முடிஞ்சா முதுகுல குத்திக்க – விருதுகளை அள்ளும் காலா பட வசனங்கள்!

Mudincha Mudhugula Kuthika - Kaala scores the awards for the best dialogue

2018ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில் பல தனியார் அமைப்புகள் திரை உலகுக்கு விருது வழங்கும் பணியை தொடங்கி உள்ளனர். அவற்றில் பல இடங்களில் பா. ரஞ்சித்தின் காலா படம் விருது பெற்று வருகிறது. குறிப்பாக, மகிழ்நன் பா.ம, ஆதவன் தீட்சண்யா, பா. ரஞ்சித் மூவரும் எழுதிய வசனங்கள் பெரிய அளவில் பாராட்டப்பட்டு விருதுகளை வெல்கிறது.

காலா படத்தில் உள்ள வசனங்கள் இங்கே :

* நிலம்… மனித சமூகத்தோட நாகரிக வளர்ச்சில நிலம் ரொம்ப முக்கிய பங்கு வகிச்சிருக்கு… நாகரிகம் வளர வளர தன்னோட உணவ தானே உற்பத்தி செஞ்சுக்க காடுகளா இருந்த நிலங்கள விளைநிலங்களாக்கி தன்னோட உணர்வு மையத்துக்குள்ள கொண்டு வந்தாங்க மனிதர்கள். அவங்களோட கடின உழைப்பால நிலத்த கடவுளா உயர்த்தி மத வழிபாடா… சாதி சடங்குகளா மாத்துனாங்க… நிலம் அதிகாரமா மாறுச்சு… இதிகாசங்கள் புராணங்கள்ல தொடங்கி இன்னிக்கு வரைக்கும் எல்லைகளை விரிவுபடுத்த அதிகாரத்த நிலைநிறுத்த பல போர்கள் நடந்துகிட்டே தான் இருக்கு… அதுல தோக்குறவங்க அடிமைகளாக்கப் பட்டுகிட்டே இருக்காங்க… சுதந்திர இந்தியாவுல கூட நிலம் இருக்குறவங்க யாரு… நிலம் இல்லாதவங்க யாரு… அவங்களுக்கு சமூகத்துல என்ன அந்தஸ்துங்கறது இன்னிக்கும் எழுதப்படாத சட்டமாவே இருக்கு… பல நூற்றாண்டுகள் கழித்தும் கிராமங்கள்லயும் நகரங்கள்லயும் இந்த நிலைமை பெருசா மாறவே இல்லை. இன்னிக்கு நகரங்களோட கணிசமான நிலங்கள தன்னோட படை பலத்தாலயோ உடல் உழைப்பாலயோ தக்க வச்சிருக்காங்க குடிசை பகுதி மக்கள். அவங்கள நாம நகர்ப்புற ஏழைகள்ன்னு சொல்றோம். இந்த நகர்ப்புற ஏழைகளோட வாழ்ந்நிலை இந்த நாட்டுல பெரும் ஒடுக்குதலுக்கு உள்ளாயிருக்கு…

கார்ப்பரேட் நிறுவனங்களும் லேண்ட் மாபியாக்களும் சேர்ந்து அரசியல் அதிகாரமற்ற சேரி வாழ் மக்களோட நிலங்கள் நகரத்தோட அழக கெடுக்குது… அசுத்தமா இருக்குது… கொள்ளையர்களோட உறைவிடமா இருக்குதுன்னு சொல்லி அவங்கள நகரங்கள்ல இருந்து பிரித்தாள்ற சூழ்ச்சிய செய்றாங்க… இதனால் மக்கள் தங்களோட சொந்த நிலத்துல இருந்து பிச்சு எறியப்பட்டு நகரத்துக்கு வெளிலயும் தீப்பெட்டி மாதிரியான குடிசை மாற்று குடியிருப்புகள்லயும் அடைக்கப்பட்டு செத்த பின்னாடி புதைக்க கூட ஆறடி நிலம் இல்லாம திக்கத்தவங்களா மாற்றப் பட்டிருக்காங்க… இந்தியோவோட எல்லா நகரங்கள்லயும் இந்த ஒடுக்குதல் எல்லாரும் பார்க்க கண்கூட தான் நடக்குது… இதுக்கு இந்தியோவோட முக்கிய தொழில் வர்த்தக நகரமான மும்பையும் விதிவிலக்கு அல்ல.

* அரசியலுக்கு வந்துட்டாளே கூச்சநாச்சம் எல்லாம் சுத்தமா இல்லாம போயிரும் போல இருக்கே… வெக்கம் கெட்டவனுகள்…

* சட்டத்த பத்தி எங்க கிட்டயே பேசுறியா… எங்களுக்கு சட்டத்த மதிக்கவும் தெரியும்… எங்கள மிதிச்சா தூக்கிப் போட்டு (சென்சார்) தெரியும்…

நீங்கள்லாம் எங்கள கொஞ்சநெஞ்சம் வச்சு பாக்குறிங்கன்னா… ஏழைகளுக்கு சாதகமா சில சட்டங்கள் இருக்குறதால தான்… இல்லைனா ஏழு கடலுக்கு அப்புறம் தூக்கி எரிஞ்சிருக்க மாட்டிங்க…

* கொடி பிடிக்கவும் தெரியும்… திருப்பி அடிக்கவும் தெரியும்…

* சாதி, மதம், மொழின்னு எல்லாம் கலந்து இருக்குற குட்டி இந்தியா தாராவி…

* நீங்கஇங்க தான வளந்த… சம்பாத்யம் உத்யோகம் எல்லாம் இங்க கெடந்து தானே… இப்ப தாராவின்னு சொன்னதும் மூஞ்ச சுளிக்குற…

தாராவி என்னையோடவே போவட்டும்… என் பிள்ளைகளுக்குலாம் வேண்டாம்…

* கூட்டாளின்னா நாலு நல்லது கெட்டது சொல்லணும்… அத விட்டுட்டு கொம்பு சீவிவுடுற…

* வயசானதா லவ் ஜாஸ்தி ஆகும்…

* 70 வருசமா கக்கூசுக்கு வக்கு இல்லாம இருக்கோம்…

* யானை பலம் தெரியாம அத வச்சு பிச்சை எடுக்குற மாதிரி ஓட்ட வீணடிக்காதிங்க… ஓட்டு தான் இப்ப நம்ம கிட்ட இருக்குற ஒரே பலம்…

* அப்ப எதுக்குத் தான் அரசாங்கம். அரசாங்கத்துக்கு நிறைய கடன் இருக்கு… பணம் இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க… எல்லாத்தலயும் ஊழல் பண்ணி அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சொகுசா வாழுறாங்களே அவிங்களுக்கு எங்க இருந்து வந்தது பணம்…

* ச்சி… ஏன்டா அழுவுற… உனக்குப் போயி பெரிய புரட்சியாளர் பேரு ( லெனின் ) வச்சேன் பாரு… கோபத்துல திட்டக் கூட முடியல…

* மக்களுக்கு என்ன தேவைன்னு தெரியாம லாபத்த மட்டும் மனசுல வச்சிட்டு வர்றவன் எப்படிலே நல்ல வீடு கட்டித் தருவான்…

* பணக்காரங்களுக்கு ஏழைங்க மேல என்னைக்கும் அக்கறை வந்தது இல்ல…

* சுயநலம்பாக்காம எவன் ஹெல்ப் பண்ண வருவான்… ஒருத்தன காமிங்க பார்ப்போம்…

* மண்ண புரிஞ்சுக்காம மக்களோட மனச புரிஞ்சுக்காம ரெண்டு புத்தகத்த படிச்சிட் மாற்றம் புரட்சின்னு திரியுதுங்க… அடிப்படைய தெரிஞ்சிக்கணும்…

* எங்க உரிமைகள் தான் எங்க சுயநலம்… எங்க ஜனங்க ஒன்னும் ஆடுங்க இல்ல… யார் வேணும்னாலும் பலி கொடுக்கறதுக்கு…

* பாக்க நல்லவரா தான் இருக்காரு…
சும்மா இரு… வெள்ளையுஞ் சொள்ளையுமா இருந்துட்டா போதுமா… நம்ம வீட்டு தண்ணியே குடிக்க மாட்டின்டான்…

* இது காலா கில்லா… என்னுடைய கோட்டை… ஒருபிடி மண்ண கூட இங்கிருந்து கொண்டு போக முடியாது…

* இங்கிருந்து போயிட்டா பிரச்சினை தீந்து போயிடுமா… இடத்த மாத்துவ… பாஷைய மாத்துவ… உன் சாப்பாட மாத்துவ… உற்றார் உறவினர் எல்லாரையும் விட்டுட்டு எங்கோயோ போயி ராஜா மாதிரி வாழ்ந்தா கூட அது ஒரு வாழ்க்கையாடா… மாத்துறதா இருந்தா இங்க இருந்து மாத்து…

* அது என்னது இது நடுராத்திரில வந்து அரஸ்ட் பண்ற பழக்கம்…

* என்ன நம்ம துறை… நல்லா சில்ற வருதா… சில்ற சில்ற…

* அடிக்க மாட்டேன் வா டா…

* வெள்ளைத் தூய்மை… கருப்பு அழுக்கு… கண்ணு உறுத்துதுல்ல… எவ்ளோ கேவலமான யோசனை… உன் பார்வைல தான் கோளாறு இருக்கு… கருப்பு உழைப்போட வண்ணம்… என் சால்ல வந்து பாரு… அழுக்கு அத்தனையும் வண்ணமா தெரியும்…

சுத்தம், கிளீன், பியூர் இதெல்லாம் உன் முகமூடி…

* என்ன வேணும் உனக்கு… நெலமா நேத்து ஒருத்தன் பேருல இருந்தது நாளைக்கு இன்னொருத்தன் பேருக்கு… செத்தா ஆறடி நிலத்த தவிர எதுவும் கிடையாது…

* நிலம் உனக்கு அதிகாரம்… நிலம் எங்களுக்கு வாழ்க்கை…

* என்னோட நிலத்த பறிக்குறது தான் உன்னோட தர்மம்… உன் கடவுளோட தர்மம்ன்னா நான் உன் கடவுள கூட விட மாட்டேன்…

* உங்கிட்ட அதிகாரம் இருக்கலாம்… ஆனா எங்கிட்ட துணையா பக்க பலமா சொந்தமா உறவா ஆயிரக்கணக்கான மக்கள் இருக்காங்க…

* முடிஞ்சா என் முதுகுல குத்திக்கு…

*ஒரு காலத்துல கெட்டவன பாத்து கேள்வி கேட்டா ரவுடி… அப்டியே எல்லாம் தலைகீழா மாறிடுச்சு… அநியாயமா அடிச்சவன நியாயம் கேட்டு திருப்பி அடிச்சா ரவுடின்னு முத்திரை குடுத்துற்றாங்க…

* கை கொடுத்து பழகுங்க… அது தான் ஈக்குவாலிட்டி… கால்ல விழ வைக்குறது இல்ல…

குறிப்பாக ராவணனை நாயகனாக காட்டும்… ராமாயண வரிகளை உபுயோகப்படுத்தும் இடங்களுக்காகவே இந்த மூவர் கூட்டணிக்கு விருதுகள் கொடுக்கலாம். அசாத்திய துணிச்சல்!

Related Articles

எந்தெந்த படத்துக்கு தேசிய விருது எதிர்பா... 1. மேற்குத் தொடர்ச்சி மலை 2017ல் சென்சார் வாங்கிய படம். !அந்த வருடமே தேசிய விருது தேர்வுக்கும் சென்றது. ஆனால் படம் ஒரு விருதையும் பெறவில்லை. ரிலீசான ...
“இந்தக் காலத்துல காசு இருக்குற எல்... நிறைகள்: கிளப்புல மப்புல பாடல் பாடியது என் தப்பு என்று கூறும் ஆதி மனசாட்சிக்கு நேர்மையாக இப்போது பாடிய "சிவக்குமார் பொண்டாட்டி" பாடலையும் தப்பான...
பொறியியல் கல்லூரிகளுக்கு ஆயுசு முடியப் ப... கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறியியல் கலந்தாய்வு நடைபெறத் தொடங்கியது. அப்போது இருந்தே பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து உள்ளது...
ஜூலை18 – 5 years of வேலையில்லா பட்... * முதல் நாள் காலேஜ் வாசல்ல நின்னு அய்யா நாம இன்ஜினியர் ஆகப்போறங்கறது நினைச்சது என்னால மறக்கவே முடியாது... தம் அடிச்சேன் தண்ணி அடிச்சேன் கட் அடிச்சேன் ...

Be the first to comment on "முடிஞ்சா முதுகுல குத்திக்க – விருதுகளை அள்ளும் காலா பட வசனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*