மத்திய தமிழகத்தில் வெப்பம் நாற்பது டிகிரி செல்ஸியஸாக பதிவாகி இருக்கிறது. மத்திய வானிலை துறையின் சென்னை கிளையின் தரவுகளின் அடிப்படையில் திருச்சியில் அதிகபட்சமாக 40.1 டிகிரி செல்ஸியஸாக வெப்பம் பதிவாகி இருக்கிறது. தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் வீசும் உலர்ந்த காற்றின் காரணமாக வெப்பம் மிக அதிக அளவில் பரவுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில வெப்பம் 40 டிகிரி செல்ஸியஸை தொட்டிருக்கிறது.
கோடைக் காலத்து நோய்கள்
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் டீன் மருத்துவர் அனிதா கோடைக் கால நோய் தாக்கங்கள் குறித்துப் பேசும் போது ‘ வெப்பத்தின் காரணமாக மயக்கமடைதல், நீர்ப்போக்கு, தோல் எரிச்சல், அம்மை மற்றும் மூளை காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பொது மக்கள் ஆட்படலாம். மக்களுக்குக் கோடை வெப்பம் குறித்த விழிப்புணர்வு இருக்கும் காரணத்தால், மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை மிதமான அளவுக்கே உள்ளது. நகரச் சுகாதார துறையின் மூலம் கிராமப்புறங்களில் அம்மை பரவாமல் தடுக்க போதுமான அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தார். ‘மதிய நேரத்தில் வெளியே செல்வதை கூடுமான வரைக்கும் பொதுமக்கள் தவிர்க்க முன்வர வேண்டும்’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.
‘சூரிய ஒளிக்கதிர்கள் மற்றும் பதனிடுதல் ஆகியவை அதிகமான அளவுக்குப் புற ஊதா கதிர்வீச்சு(Ultra Violet Rays) தாக்கம் இருப்பதற்கான காரணங்கள் ஆகும் . கண்களின் அழற்ச எதிர்விளைவு மற்றும் கண்புரை உள்ளிட்ட நோய்கள் புற ஊதா கதிர்வீச்சின் காரணமாக ஏற்படும்’ என்று திருச்சி அரசு மருத்துவமனை கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் மருத்துவர் எம்.ஏ.அலீம் தெரிவித்தார்.
Be the first to comment on "மத்திய தமிழகத்தில் 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பம்"