இரண்டு மாதங்களில் 106 சிறுத்தைப்புலிகளை இழந்துள்ளது இந்தியா

106 leopards died in two months in India

வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 106 புலிகள் இறந்துள்ளன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்  எச்சரித்துள்ளனர். இது புலிகள் இனத்திற்கான பேராபத்து என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் கொண்டுள்ள தகவல்களின் படி, பெரும்பாலான புலிகள் வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளன. 106 சிறுத்தைப்புலிகளில் 12 மட்டுமே இயற்கையாக மரணமடைந்துள்ளன. மற்றவை எல்லாம் வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளன என்று இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வேட்டையாடப்படும் சிறுத்தைப்புலிகள்

சிறுத்தைப்புலிகளின் மரணத்தில் உத்தரகண்ட் மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அந்த மாநிலத்தில் மட்டும் மொத்தம் இருபத்து நான்கு புலிகள் இருந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பதினெட்டு புலிகளும், ராஜஸ்தானில் பதினோரு புலிகளும் இறந்துள்ளன. நாடு முழுவதும் உள்ள 18 மாநிலங்களில் புலிகளின் இறப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

அதிகாரப்பூர்வ பதிவுகளின் படி, 2017 ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 431 சிறுத்தைப்புலிகள் இறந்துள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 159 சிறுத்தைப்புலிகள் வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்டன. 2016 ஆம் ஆண்டு இறந்த 450 சிறுத்தைப்புலிகளில் 127  வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்டன.

வேட்டைக்காரர்களால் மிகப் பெரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் சிறுத்தைப்புலிகள், விவசாயத்தின் காரணமாக தங்கள் வாழ்விடங்களை இழக்க நேரிடுகிறது.

சட்டவிரோத வன வர்த்தக சங்கிலி

இந்தியாவில் வேட்டையாடப்படும் விலங்குகளின் தோல்கள் பல கைமாறி, பிறகு சீனாவில் இயங்கும் சட்டவிரோத சந்தைக்குப் போய் சேர்கிறது. அங்கே ஒரு சிறுத்தைப்புலியின் தோல் 50 லட்சத்திற்கும், சமயங்களில் அதற்கு மேலும் விற்கப்படுகிறது.

இந்தியாவில் புலிகளை வேட்டையாடும் ஒரு வேட்டைக்காரன் அதை மூன்று முதல் நான்கு லட்சத்திற்கு ஒரு வியாபாரியிடம் விற்கிறான். அதை வாங்கிக்கொள்ளும் அந்த வியாபாரி நேபாளம் போன்ற அண்டை நாடுகளிடம் எட்டு முதல் பத்து லட்சத்திற்கு விற்பனை செய்கிறார். அங்கிருந்து பல கைகள் மாறி சீனத்தில் இயங்கும் சட்டவிரோத சந்தைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கே நாற்பது, ஐம்பது லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

இறந்த புலிகளின் இறப்பு கணக்கு

இந்த ஆண்டு இறந்த 106 புலிகளில் 36 புலிகள் எதற்காக இறந்தன என்ற காரணமே தெரியவில்லை என்று இந்திய வன விலங்குகள் பாதுகாப்புச் சங்கம் தெரிவித்து இருக்கிறது. இறந்த இருபத்து மூன்று புலிகளின் மண்டை ஓடுகள் மற்றும் நகங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. இது போன்ற சம்பவங்களில் புலியின் மரணம் இயற்கையானதா அல்லது வேட்டையாடப்பட்டதா என்று கண்டு பிடிப்பது கடினம். ஆனால் 18 புலிகள் மிகத் தெளிவாக திட்டமிட்டு வேட்டையாடப்பட்டு இருக்கின்றன. வேட்டையாடப்பட்ட சிறுத்தைப்புலிகளின் எச்சங்களில் துப்பாக்கி குண்டு தடயமும், விஷத்தின் தடயமும் இருந்ததற்கான அடையாளம் காணப்பட்டு இருக்கிறது என்று இந்திய வன விலங்குகள் பாதுகாப்புச் சங்கம் தெரிவித்தது.

மேலும் எட்டு புலிகள் சாலை மற்றும் ரயில் விபத்துகளின் காரணமாகவும், கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட வகையில் ஐந்து புலிகளும், மற்ற விலங்குகளால் கொல்லப்பட்ட வகையில் ஐந்து புலிகளும், ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக்கொண்டு ஏழு புலிகளும் இறந்துள்ளன. மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது இரண்டு புலிகளும் இறந்துள்ளன.

ஜம்மு காஷ்மீர், குஜராத், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களின் கடத்தல்காரர்களிடம் இருந்து 4 சிறுத்தைப்புலிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.

இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி ஓய்வி ஜாலா இது குறித்து பேசும் போது, ‘உண்மையில் இறந்த புலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும்’ என்று தெரிவித்தார். இந்திய வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி, பாதுகாக்கப்பட வேண்டிய வன விலங்குகளின் பட்டியலில் சிறுத்தைப்புலியும் ஒன்று. ஆனால் சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கை மொத்தம் எவ்வளவு என்பதே கணக்கிடப்படாமல் இருக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து எஞ்சியிருக்கும் சிறுத்தைப்புலிகளை வேட்டைக்காரர்களிடம் இருந்து காக்கவேண்டும் என்பது தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஒரே கோரிக்கையை இருக்கிறது.

Related Articles

பந்தி பரிமாறுவார்கள் எவ்வளவு முக்கியமானவ... ஆரம்ப காலங்களில் விசேஷ வீடுகளில் பந்தி என்பது தரையில் அமர்ந்து சாப்பிடுவது போல் இருக்கும். அப்போதெல்லாம் மண்தரையில் சாணி மொளங்கில் அமர்ந்து சாப்பிடுவத...
ஜூலை 23 – காப்பான் பிறந்தநாள்! ... காப்பான் படம் நடிகர் சூர்யாவும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே. வி. ஆனந்தும் இணையும் மூன்றாவது படம். இதற்கு முன் அயன், மாற்றான் படங்களில் இணைந...
டெல்லி ஐஐடியில் காற்று மாசுக்கு எதிரான த... இந்தியாவில் அதிக காற்று மாசு நடைபெறும் இடம் நாட்டின் தலைநகரான டெல்லி என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்தின் போது ...
சன்னி லியோன் என்ன சாதி? – இந்தச் ச... அடப்பாவி... சன்னி லியோனோட சாதியாடா நமக்கு முக்கியம்... அவ ____ தாண்டா நமக்கு முக்கியம்... இப்படி பச்சையாக கமெண்ட் அடிக்கும் மக்கள் தான் இங்கு நிரம்பிக...

Be the first to comment on "இரண்டு மாதங்களில் 106 சிறுத்தைப்புலிகளை இழந்துள்ளது இந்தியா"

Leave a comment

Your email address will not be published.


*