சினிமா வாய்ப்புக்காக காத்திருந்து காத்திருந்து வாழ்க்கையை தொலைத்த இளைஞர்கள்!

சினிமா என்பது ஒரு மிகப்பெரிய ஊடகம், சினிமா என்பது ஒரு மிகப்பெரிய மாயவலை என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது சினிமா என்றால் பணம் புழங்கும் ஒரு இடம் என்று ஒரு தோற்றம் எல்லோர் கண்களுக்கும் தெரிகிறது. அதனால் சினிமா மீது எல்லோருக்கும் மோகம் வந்து விடுகிறது. சிலர் அதை அந்த மோகத்தை ஒரு கட்டத்தில் அதிகமாக விடாமல் கட்டுப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியாத சில இளைஞர்கள் சினிமாவில் நுழைந்து எப்படியாவது சாதித்துவிடலாம் என்று தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கிறார்கள். 

இப்படி தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பவர்கள் ஒரு சில தவறான முடிவுகள் எடுக்கும் வாய்ப்பு அமைந்து  விடுகிறது. அவர்கள் வாய்ப்பை பெறுவதற்கு ஆண்டுகள் ஆகின்றன. ஆண்டுகளுக்கு என்றால் ஒரு ஆண்டு அல்லது நான்கு ஆண்டுகள் ஐந்து ஆண்டுகள் அந்த வாய்ப்பிற்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.  இந்த நான்கு ஆண்டுகளும் அவர்கள் வீட்டில் வாங்கும் திட்டுக்கு அளவே இல்லை.  சினிமாலாம் நம்ம குடும்பத்துக்கு செட்டாகுமா நீ கொஞ்சமாவது யோசிக்கிறியா குடும்பத்தோட நிலைமையை புரிந்து கொண்டிருக்கிறாயா? அம்மா அப்பா எவ்வளவு கஷ்டப்படுறாங்க என்று பார்க்கும் ஒவ்வொருவரும் அறிவுரை சொல்லி சொல்லி அறுத்து தள்ளிவிடுவார்கள்.

அத்தனை மனிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அத்தனை பேர் மனதை புண்படுத்திய போதிலும் அந்த இளைஞர்கள் ஒருபோதும் சினிமாவை விட மாட்டேன் என்று பிடிவாதமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சம்பாதிப்பது சொற்ப வருமானம் தான்.  சொற்ப வருமானத்தையும் வீட்டிற்கு கொடுக்க முடியாமல் தன்னுடைய செலவுகளுக்கும் பயன்படுத்த முடியாமல் அந்த சொற்ப வருமானத்திலும் புத்தகங்கள் வாங்குவது எந்த படம் ரிலீஸானாலும் தியேட்டருக்கு ஓடிப் போய் பார்ப்பது என்று காசை தொலைத்துக் கொண்டே இருக்கின்றனர்.  அப்படி உண்மையாக உழைத்த போதிலும் தனக்கு வாய்ப்பு கொடுத்தவர்களுக்கும் நேர்மையாக இருந்த போதிலும் அவர்களுக்கு வாய்ப்பு சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

காரணம் அதற்கு அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதே. ஒரு கட்டத்தில் வழிகாட்டுதல்கள் யார் யார் என்று தேடித்தேடி அலைந்து ஓய்ந்து போகிறார்கள் பயந்து போன பின்பு யாரும் எங்களுக்கு வழிகாட்ட வேண்டாம், சினிமா எல்லோருக்கும் பொதுவானது சினிமாவிற்கு செல்ல நானே ஒரு வழியை போட்டு போய்க் கொள்கிறேன் என்று சில இளைஞர்கள் துடிப்பாக பாதை அமைத்துக் கொண்டு இருக்கின்றனர். 

அப்படிப்பட்ட இளைஞர்களை தான் சில போலீ சினிமா கம்பெனிகள் பயன்படுத்திக்கொள்கின்றன.  சினிமாக் கம்பெனிகளின் விளம்பரதாரர்கள் அதிலிருக்கும் ஊழியர்கள் போன்றோர் அந்த இளைஞர்களின் மனங்களை கவர்ந்து மூளைச்சலவை செய்து எங்களுடன் சேர்ந்து பணியாற்றினால் விரைவில் நல்ல நிலைமைக்கு வரலாம் பெரிய பெரிய இயக்குனர்களிடம் வாய்ப்பு வாங்கித் தருகிறோம் என்றெல்லாம் கூறி அழைத்துச் செல்கின்றனர். 

ஆர்வக்கோளாறில் அந்த இளைஞர்களும் அவர்களோடு சேர்ந்து கொள்கின்றன.  சேர்ந்த பிறகு தங்களுடைய ஒட்டு மொத்த பலத்தையும் மனநலத்தையும் ஒன்று திரட்டி அவர்களுக்காக மாங்குமாங்கென உழைத்து தள்ளுகிறார்கள். வருமானம் இல்லாமல் சரியாக சாப்பிடாமல் எப்படியாவது கிடைத்திருக்கும் இந்த சின்ன வாய்ப்பை பயன்படுத்தி நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொள்கின்றனர். அப்படி அவர்கள் மாடு மாதிரி உழைப்பது ஒரு மாதம் இரண்டு மாதங்களுக்கு மட்டும் அல்ல கிட்டத்தட்ட ஆறு மாதக் கணக்கில் வருடக்கணக்கில் என்று அவர்கள் அந்த கம்பெனிகளுக்கு உழைத்துக் கொண்டே இருக்கின்றனர். 

இப்படி மாதக்கணக்கில் வருடக்கணக்கில் உழைக்கும் அந்த இளைஞர்களுக்கு வருமானம் எவ்வளவு இருக்கும் என்று யோசிக்கிறீர்கள்.  அந்த இளைஞர்களை திட்டி மிரட்டி மூன்று ஆட்கள் நான்கு ஆட்கள் செய்யக்கூடிய வேலையை ஒரு இளைஞனை வைத்து செய்து முடித்துவிட்டு தம்பி உனக்கு இன்னும் அனுபவம் பத்தல இன்னும் நிறைய கத்துக்க வேண்டியது இருக்கு உன்னுடைய அனுபவத்துக்கு இவ்வளவு தான் சம்பளம் கிடைக்கும் என்று மாசத்துக்கு வெறும் 4000 5000 என்று தான் கொடுக்கிறார்கள். 2020 இந்த காலகட்டத்தில் மாதத்திற்கு வெறும் 4000 5000 வாங்கினால் அந்த இளைஞனின் வாழ்க்கை என்ன ஆவது?

அந்த இளைஞர்கள் வெறுத்துப் போயி அந்த கம்பெனியில் இருந்து விலகி விடுகின்றனர்.  வெளிவந்த பிறகாவது அவர்கள் வேறு தொழிலை பார்க்கிறார்களோ குடும்பத்தை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா? அப்போதும் அவர்கள் சினிமாவை விட்டு விலகுவதில்லை எப்படியாவது சினிமாவில் ஜெயித்துவிடலாம் என்று தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் சினிமாவில் சாதித்த மனிதர்களை நெருங்கி செல்கிறார்கள். அவர்களிடம் எப்படியாவது தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளலாம் என்று முயல்கிறார்கள். அவர்கள் பங்கேற்கும் விவாத கூட்டங்கள் நிகழ்ச்சிகள் என்று எல்லா இடங்களுக்கும் தொடர்ந்து அந்த இளைஞர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். வாய்ப்பு எப்படியாவது கிடைத்துவிடும் என்று அவர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். 

சினிமாவில் சாதித்தவர்கள் என்றால் யார்? பெரிய பெரிய பிரபலங்கள் இல்லை முதல் படம் மட்டும் இயக்கியவர்கள், அந்த முதல் படத்தில் உதவி இயக்குநர்களாக, உதவி ஒளிப்பதிவாளர்கள், உதவி எடிட்டர்களாக பணியாற்றிய நபர்களைத்தான் இந்த இளைஞர்கள் பிரபலம் என்றும் சாதித்தவர்கள் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களிடம் சென்று அந்த வாய்ப்பு கிடைக்குமா அந்த வாய்ப்பு கிடைக்குமா நான் எவ்வளவோ முயற்சி செஞ்சு கிட்டு இருக்கேன் என் குடும்பம் எவ்வளவு கஷ்டம் அனுபவிக்குது என்று எவ்வளவு கெஞ்சிக் கேட்க முடியுமா அவ்வளவு கெஞ்சி கேட்கின்றனர். 

அவர்களும் தங்களை ஏதோ பெரிய சாதனையாளர்கள் போல் நினைத்துக் கொண்டு அந்த இளைஞர்களை தங்களுக்கு பின்னால் தொடர்ந்து அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றனர். இவன் தொடர்ந்து நம்ம கிட்ட கெஞ்சி கேட்கிறானா பார்ப்போம் என்று அவர்கள் அந்த வாய்ப்பு கேட்கும் இளைஞர்களை ஆராய்ந்து பார்க்கிறார்கள். 

இப்படி மாதக் கணக்கில் தன் பின்னால் அலைய விட்ட பிறகு சரி போனாப் போகுது என்று அந்த இளைஞர்களை திரும்பிப் பார்க்கிறார்கள். அவர்களிடம் பேசுகிறார்கள்.  இப்போது அந்த அப்பாவி இளைஞர்களை ஐ இவர்கள் நம்மிடம் பேசிவிட்டார்கள் நமக்கு சீக்கிரம் வாய்ப்பு கிடைத்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த சாதனையாளர்களோ உங்களுக்கு நான் பரிந்துரை செய்கிறேன் காத்திருங்கள் என்று சொல்வார்கள்.  என்னிடம் இப்போது வாய்ப்பு இல்லை.  அதனால் காத்திருங்கள் என்று சொல்வார்கள் சரி இவர்கள் உண்மையாகவே காத்திருங்கள் என்று சொல்கிறார்களே என்று அந்த இளைஞர்கள் மறுபடியும் மாதக்கணக்கில் காத்திருப்பார்கள். 

இப்படி அவர்கள் மாதக் கணக்கில் காத்துக் கொண்டே இருக்க வேலையிலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் சினிமா புத்தகங்களைப் படிப்பது சினிமா பார்ப்பது என்று தொடர்ந்து அலைந்து கொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான பணத்திற்காக ஏதாவது ஒரு குருட்டுத்தனமான கம்பெனியில் பார்ட் டைம் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அந்த பார்ட் டைம் வேலைக்கும் நியாயமாக இருக்க முடியாமல் சினிமாவைக் கற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த இளைஞர்கள். 

இப்படி தொடர்ந்து தன் குடும்பத்திலும் சொந்த மாநிலத்திலும் மானத்தை இழந்து வருமானத்தை இழந்து அதிக மன உளைச்சலுக்கு உள்ளான பிறகு,  காத்திருங்கள் என்று சொன்னால் அந்த சாதனையாளர்கள் இடம் மீண்டும் போய் அந்த இளைஞர்கள் நிற்கிறார்கள். சார் வெயிட் பண்ண சொன்னீங்களே நாம் ஒரு மாசமா வெயிட் பண்ணி இருக்கேன், நான் ஆறு மாசம் வெயிட் பண்ணி இருக்கேன் சார், சரி வெயிட் பண்ணிட்டு இருக்கோம்கிறதால சரியா எந்த வேலைக்கும் போக முடியல சார், இந்த பக்கம் புத்தகம் படிப்பதற்கு நேரம் சரியா போகுது, இன்னொரு பக்கம் திரைப்படங்கள் பார்ப்பதற்கும் சரியாக போகிறது,  இதனால் துளியும் வருமானம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன் சார் என்று அந்த இளைஞர்கள் புலம்பித் தள்ளினாலும் அந்த சாதனையாளர்கள் மறுபடியும் காத்திருங்கள் என்று சொல்கின்றனர். 

இப்படியாக ஆறு மாதங்களாக அவர்கள் காத்திருந்த போதிலும் அந்த காத்திருங்கள் என்ற வார்த்தையை அவர்கள் விடுவதாக இல்லை. அப்போதாவது கிளம்பி அவர்கள் வேறு தொழிலை பார்த்திருக்கலாம். தங்களை துரத்திவிட்ட உறவுகளை வைத்து குடும்பத்துடன் இணைந்து கொண்டு இன்னொரு வாழ்க்கையை புதுப்பித்து இருந்திருக்கலாம். ஆனால் அப்போதும் அந்த இளைஞர்கள் விடுவதில்லை சினிமா எப்படியாவது எனக்கு வாய்ப்பு கொடுக்கும் என்று மறுபடியும் மறுபடியும் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். 

மறுபடியும் வேறு வேறு மனிதர்களை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த மனிதர்கள் இவர்களை பார்த்து நீங்க நல்லா பண்றீங்க… உங்களுக்கு நல்ல அறிவு இருக்கு… நல்ல அனுபவம் இருக்கு… நான் வாய்ப்பு கிடைக்கும் போது சொல்றேன்… நீங்க அதுவரை காத்திருங்கள்… என்று சொல்கிறார்கள்.  இப்படி எங்கு போய் அந்த இளைஞர்கள் கதவை தட்டி தட்டி வாய்ப்பு கேட்டாலும் அத்தனைபேரும் அவர்களுக்கு சொல்லும் ஒரே பதில் காத்திருங்கள் என்பதுதான். இந்த காத்திருங்கள் என்ற வார்த்தையை அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அந்த இளைஞர்களின் மூளைக்குள் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது இன்னும் எவ்வளவு நாட்கள் குடும்பத்தை வறுமையிலேயே வைத்திருப்பது, இன்னும் எத்தனை நாட்கள் சொந்த பந்தங்களிடம் தலைகாட்ட முடியாமல் தலையை குனிந்த படியே நடந்து செல்வது என்று அந்த இளைஞர்கள் தங்களின் உயிரை விடும் அளவுக்கு சென்று விடுகிறார்கள்.

வேறு தொழிலை பார்க்கலாம் என்று அவர்கள் பெட்டியை கட்டிக்கொண்டு சினிமா துறை வேண்டாம் என்று மனம் வெறுத்துப்போய்  தான் வாங்கி வைத்திருந்த புத்தகங்கள் அனைத்தையும் பாதி விலைக்கு விற்றுவிட்டு அல்லது நூலகத்திற்கு கொடையாக வழங்கிவிட்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்கள். அப்படி சொந்த ஊருக்கு திரும்பிய இளைஞர்களை சொந்தபந்தங்கள் எப்படி பார்க்கும் என்று நினைக்கிறீர்கள் குடும்பத்தினர்கள் எப்படி பார்ப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். சினிமாவில் சாதிக்கறேனு சொல்லிட்டு வருஷக்கணக்கில் வெட்டியாக ஊரை சுத்தி விட்டு இங்கு வந்து இப்ப மறுபடியும் அம்மா அப்பாட்ட தஞ்சம் அடைஞ்சிருக்கான்… பொறந்து வளந்து படிக்க வைக்கிற வரைக்கும் அத்தனை செலவையும் அம்மா அப்பா தான் பார்த்து கிட்டாங்க… இதுக்கப்புறம் கல்யாண வயசு வந்துருச்சு… எரும மாடு மாதிரி வளர்ந்ததுக்கு அப்புறமும் அம்மா அப்பாவோட காசுல சோறு தின்னுகிட்டு இருக்கான் என்று கண்ட கண்ட நாய்களும் பழித்துப் பேசி விட்டு செல்வார்கள். 

காத்திருங்கள் என்று ஒரு வார்த்தைக்காக அந்த அப்பாவி இளைஞர்கள் வாய்ப்பு என்பதைத் தேடித் தேடி வருடக்கணக்கில் அலைந்து திரிந்து ஏதேதோ புத்தகங்களை படித்து ஏதேதோ சினிமாக்களை பார்த்து  காலத்தைத் தொலைத்து கடைசி வரை வாய்ப்பு என்பது கிடைக்காமல்  வெறுமையுடன் வீட்டிற்குத் திரும்பி  தங்களுடைய வாழ்க்கையை புதுப்பிக்கலாம் என்று எண்ணுகின்றனர். ஆனால் இவ்வளவு நாட்கள் வாங்கிய அடி போதாதென்று இதற்கு மேல் தான் வாழ்க்கையை அந்த இளைஞர்களை அடித்து துவைத்து தள்ளுகிறது அந்த வாழ்க்கை. 

Related Articles

ஆடுகளம் “பேட்டைக்காரன்” மாதி... இயக்குனர் வெற்றிமாறனின் 2வது படம். ஆறு தேசிய விருதுகளை குவித்த படம் "ஆடுகளம்." இந்தப் படத்தில் தனுஷ், கிஷோர், கவிஞர் ஜெயபாலன், டாப்ஸி, முருகேசன் ஆகியோ...
கோழி மேல பரிதாபப்பட்டா 65 சாப்பிட முடியா... இந்த உலகத்துல பணம் சம்பாதிக்கற மாதிரி ஈஸியான வேலை வேற எதுவுமே இல்ல... அதுக்கு நீங்க ஒன்னே ஒன்னு தான் பண்ணனும்... உங்கள மாதிரியே நிறைய பணம் சம்பாத...
“ஹோம் ஸ்கூலிங்” முறை சிறந்தத... பிள்ளையை படிக்க வைக்கணும், என்ன படிக்க வைக்கலாம்? எங்க படிக்க வைக்கலாம்? என்ற கேள்விக்கு இந்த சமூகத்தில் சமச்சீர்ல, சிபிஎஸ்சி ஸ்கூல்ல, இன்டர்னேஷ்னல் ...
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்! – இவருக்... இளமையும் சினிமாவிற்குள் நுழைந்த கதையும்:  மார்ச் 11 1984 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள கிணத்துக்கடவு என்னும் ஊரில் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர...

Be the first to comment on "சினிமா வாய்ப்புக்காக காத்திருந்து காத்திருந்து வாழ்க்கையை தொலைத்த இளைஞர்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*