உலகிலயே அதிக தனியார் பள்ளிகளை கொண்ட நாடு எது தெரியுமா?

India has got the maximum number of private schools

உலகிலயே அதிக அளவில் தனியார் பள்ளிகளைக் கொண்ட நாடு, உலகில் அதிக அளவில் தற்கொலை நடக்கும் நாடு போன்ற கேள்விகளுக்கு எல்லாம் தயங்காமல் இந்தியா என்று பதில் அளிக்கலாம்.

இப்படி நாடு முழுக்க தனியார் பள்ளிகள் பெருகிக் கிடப்பதற்கான காரணம் தான் என்ன? என்ற கேள்வி எழுப்பினால் அதற்கு அரசுப்பள்ளி ஆசிரியர்களின் அலட்சியம் தான் பதில். அரசுப் பள்ளிகளில் உள்ள நான்கு ஆசிரியர்களில் ஒருவர் பள்ளிக்கு வர மாட்டார். அப்படியே வந்திருக்கும் ஆசிரியர்களில் ஒருவர் பாடம் எடுக்க மாட்டார். இப்படி அலட்சியம் நிறைந்த ஆசிரியர்கள் தான் பெரும்பாலும் அரசுப்பள்ளியில் நிரம்பிக் கிடக்கின்றனர். இதில் இவர்களுக்கு மாத சம்பளம் ரூபாய் ஐம்பதாயிரம். இன்னமும் தேர்வு விடைத் தாள்களை திருத்த மாட்டோம் என்று போராட்டமும் புறக்கணிப்பும் நடத்துகிறார்களே தவிர பாடம் முறையாக நடத்துவதாகத் தெரியவில்லை.

இப்படி நாடு எங்கும் காசு வசூலிக்கும் தனியார் பள்ளிகள் நிரம்பி விட்டால் அரசுப்பள்ளிகள் வெறும் கட்டிடங்களாக மட்டுமே இருக்கும். மாணவர்கள் இருக்கும் போதே பாடம் நடத்தாத ஆசிரியர்கள் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டால் ஐ ஜாலி என்று வெட்டி நாயம் பேசித் திரியப் போகிறார்கள்.

இதனால் தான் நகரங்களில் ஐம்பது சதவீத குழந்தைகளும், கிராமங்களில் முப்பது சதவீத குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். கடந்த 2011 ம் ஆண்டு முதல் 2015 ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் அரசுப் பள்ளிகள் 1.1 கோடி மாணவர்களை இழந்துள்ளது. அதே சமயம் 1.6 கோடி மாணவர்கள் தனியார் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்த கால கட்டத்தில் 8337 அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அதே காலத்தில் பதினொரு மடங்கு அதிகமாக 96 ஆயிரத்து 416 தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலை தொடர்ந்தால் பள்ளியில் ஆசிரியர்கள் மட்டுமே மாதம் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பார்கள். தற்போது மட்டும் இந்தியாவில் உள்ள 6174 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவன் கூட இல்லை.

இந்த லட்சணத்தில் இருக்கிறது அரசுப் பள்ளிகள். இந்த வருடம் நீட் தேர்வில் எத்தனை
அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் வெளியே பணம் கொடுத்து பயிற்சி பெறாமல் அரசு கொடுத்த
இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்து தேர்வு பெறுகிறார்கள் என்று பார்ப்போம். பத்து
மாணவர்களுக்கும் மேல் தேர்ச்சி பெற்றுவிட்டால் தமிழகம் உருப்படும் என்றும் இந்தியாவில்
ஏழைகளுக்கான கல்விக்கு இன்னமும் ஆயுசு இருக்கிறது என்றும் கருத்தில் கொள்வோம்.

Related Articles

கூகுளின் அடுத்த அவதாரம் – செயற்கை ... கைப்பேசியில் நிழற்படம் எடுத்து எடுத்து உங்களுக்கு போரடித்து விட்டதா? அப்படி என்றால் இந்தச் செய்தி உங்களுக்காகத்தான். தேடுபொறி இயந்திரமாக இணைய உலகிற்கு...
எல்லோரும் செய்றதனால தப்பு சரின்னு ஆகிடாத... நூறு நாட்களை தொட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்புப் போராட்டம் பல இழப்புகளை சந்தித்து ஓரளவுக்கு வெற்றி கண்டு உள்ளது. மற்றொரு போராட்டம் பல தலைமுறைகளாக தொ...
பாண்டிச்சேரி கடற்கரையில் கதறி அழுத மைக்ச... துப்பாக்கி முனை படத்தில் ஆஷாத் என்னும் கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்தார் ஆர்ஜே ஷா.  இவரைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை.  யூடியூப்  ...
ஜோதிடம் நம் வாழ்க்கையில் எந்த மாதிரியான ... உலகம் எவ்வளவு வேகமாக இயங்கினாலும் எவ்வளவு வேகமாக மாறினாலும் விஞ்ஞானம் எவ்வளவோ தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்தாலும் எல்லாமே இயந்திர செயல்பாடுகள் என்று ம...

Be the first to comment on "உலகிலயே அதிக தனியார் பள்ளிகளை கொண்ட நாடு எது தெரியுமா?"

Leave a comment

Your email address will not be published.


*