பேஸ்புக்கில் புதிதாக வரவிருக்கிறது டவுன்வோட் பட்டன்

பேஸ்புக் பயனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான டிஸ்லைக் (DisLike) பட்டனுக்கு மாற்றாக அந்த நிறுவனம் நிறைய புதிய மேம்படுத்தல்களைச் செய்து வருகிறது. பேஸ்புக் பதிவுகளில் சம்பந்தமே இல்லாமல் கருத்து சொல்பவர்கள், மனதைப் புண்படுத்தும் விதத்தில் பின்னூட்டம் இடுகிறவர்களைக் குறிவைத்து நிறைய ஆராய்ச்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டவுன்வோட் (Downvote) என்னும் முறையைப் பரிசோதனை செய்து பார்த்து இருக்கிறது பேஸ்புக்.

அமெரிக்காவில் மட்டும்

இந்த டவுன்வோட் என்னும் முறையை மற்றுமொரு செய்தி ஒருங்கிணைப்பு நிறுவனமான ரெட்டிட் (Reddit) பயன்படுத்தி வருகிறது. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் ஆண்ட்ராய்டு திறன்பேசி பயன்படுத்தும் 5% பயனாளிகளுக்கு மட்டும் இந்த டவுன்வோட் பட்டன் தெரியும் வகையில் பரிசோதனை அடிப்படையில் பேஸ்புக் நிறுவனத்தால் பார்க்கப்பட்டது. பரிசோதனை அடிப்படையில் மட்டும் செய்து பார்க்கப்பட்ட இந்த முயற்சியை விரிவாக்கம் செய்யும் எண்ணம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

டிவிட்டரில் இது குறித்து விவாதித்துக்கொண்ட பேஸ்புக் பயனாளிகள், டிஸ்லைக் பட்டனுக்கு இணையான ஒன்றாகவே டவுன்வோட் பட்டன் இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்கள்.

‘இது டிஸ்லைக் பட்டன் போல அல்ல. பயனாளிகள் தங்கள் பதிவுகளுக்கு இடப்படும் பின்னூட்டங்களின் மீது தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும் வகையிலேயே டவுன்வோட் பட்டன் உருவாக்கும் எண்ணம் இருக்கிறது’ என்று பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தேர்வு செய்யப்பட்ட 5% பயனாளிகளுக்கு தங்கள் பதிவுகளுக்குக் கீழே வழக்கமாகக் காணப்படும் லைக், ரிப்ளை ஆகிய பட்டன்களுக்கு அருகே புதிதாக டவுன்வோட் என்ற பட்டனும் இடம்பெற்று இருந்தது. டவுன்வோட்  பட்டனை அழுத்தும் போது, பிறர் உங்களது பதிவுகளுக்கு இடப்பட்டிருக்கும் பின்னூட்டங்களின் தரத்தைத் தவறானது அல்லது தாக்குதல் என்ற ஏதாவதொரு வகைமையின் கீழ் மதிப்பிடலாம்.

கடந்த பிப்ரவரி 2015 ஆம் ஆண்டு டிஸ்லைக் பட்டன் குறித்து பயனாளிகளின் எதிர்பார்ப்புக்கு இணங்கி பேஸ்புக் நிறுவனம் எமோஜி (Emoji) என்னும் முறையை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

குழந்தைகளிடம் கேள்வி கேட்ட சிவகார்த்திகே... பசுமரத்தாணி போல என்பதற்கேற்ப ஒரு குழந்தை அதன் பத்து வயதிற்குள் என்ன என்ன பழக்கங்களை கற்றுக்கொள்கிறது? என்ன மாதிரியான சம்பங்களை பார்க்கிறது? என்ன மாதிர...
எஸ் ராமகிருஷ்ணனின் “கடவுளின் நாக்க... தின இந்து நாளிதழலில் தொடராக வந்த கடவுளின் நாக்கு கதைகளின் தாயகம், மனிதன் நல்லவனா?, அன்பின் அடையாளம், காட்டின் அரசன்!,சிலந்திப் பெண்!, கண் திறவுங்கள், ...
ரொட்டி சாப்பிட்டுருப்பீங்க, ரோபோ கையால ச... இந்தியாவிலேயே முதல் முறையாக ரோபோக்களை கொண்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் வகையில் ஒரு உணவகம் வடிவகைப்பட்டுள்ளது. மொமொ (Momo) என்று பெயரிடப்பட்டுள்...
கே. என். சிவராமனின் உயிர்ப்பாதை புத்தகம்... ஆளப்போறான் தமிழன் என்று இன்றைய காலகட்டத்தில் நாம் பெருமை பேசித் திரிகிறோம். வாட்சப்பிலும் பேஸ்புக்கிலும் தமிழ் தமிழ் என்று கொந்தளிக்கிறோம். இவர்களில் ...

Be the first to comment on "பேஸ்புக்கில் புதிதாக வரவிருக்கிறது டவுன்வோட் பட்டன்"

Leave a comment

Your email address will not be published.


*