ஜிப்ஸினா மதம் பிடிக்காத மனுச சாதிங்க – கயல் படத்தை நினைவூட்டும் ஜிப்ஸி டீசர்!

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ராஜூமுருகன் வெளியான அற்புதமான படம் குக்கூ. அதை தொடர்ந்து இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் தேசிய விருது வென்றது. தற்போது அவருடைய மூன்றாம் படைப்பான ஜிப்ஸி உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்போது அதன் டீசர் வெளியிடப் பட்டுள்ளது.

” டேய் ஜிப்ஸி… 70 வருசமா இந்த நாட்டுல குறுக்கு முறுக்கமா திரிஞ்சிட்டு இருக்கேன்…

காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் எவ்வளவு தூரம்னு அக்கியூரட்டா தெரியும்…

ஆனா ஒரு இதயத்துக்கும் இன்னொரு இதயத்துக்கும்னு தா என்னால கண்டே பிடிக்க முடியலடா… ”

” ஜிப்ஸினா என்ன… மதம் பிடிக்காத மனுச சாதிங்க… ”

” அவ எங்கிருப்பான்னு அவனுக்கே தெரியாது… ஊர் ஊரா போயிட்டு இருப்பான்… ”

” உனக்குனு ஒரு முகம் கிடைக்கும்… அந்த முகம்… அந்த முகத்த மட்டும் என்னைக்கும் மிஸ் பண்ணிடாதடா… ”

போன்ற வசனங்கள் இந்த டீசரில் இடம் பெற்று உள்ளன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ஜீவாவுக்கு ஒரு நல்ல படம் கிடைத்து இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இது போல நாடோடியாக திரியும் கதைக்களத்தில் கற்றது தமிழ் படத்தில் நடித்திருந்த ஜீவாவுக்கு ஜிப்ஸி படம் செகண்ட் இன்னிங்க்ஸாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதே சமயம் இந்த டீசர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் திரைப்படத்தை நினைவூட்டுகிறது. அதிலும் இப்படித் தான் நாயகன் நாடோடியாகத் திரிவான். அவனுடைய அப்பாவோ அவனுக்கு என்று ஒரு அடையாளத்தை தேடிக் கொள்ள சொல்வார்.

உனக்காக ஒரு ஒளி கிடைக்கும்… அந்த ஒளி தான் உன் வாழ்க்கை… விட்றாத கெட்டியா பிடிச்சுக்கு… என்ற குரல் நாயகனின் காதில் அடிக்கடி ஒலிக்கும். ஜிப்ஸி படத்தின் டீசரும் அதையே நினைவூட்டுகிறது.

Related Articles

வேலையில்லா பட்டதாரிகளின் அம்மாக்களே அப்ப... இந்திய நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கையைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு மகா மட்டமாக நம் நாட்டு மாணவர்களின் கல்வி அ...
இன்ஜினியரிங் படிச்சதால தான் குடிச்சிட்டு... தயாரிப்பு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ்ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்எடிட்டிங்: பிலாமின் ராஜ்இசை: சாம் சிஎஸ்எழுத்து இயக...
அசுரன் படத்தில் உங்களுக்குப் பிடித்த வசன... கடந்த ஆயுத பூஜை அன்று வெளியாகி இன்றுவரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அசுரன். இந்தப் படத்தில் உள்ள வசனங்கள் வட்டார வழக்கு உச்சரி...
பேட்ட விஸ்வாசத்துடன் வரேன்னு சொன்ன ராஜாவ... இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பில் தயாராகி இருக்கும் படம் வந்தா ராஜா வா தான் வருவேன்!இந்தப் படத்தைப் பொறு...

Be the first to comment on "ஜிப்ஸினா மதம் பிடிக்காத மனுச சாதிங்க – கயல் படத்தை நினைவூட்டும் ஜிப்ஸி டீசர்!"

Leave a comment

Your email address will not be published.


*