ஜனவரி 25 – தேசிய வாக்காளர் தினம்! ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு ஓட்டாண்டியாய் நிற்கும் மக்கள்!

Voters Day

மக்கள் தங்களுக்கான ஆட்சியாளர்களை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கும் முறை தான்
தேர்தல். இந்த மக்கள் தான் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் கொடுத்து சட்டசபைக்கும்
பார்லிமெண்டுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். இந்த மக்களுக்காகத் தான் எல்லா சட்டங்களும்
எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றைய மக்களின் நிலை என்ன? நடுரோட்டில் நிற்கிறார்கள்.
வாக்களித்த மக்களுக்கு காலங்காலமாக இதே நிலை தான் நிலவிக்கொண்டிருக்கிறது. சூடுகண்ட பூனை அடுப்பண்ட போகாது என்பார்கள். மனிதர்கள் மட்டும் மாறாமல் இருக்கிறார்கள்.

தேசிய வாக்காளர் தினமும் மக்கள் சறுக்குமிடமும்!

1950 ம் ஆண்டு ஜனவரி 25ம் நாள் இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டது. தொடங்கி
அறுபது ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் 2011ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர்
தினமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் வருடம்தோறும் வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டு
வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தல்களில் 50 முதல் 60 சதவீதம் மட்டும் வாக்குப்பதிவு
இருந்தது. கடந்த சில வருடங்களாக வாக்குப்பதிவு எழுபது சதவீதத்தை தாண்டியிருப்பது
மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை அதிகரிப்பு எனலாம். அதே சமயம், வாக்குப்பதிவு
விழுக்காடு அதிகரித்ததற்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்று மட்டுமே கூற இயலாது.
பணம் மீதான நம்பிக்கையும் இன்னொரு காரணம். தேர்தல் வந்தால் ஓட்டுக்கு காசு கொடுத்து –
வாங்கி பழகியதாலும் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. ஓட்டுக்கு காசு வாங்கும் இடம் தான்
மக்கள் ஏமாறும் இடம்.

ஊழல் செய்வதற்கென்றே அரசியலுக்கு வருபவர்களிடம் தேர்தல் நேரத்தில் மக்கள் காசு
வாங்கிவிட்டு கோட்டை விடுகிறார்கள். கோட்டையை பிடிப்பவர்கள், மக்கள் தங்களுடைய
உடம்பில் இருக்கும் ரத்தம் சுண்ட சுண்ட வெயில், பனி, மழை, மேடு, காடு சாக்கடை,
தொழிற்சாலை என்று கூலி வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தில் தங்களோட குழந்தைகளுக்கு வாங்கும் உணவுப்பொருள், மருந்துப்பொருட்களில் இருந்து வயித்துக்கு காச்சும் கஞ்சிக்கு வாங்குகிற அரிசி, மண்ணெண்ணெய், தாகத்துக்கு குடிக்கும் தண்ணி என்று அனைத்திற்கும் அரசாங்கத்துக்கு வரி கட்டுகிறான். அரசியல்வாதிகளோ அந்த வரிப்பணத்தில் சர்வசாதாரணமாக ஊழல் செய்து கொள்ளையடித்து உள்நாட்டுலயும் வெளிநாட்டுலயும் சொத்து சொத்தாக வாங்கி குவித்து கஜானாவை சுத்தமாக காலி செய்துவிட்டு, விலைவாசிய மக்கள் தலைமேல் ஏத்தி ஏத்தி அவுங்க வயித்தில் அடிப்பது மட்டுமல்லாமல் தன்னை யோக்கியன் என்று காட்டிக்கொள்வதற்காக ஒருத்தன் மேல் ஒருத்தன் மாத்தி மாத்தி பழி போட்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஏமாறுகிறோம் எனத்தெரிந்தே ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு ஓட்டாண்டியாய் இன்று நடுத்தெருவில் நிற்கிறோம்.

இனி வரும் தேர்தல்களில் ஓட்டுக்கு காசு வாங்காமல் முறையாக தமது வாக்கை பதிவு செய்ய
முற்படுவோம்.

Related Articles

பந்தி பரிமாறுவார்கள் எவ்வளவு முக்கியமானவ... ஆரம்ப காலங்களில் விசேஷ வீடுகளில் பந்தி என்பது தரையில் அமர்ந்து சாப்பிடுவது போல் இருக்கும். அப்போதெல்லாம் மண்தரையில் சாணி மொளங்கில் அமர்ந்து சாப்பிடுவத...
உடல் உறுப்பு மாற்றத்தில் தமிழக அரசு செய்... கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் உறுப்பு "தானத்தில்" தமிழக அரசு இந்திய அளவில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. அதற்காக மத்திய அரசின் விருதையும் கூட பெற...
ராட்சசி திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!... * பள்ளிக் கூடமா அது... சந்தக்கட... எங்க பாத்தாலும் குப்ப... இரைச்ஙாலு... ஆட்டுமந்தைய திறந்துவிட்ட மாதிரி... படிக்கற புள்ளைக இந்த வயசுலயே ஜாதிப் பேர சொ...
Wings App வழியாக இந்தியாவின் முதல் இணைய ... இந்தியாவிலயே முதன் முறையாக இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது பிஎஸ்என்எல்.பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் விங்க்ஸ் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு இந்...

Be the first to comment on "ஜனவரி 25 – தேசிய வாக்காளர் தினம்! ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு ஓட்டாண்டியாய் நிற்கும் மக்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*