” எனக்கு மட்டுமே இசை வரும்! ” அப்படியா இளையராஜா சொன்னார்? – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

இந்தியாவைப் பொறுத்த வரை இசை உலகில் இளைய ராஜாவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்பது உண்மையே. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இளைய ராஜாவின் புகழ் நின்றுகொண்டே இருக்கும். எத்தனை விமர்சனங்கள் எழுந்தாலும் அவர் படைப்புகள் மீதான காதல் நம்மிடம் இருந்து விலகுவது இல்லை.

 

அப்படி இருக்கையில், இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே இல்லை; படத்தின் சூழலுக்கு ஏற்ப எனக்கு இசை வரும், வேறு யாருக்கும் இவ்வாறு வராது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியதற்கு நெட்டிசன்கள் என்ன மாதிரியான கருத்துக்கள் கூறி இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

* இதில் என்ன ஆணவம் இருக்கிறது. விஜய் ஆண்டனி ஒரு இசையமைப்பாளர். அவரே சொல்லியிருக்கிறார். இன்று இளையராஜாவுக்கு பிறகு இசையமைப்பாளர் என்று யாரும் கிடையாது. இசை கோர்ப்பாளர்கள்தான். இசையமைப்பாளர் என்பவருக்கு எட்டுவித வித்தைகள் இசையில் தெரியவேண்டும். அது தெரிந்தவர்கள் இன்று யாருமில்லை

* நீங்க என்ன தான் இசை ஞானியாக இருந்தாலும் இன்றைய ட்ரண்ட் ல உங்களால இசையமைக்க முடியாது… ஆணவம் அதிகம் ஆயிருச்சு….
உங்க பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.. ஆனால் உங்களின் பேட்டி மற்றும் மேடை பேச்சை ஒரு முறை கூட முழுமையாய் கேட்க முடியாது… சுய தம்பட்டம் சகிக்கல…

* தன்னைப் பத்தி உயர்வா நினைக்கிறது தப்பில்லையே. போலி பணிவை விட ஆமா நான்தான் சிறந்தவன்னு சொல்லிக்கிறது எவ்வளவோ பரவாயில்லை.
இந்த bold statement க்காகவே இளையராஜாவைப் பிடிக்குது.

* எனக்கு இசை வரும் என்பது தற்புகழ்ச்சி. ஆனால் எனக்கு மட்டும் இசை வரும் என்பது தற்கொலை. வயதானகாலத்தில் இப்படியான அறிவற்ற அறிக்கைகளால் தன் புகழை பெருமளவு இளையராஜா இளந்துவிட்டார்.

* சார் சொந்தக் காசிலேயே தனக்கு சூன்யம் வச்சுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாரு… இனி அவரை யாராலும் காப்பாற்ற முடியாது. அவரே குழி வெட்டிப் படுத்துக்குவாரு போல… இத்தனை நாள் இருந்த மரியாதையே போச்சு…

* இளையராஜா இப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றாலும் இதை கூறிக்கொள்ள தகுதியுள்ள ஒரே இசையமைப்பாளர் ராஜா மட்டும்தான். காகிதமும் பேனாவும் இருந்தாலே போதும் இவர் இன்னும் ஆயிரம் படங்களுக்கு இசையை எழுதியே கொடுத்துவிடுவார்.

* இன்றைய தேதியில், இசையை பிழையின்றி எழுதும் (music notations) திறன் படைத்த உலகின் ஒரே இசையமைப்பாளர் ராஜா மட்டுமே.
அதுசரி நம்மோட காது கண்ட கருமத்தையும் கேட்டு கேட்டு அதுதான் இசை-ன்னு முடிவு பன்னிடுச்சு.

* இந்த பதிவுல கதறுர சில்லரைகளுக்கே இவ்வளவு ஆணவம் இருக்கும் போது இவ்வளவு சாதித்தும் எளிமையாக இருப்பவர் எப்படி ஆணவக்காரராக தெரிகிறாரோ தெரியவில்லை.

* இது தலைகணத்தின் உச்சம்.ஞானி என்பவர் அனைத்தையும் வென்றவர் ”தலைகணத்தையும்” சேர்த்துதான். ஆனால் இவர் இருக்க இருக்க மதிப்பு இவர்மேல் எனக்கு குறைந்து கொண்டே வருகிறது.

இவை எல்லாம் இளையராஜாவுக்கு ஆதரவான கருத்துக்களும் எதிரான கருத்துக்களும் ஆகும்.

உண்மையில் அவர் சொன்னது :

இது தான் இசை என்பதை யாராலும் வர்ணிக்க முடியாது. இயற்கையைப் போல இசையையும் எனக்கு மட்டுமே என்று யாராலும் சொந்தம் கொண்டாட முடியாது. இதைஇசை ரசிகர்களை காட்டிலும் இசையை வாசிக்கும் இசையமைப்பாளர்கள் நன்கு அறிவார்கள். அப்படி இருக்கையில் இளைய ராஜா இசை எனக்கு மட்டுமே வரும் என்று கூறியிருப்பார் என்பதை நம்ப முடிகிறது. இளையராஜா மீது அவதூறு பரப்ப வேண்டும் என்பதற்காக செய்தியை திரித்து போட்டிருக்கிறது சில ஊடகங்கள்.

” இளையராஜா அவர்கள் சமகால இசையமைப்பாளர்கள் யாருக்கும் இசை தெரியாது என்று கூறவில்லை. இன்றைக்கு யாரும் நேரம் ஒதுக்கி கம்போஸ் செய்வதில்லை என்னும் உண்மையை கூறி இருக்கிறார்.

வழக்கம் போல நம் மீடியா திரித்து விட்டது அவர் கூறியதை !! ”

என்ற இந்தக் கருத்து தான் உண்மையை தவிர இளைய ராஜா தலைக்கனம் பிடித்தவர் அல்ல. தலைக்கனம் பிடித்தவர்களால் இவ்வளவு காலம் வெற்றியாளராக இருக்க முடியாது என்பதை இவரை விமர்சிக்கும் நபர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

Related Articles

ராசிபுரம் தனியார் பள்ளிகளில் பணியாற்றும்... "ராசிபுரம்" இந்த ஊர் பெயரை கேட்டாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது "டாக்டருக்கு படிக்க வைக்கும் தனியார் பள்ளிகள் நிரம்பியுள்ள ஊர்/படிப்பு சொல்லி தரேன...
சோத்துக்கே வழி இல்லாத பசங்களாம் சோஷிலிசம... நாமெல்லாம் பாதைங்கறது போறதுக்கும் வர்றதுக்கும் உள்ள வழின்னு நினைச்சுட்டு இருக்கோம்... ஆனா இங்க ஒவ்வொரு பாதைக்கு பின்னாலயும் ஒரு வரலாறு இருக்கு......
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு – இது ... காஞ்சித்தலைவன், தென்னாட்டு காந்தி, தென்னாட்டு பெர்னாட்ஷா, பேறிஞர், நூற்றாண்டு தலைவர் என்று பலவாறு  போற்றப்படும் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் அண்ணா என்கி...
பொத்துக்கிட்டு வரதுக்குப் பேருதாண்டா ரௌத...  "என்னைய்யா பயந்துட்டிங்களா..."தப்பு பண்ணவனே பயப்படுல... எதுத்து கேக்கறவன் எதுக்குப் பயப்படனும்... "  " ஒரு தடவ தான் சாவு...

Be the first to comment on "” எனக்கு மட்டுமே இசை வரும்! ” அப்படியா இளையராஜா சொன்னார்? – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*