கக்கனையும் காமராஜரையும் நாம தான் தேடி கண்டுபிடிக்கனும் – சர்கார் வசனங்கள்!

sarkar movie dialogue
  1. ” நான் எந்த கம்பெனியும் விலைக்கு வாங்கவும் வரல… அழிக்கவும் வரல… இன்னிக்கு என்ன நாள்… தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நாள்… நா என்னோட ஓட்டுப் போடறதுக்காக தான் வந்தேன்… “

 

  1. ” பக்கத்துல எப்பவுமே ஒரு பொண்ணு இருந்தா சின்னதா ஒரு எனர்ஜி கிடைக்கும்… “

 

  1. ” சார் சின்ன தப்பு நடந்து போச்சு… பெருசு பண்ணிடாதீங்க ப்ளீஸ்… “

” எது சின்ன தப்பு… இந்த ஓட்ட போட 13000 கிலோ மீட்டர் கடந்து வந்துருக்கேன்… “

 

  1. ” பணப்பட்டு வாடா டீடெய்ல்ஸ் மட்டுமல்ல… கண்டெய்னர் கணக்குலருந்து கடைசி ஆள் வரைக்கும் தொகுதி வாரியா இருக்கு… எவன் கைலயாவது சிக்கிருந்துச்சு… நாறியிருக்கும்… ரெண்டு… இப்படியெல்லாம் இருந்தா நம்ம கட்சி பண்ண முடியாது… சிசிடிவி கேமரா, செக்யூரிட்டி இதெல்லாம் வெளிய வந்திருந்தா ஒருத்தன் இருக்கமாட்டிக…”

 

  1. ” இந்தக் காலத்துல எவன்டா ஒழுங்கா ஜெயிக்குறான்… பாத்திரம் பண்டமெல்லாம் சின்னமா போட்றான்… எவனுக்கு எந்த பாத்திரம் பிடிக்குதோ அழுத்திறான்… அதெல்லாம் அந்தக் காலம்… இப்பல்லாம் ஓட்டுக்கு இவ்ளோன்னு கேட்டு வாங்குறான்… கட்டுகட்டா பணம்… எவனுமே சுத்தங் கிடையாது… “

 

  1. ” சட்டம் திருடர்களை தண்டிப்பது மட்டுமல்ல… திருடப்பட்ட பொருளை திருப்பிக் கொடுப்பதும் தான்… “

 

  1. ” ஒரு ஓட்டுனால என்ன மாற்றம் வந்தரப் போவுதுன்னு நினைக்குறிங்க…”

” ஒவ்வொரு ஓட்டுமே முக்கியந்தான் சார்… அமெரிக்கால தாய்மொழி இங்கிலீஷா ஜெர்மனாங்கற ஓட்டுடெடுப்புல ஒரேயொரு ஓட்டுல தான் சார் இங்கிலீஷ்னு முடிவாச்சு… பிரான்ஸ்ல மக்களாட்சியா ராணுவ ஆட்சியாங்கற ஓட்டெடுப்புல ஒரு ஓட்டுல தான் மக்களாட்சினு முடிவாச்சு… ஹிட்லர் நாஜிப்படையோட தலைவரானது ஒரு ஓட்டுல… வாஷிங்டன் அமெரிக்காவோட இணைஞ்சது ஒரு ஓட்டுல… “

 

  1. இந்தியன் எலக்சன் லா 49 – P படி ஒருத்தருடைய ஓட்டு கள்ள ஓட்டா போடப்பட்டிருந்தா அவருக்கு பேலட் ஓட்டுனு ஒன்னு குடுத்து அவருடைய ஓட்டப் போட அனுமதிச்சிருக்கனும்…

 

  1. மக்கள் சாகவே கூடாதுன்னு நினைக்கறவன் தான் சார் பிரச்சினையை தீர்க்கனும்னு நினைப்பான்…

 

  1. இங்க பிரச்சினைக்கு தீர்வு தேவ இல்ல சார்… இன்னொரு பிரச்சினை தான் சார் தேவ…

 

  1. ஒரு விஷியத்த நெகட்டிவா சொல்லும்போது தான் அதுக்கு ரியாக்சன் வேகமா இருக்கும்…

 

  1. தமிழ்நாட்ல ரகசியம் பேசுறதுக்கு செந்தமிழ்…

 

  1. ஆயிரம் ரூபா திருடுன ஒரு திருடன பிடிக்க போலீஸ் பத்தாயிரம் ரூபா செலவு செய்றாங்க… 9000 மிச்சம்னு அவன தப்பிக்க விட்டுட்டா அந்த திருடன் வாழ்க்க பூரா திருடிக்கிட்டே இருப்பான்…

 

  1. ஜனநாயகம் இன்னும் சாகலன்ற நம்பிக்கை அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை நடக்கற தேர்தல்லயும் அப்பப்ப கிடைக்குற நியாயமான தீர்ப்புனாலயும் தான் கொஞ்சமாவது மிச்சம் இருக்கு…

 

  1. ஆட்சிக்கு வந்து உக்காந்துட்டா அஞ்சு வருசத்துக்கு எப்படி வேணாலும் ஆடலாம்ங்கற திமிர அடக்கனும்… திரும்ப வந்தா திரும்பவும் அடிப்பேன்…

 

  1. சவால் உட்றப்ப ரொம்ப சாக்கிரதையா வுடனும்… அதென்ன சொன்னிங்க… ப்ராண்டிங்… அந்த ப்ராண்ட அழிக்கறதுலதான்டா நான் ஸ்பெசலிஸ்ட்டே…

 

  1. ” எலக்சன் ரூல்ஸ்லாம் தெரியும்ல… “

” அவருக்கு ரூல்ஸ் தெரிஞ்சனால தான் இந்த எலக்சனே… “

 

  1. எதிர்க்க ஆளே இல்லைங்கற எண்ணம் தான் ஜனநாயகத்தோட முதல் ஆபத்து

 

  1. எந்த ஊருக்குப் போனாலும் எந்த நாட்டுக்குப் போனாலும் வந்துருவேன் எலக்சனுக்கு…

 

  1. இங்க யாரோ கேட்டிங்கள்ல உப்பு போட்ட சோத்த திங்கறியானு… நான் மீனவன்டா… உப்பு போட்ட காத்த சுவாசிக்கறவன்டா நான்…

 

  1. ” புதுக்கோட்டைல ஹைட்ரோ கார்பன் பிரச்சினை… திருநெல்வேலில கந்துவட்டி பிரச்சினை… செங்கல்பட்டூ கூலிப்படை பிரச்சினை… தஞ்சாவூர் மீத்தேன் பிரச்சினை… காஞ்சிபுரம் மணல்கொள்ளை… “

 

” 32 டிஸ்ட்ரிக்கல 32 பிரச்சினை… சொந்த ஊருலயே அகதியா வாழ்ந்துட்டு இருக்கோம்… ”

 

  1. ” இதுக்கெல்லாம் ஒருநாள் பதில் சொல்லியே ஆகணும்… “

” எப்ப சார் கேள்வி கேட்டிங்க… கேள்வி கேட்காம பதில் எப்படி கிடைக்கும்… “

 

  1. நாங்க 30 வருசமா எத நம்பி அரசியல் பன்றமோ… அத அரைச்சீட்டுல எழுதிட்டு வந்து நிக்குற… இதையெல்லாம் சால்வ் பண்ணா வறுமை போயிடும்… வறுமை போயிட்டா ஓட்டுக்கு காசு வாங்குவானா… சோத்துக்கு அலையனும்… வயிறு பசிச்சு காதுல ஙொயிங்ஙனும்… அப்பத்தான் நாங்க கொடுக்கிற 5000 ம் ரூபாய்க்கு நாய் மாதிரி வந்து ஓட்டுப்போடுவான்…

 

  1. கக்கனையும் காமராஜரையும் நாம தான் தேடி கண்டுபிடிக்கனும்…

 

  1. நம்ம ஊர்ல செத்துப்போயிட்டாளே தியாகி தான

 

  1. ஒரு குடிமகனோட குறைந்தபட்ச தேசப்பற்றே ஓட்டுப்போட்றதுதான்…

 

  1. வீட்ல சும்மா இருக்கறவங்க மட்டுமில்ல முக்கியமான வேலையே இருந்தாலும் நிறுத்திட்டு போய் ஓட்டுப் போடுங்க… அரைமணி நேரம் க்யூவ்ல நின்னு ஒரே ஒரு விரல அமுக்கி உன் நாட்டுக்காக ஒரு ஓட்டுகூட போட முடியலனா நீதான்டா முதல் திருடன், நீதான்டா முதல் குற்றவாளி…

 

Related Articles

இயக்குனர் பாலா பற்றிய சுவாரஸ்யமான தகவல்க... மதுரை பெரியாஸ்பத்திரியில் பிறந்தார். ௧ம்பம் அருகே நாராயணத் தேவன்பட்டி தான் பாலாவின் பூர்வீகம். பெரிய குடும்பம். எட்டு பிள்ளைகள். அப்பா வங்கி வே...
பெண்களைப் போல ஆண்களுக்கும் ரத்தப்போக்கு ... யார் இந்த PADMAN? நம்நாட்டில் வெறும் 12% பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகின்றனர். 88 சதவீத பெண்கள் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்...
மூக்குத்தி அம்மன் திரைப்படம் கற்றுத்தந்த... ஆர் ஜே பாலாஜி யின் இயக்கத்தில் நடிப்பில் உருவான இரண்டாவது படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த சி...
உடலெனும் வெளி! – உருவ கேலி செய்யும... இந்த சமூத்திற்கு எந்த விஷயங்கள் மிக முக்கியமாக தேவைப்படுகிறதோ அந்த விஷயங்களை தான் இந்த சமூகம் புறக்கணித்து தள்ளும், குழி பறித்து புதைக்கும். திடீரென அ...

Be the first to comment on "கக்கனையும் காமராஜரையும் நாம தான் தேடி கண்டுபிடிக்கனும் – சர்கார் வசனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*