு நிறுவனமான ரெட்டிட் (Reddit) பயன்படுத்தி வருகிறது. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் ஆண்ட்ராய்டு திறன்பேசி பயன்படுத்தும் 5% பயனாளிகளுக்கு மட்டும் இந்த டவுன்வோட் பட்டன் தெரியும் வகையில் பரிசோதனை அடிப்படையில் பேஸ்புக் நிறுவனத்தால் பார்க்கப்பட்டது. பரிசோதனை அடிப்படையில் மட்டும் செய்து பார்க்கப்பட்ட இந்த முயற்சியை விரிவாக்கம் செய்யும் எண்ணம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

டிவிட்டரில் இது குறித்து விவாதித்துக்கொண்ட பேஸ்புக் பயனாளிகள், டிஸ்லைக் பட்டனுக்கு இணையான ஒன்றாகவே டவுன்வோட் பட்டன் இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்கள்.

‘இது டிஸ்லைக் பட்டன் போல அல்ல. பயனாளிகள் தங்கள் பதிவுகளுக்கு இடப்படும் பின்னூட்டங்களின் மீது தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும் வகையிலேயே டவுன்வோட் பட்டன் உருவாக்கும் எண்ணம் இருக்கிறது’ என்று பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தேர்வு செய்யப்பட்ட 5% பயனாளிகளுக்கு தங்கள் பதிவுகளுக்குக் கீழே வழக்கமாகக் காணப்படும் லைக், ரிப்ளை ஆகிய பட்டன்களுக்கு அருகே புதிதாக டவுன்வோட் என்ற பட்டனும் இடம்பெற்று இருந்தது. டவுன்வோட்  பட்டனை அழுத்தும் போது, பிறர் உங்களது பதிவுகளுக்கு இடப்பட்டிருக்கும் பின்னூட்டங்களின் தரத்தைத் தவறானது அல்லது தாக்குதல் என்ற ஏதாவதொரு வகைமையின் கீழ் மதிப்பிடலாம்.

கடந்த பிப்ரவரி 2015 ஆம் ஆண்டு டிஸ்லைக் பட்டன் குறித்து பயனாளிகளின் எதிர்பார்ப்புக்கு இணங்கி பேஸ்புக் நிறுவனம் எமோஜி (Emoji) என்னும் முறையை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

உத்தர பிரதேசத்தில் எண்பது ஆண்டுகளுக்குப்... உத்திரபிரதேசத்தில் நடந்து வரும் சாதி ஆதிக்கம் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. சக மனிதனை ஜாதியின் பெயரில் பொதுவெளியில் நிர்வாணமாக்கி அ...
தன்னுடைய சொந்தக் கட்சியையே தோற்கடித்த மல... தேவைப்பட்டால் நான் என் சொந்தக் கட்சியைக் கூட எதிர்ப்பேன் என்று கமல் தெரிவித்து உள்ளார். அதை வைத்து பல மீம் பேஜ்கள் கலாய்த்து வருகின்றனர்.ஆனால் உண்...
பெண்களின் மார்பகங்கள் தமிழ் சினிமாவில் வ... தனக்கென பெரிய அளவில் ரசிகர் படை வைத்திருக்கும், குறிப்பாக பெண் ரசிகர்கள் வைத்திருக்கும் விஜய் அவர்களின் படங்களில், பெண்களின் மார்பகங்களை எப்படி எல்லாம...
விபத்துக்குள்ளான லாரி! டிரைவரை காப்பாற்ற... ஒரு லாரி விபத்துக்கு உள்ளானா போதுமே! உடனே அதுல இருக்குற பொருள திருட கூட்டம் கூட்டமா வந்துடுவிங்களே! - இந்த வரிகளை ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் வாசித்துப் ...

Be the first to comment on "பேஸ்புக்கில் புதிதாக வரவிருக்கிறது டவுன்வோட் பட்டன்"

Leave a comment

Your email address will not be published.


*