இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மாரி 2. கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இந்தப் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக ரவுடி பேபி பாடல் ஹிட்டோ ஹிட். பள்ளி, கல்லூரி விழாக்களில் இந்தப் பாடல் பெரிய அளவில் கொண்டாடப் படுகிறது.
ரவுடி பேபி பாடல் வரிகள் வீடியோ வெளியான நாள் முதலே அந்தப் பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. இதுவரை கிட்டத்தட்ட 5 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அந்த பாடல் வரி வீடியோவை பார்த்துள்ளனர்.
இந்தப் பாடலுக்கு தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் நடனக் கூட்டணி மாஸாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. அதற்கேற்றாற் போலவே மாஸ்டர் பிரபு தேவா நடன இயக்கத்தில் சாய் பல்லவியும் தனுசும் பின்னி எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக நடன அசைவுகள் குழந்தைகளை இளசுகளை வெகுவாக கவரும் படி அமைந்து உள்ளது இதன் சிறப்பு.
வெற்றி நாயகி சாய் பல்லவி :
தமிழில் இதுவரை கரு, மாரி 2 என்று இரண்டு படங்கள் நடித்திருந்தாலும் இரண்டு படங்களுமே அவருக்கு பெரிய அளவிலான பெயரைத் தர வில்லை. இருந்தாலும் அவர் வெற்றி நாயகி தான்!
ஆம். அவருடைய பயணம் விஜய் டிவியில் நடந்த உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சி தான் தொடங்கியது. இன்று பிரபு தேவா நடன இயக்கத்தில் நடனமாடி உள்ளார் மலர் டீச்சர்.
எப்போதுமே டான்ஸைப் பொறுத்த வரை தன்னுடன் ஆடும் நடிகைகளை காட்டிலும் தனுஸ் தான் வெளுத்து வாங்குவார். ஏனோ இந்த முறை சாய் பல்லவியிடம் விட்டுக் கொடுத்து போனது போல் இருக்கிறது. திரையை பெரிய அளவில் ஆக்கிரமித்து இருக்கிறார் சாய் பல்லவி.
மன்மத ராசா:
தனுஷ் எல்லோருக்கும் தெரிந்த நபராக மாறக் காரணம் திருடா திருடி படத்தில் உள்ள மன்மத ராசா பாடலில் தனுஷின் அசறடிக்கும் நடனமே. பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அந்தப் பாடலை நினைத்துப் பார்க்க வைத்து உள்ளது.
அது மட்டுமின்றி வடசென்னை படத்திற்காக சில ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுகிறார். தனுஷ் தனது அடுத்த ரவுண்டிற்கு ரெடியாகி விட்டார் என்று மட்டும் தெரிகிறது. காரணம் அவருடைய அடுத்த படங்களை இயக்கும் இயக்குனர்கள் எல்லாம் பிரிலியண்ட் டைரக்டர்ஸ் லிஸ்டில் இருப்பவர்கள். மாரி செல்வராஜ், ராம் குமார், கார்த்திக் சுப்புராஜ் என்று கூட்டணி மிரள வைக்கிறது. இது மட்டுமின்றி 2019 ல் அனிருத் மற்றும் தனுஷ் கூட்டணி இணைய இருப்பதாக கூறப்படுகிறது. ஆக இந்த ஆண்டு தனுஷ் ஆண்டாக இருக்கப் போவது உறுதி.
Be the first to comment on "தனுஷை விட சாய் பல்லவி தான் அதிக கவனம் ஈர்க்கிறார்! – கலக்கும் ரவுடி பேபி பாடல் வீடியோ !"