பிரபல யூடியூப் சேனல்கள் வைக்கும் தலைப்பை பாருங்கள்! – அசந்து போய் விடுவீர்கள்!

கடந்த  நான்கு வருடங்களாக தான் இந்த யூடியூப் உலகம் இவ்வளவு பிரபலமாக இருக்கிறது.  அப்போது முதல் இப்போது வரை ஒரே ஒரு விஷயம் மட்டும் மாறவே இல்லை.  அது என்னவென்றால் சினிமா நடிகைகளை வைத்து ஆபாசமாக தலைப்பு வைப்பது,  நடக்காத செய்தியை நடந்தது போல் தலைப்பில் காட்டுவது,  அவர்களுடைய அந்தரங்க வாழ்க்கையை வெளியே கொண்டு வருவது, அவர்களுடைய முன்னாள் காதலர்கள் பற்றி சொல்வது, முன்னால் கணவர் பற்றி பேசுவது, அவர்களுடைய ஜாதி பற்றி சொல்வது, நடிகைகளின் அக்கா தங்கைகளை பற்றி சொல்வது  போன்ற செய்திகளை  சமூகத்தில் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக சினிமா துறையில் பல ஆண்டுகள் வேலை செய்துவிட்டு இப்போது சினிமா துறையிலிருந்து வெறுத்துப்போய் வெளியே வந்த  சில நபர்கள்  அதே சினிமாவை வைத்து காசு பார்க்கும் பொருட்டு  எவ்வளவு ஆபாசமாக தலைப்பு வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் தலைப்பு வைத்து தகவல்களை வெளியே செல்கின்றனர். அதிலும் குறிப்பாக அந்த மாதிரியான நபர்களுக்கு பிரபல  வார இதழ்கள் ஆதரவாக செயல்படுகின்றன. இத்தனைக்கும் அந்த வார இதழ்கள் பெண்களுக்கு என்று தனியான இதழ்கள் நடத்துகின்றன. அந்த இதழ்களில் பெண்களுக்கான அழகுக் குறிப்புகள், மருத்துவ குறிப்புகள், சமையல் குறிப்புகள், கோவில் பற்றிய குறிப்புகள்,  யோகா, உடற்பயி்ற்சி, போன்ற  செய்திக் குறிப்புகளை தகவல்களை வழங்கி வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு பத்திரிகை தங்களுடைய யூடியூப் சேனலில் சினிமா கிசுகிசு என்கிற பெயரில் இந்த மாதிரியான தலைப்புகளை வைக்கலாமா என்கிற கேள்வி எழுகிறது. அந்த மாதிரியான ஒரு பிரபல வாரப் பத்திரிக்கை தங்களுடைய யூடியூப் சேனலில் சினிமா கிசுகிசு என்கிற பெயரில் நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான தலைப்புகள் வைத்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். 

விஷால் மீது நடிகை ஆபாச புகார், ரூமில் தள்ளிய தயாரிப்பாளர் கஸ்தூரி பரபரப்பு,  நிர்வாண படம் வெளியிட்டதால் பிக்பாஸ்  நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றம், அதிக முறை திருமணம் செய்த நடிகைகள்,  பாலியல் வழக்கில் சிக்கிய நடிகைகள், வெப் சீரியஸில் ஆடை இல்லாமல் நடித்த தமிழ் நடிகை,  நடிகை நடிகர் விவாகரத்துகள் இது தான் காரணமா?, படுக்கைக்கு அழைத்த பிரபலங்கள் நடிகைகள் தடாலடி, வனிதாவின் நான்காவது திருமணம் செல்லாது, அந்த இடத்தில் பச்சை குத்திய நடிகைகள், ஆடையின்றி நடிக்கும் இன்னொரு நடிகை, பிரபல தெலுங்கு ஹீரோ உடன் ஆட்டம் போட்ட டிவி ஆங்கர், பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகைகள்,  நயன்தாராவுக்கு அல்வா கொடுத்தது யார், நித்தியுடன் சேரத் துடிக்கும் நடிகைகள், விஷால் திருமணம் நிற்க நடிகை காரணமா,  என்னை தூக்கச் சொன்னார் பாரதிராஜா – மீராமிதுன்!, நட்சத்திர விழாவில் தங்கம் கடத்தும் நடிகைகள்,  மீண்டும் ஒரு பாடகி யுடன் அனிருத்து நெருக்கம்,  திருமண மோசடி கும்பலில் சிக்கிய நடிகை, வயசாகியும் மவுசு குறையாத நடிகைகள்,  கைதுக்கு பயந்து தனக்கு கரோனா என்ற நடிகை, இந்த காதலாவது கல்யாணத்தில் முடியுமா பிரபல நடிகை வருத்தம், சின்னத்திரை நடிகைகளின் கவர்ச்சி போட்டி, பிரபல வாரப் பத்திரிகையில் யூடியூப் சேனல் தலைப்புகள் இப்படி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்த மாதிரியான தலைப்புகள் வைத்து நிகழ்ச்சி நடத்துபவர் சினிமாவில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்தவர். சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்திற்கு அவ்வளவு அருமையாக விமர்சனம் கொடுத்திருந்தார். பல்லு படாமல் பார்த்துக் கொள்ளனும் என்கிற படத்தின் அறிமுக விழாவில் அந்த படத்தின் இயக்குனருக்கு அறிவுரை சொல்லி  சினிமாவுக்கு வரவேற்றார். இப்படிப்பட்ட ஒரு நபர் இந்த மாதிரியான செய்திகளை சொல்லும்போது உண்மையிலேயே குழப்பம் உண்டாகிறது. இந்த மாதிரியான செய்திகள் தான் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகிறதா என்கிற ஒரு கேள்வியும் எழுகிறது. 

இப்படி நம்பிக்கைக்குரிய பெரிய மனிதர்களே இந்த மாதிரி செய்திகளை சொல்லும்போது சில அரைகுறை மனிதர்கள்  பெரிய பெரிய பத்திரிகைகளை விட நம்மளுடைய சேனல் அதிகம் சம்பாதிக்கனும் அதிக பார்வைகளை பெறவேண்டும் முன்னணி இடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தலைப்புகளை நாசுக்காக அல்லது இலை மறை காயாக வைக்காமல்  ரொம்ப வெளிப்படையாக வைத்து  காசு பார்க்க நினைக்கிறார்கள் இப்படி அந்த மாதிரியான அரைகுறை யூடியூப் சேனல் நடத்துபவர்கள் எப்படி தலைப்பு வைக்கிறார்கள் என்று பாருங்கள். 

தாராளமாக காட்டும் குடும்ப குத்துவிளக்கு நடிகை, நடிகை ராதிகாவை கதறக் கதற வேட்டையாடிய நடிகர் சற்று முன் வெளியான பரபரப்பு வீடியோ,  18 வயதில் நடிகை மீனாவின் சாமானை கதரகதர கிழித்த 3 பிரபல நடிகர்கள், சற்றுமுன் விஜய் டிவி சீரியல் நடிகை திருமணம்,  நடிகை சினேகாவின் மார்பை பிடித்து கசக்கும் வீடியோ, சற்றுமுன் பிரபல நடிகை வீட்டில் துடிதுடித்து மரணம்,   எனக்கு எதுவுமே தெரியாது என்னை விட்ருங்க காலில் விழுந்து கதறிய நடிகை, நடிகைகளின் ஜாதி,  நடிகை மீனா பற்றி யாருக்கும் தெரியாத தகவல்,  மலையைக் காட்டும் சீரியல் நடிகைகள், 40 வயதிலும் தாராளம் காட்டும்  சாமுராய் பட நடிகை,  வயசானாலும் கெத்து காட்டும் நடிகை மீனா, பிரபல நடிகை லட்சுமியின் தற்போதைய நிலை தெரியுமா, சரண்யாவின் முதல் கணவர் யார் தெரியுமா,  கள்ளுமலை கொண்ட கீர்த்தி சுரேஷ் கதற கதற வேட்டையாடிய நடிகர்,  52 வயதில் பக்கத்து வீட்டு பையனுடன் படுத்து குழந்தை பெற்ற பிரபல நடிகை, நடிகை சரண்யாவை வேட்டையாடிய 5 தமிழ் நடிகர்கள், நடிகை சங்கீதா இன்றைய நிலை என்ன, கைவிட்ட கணவர் அனாதையாக வாழும் நடிகை கனகா, நடிகை சீதா எப்படிப்பட்டவரோ அதிர்ச்சி வீடியோ,  நடிகை ராதிகாவின் கொடுமையான கண்ணீர் கதை சாரத்குமார் கதறல், கில்மா படத்தில் தேவயானி இது உங்களுக்கு தெரியுமா, நடிகை மோனிகாவின் தற்போதைய பரிதாப நிலை, நடிகை திரிஷா இப்படிப்பட்டவரா கண்ணீர் கதை,   நடிகை சீதாவின் நிஜ வாழ்க்கை சர்ச்சைகள் காரித்துப்பிய பார்த்திபன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பைத்தியம் ஆன நடிகை கனகா, வாய்ப்புக்காக நடிகை குஷ்பு செய்த காரியத்தை பாருங்கள், காதலர் தினம் நடிகை தற்போதைய நிலை, ஆதித்யா வர்மா நடிகை பனிதா சந்து யார் தெரியுமா,  நடிகை மோனிகா இப்ப என்ன பண்றாங்க தெரியுமா?,  பானுப்பிரியாவின் பலான படம் வெளியானது தெரியுமா?, சற்றுமுன் நடிகை ஆர்த்தி இரண்டாவது திருமணம் கதறிய கணவர், நடிகை அகிலாண்டேஸ்வரி வீட்டில் நடந்த கொடுமை! – அதிர்ச்சியில் ரசிகர்கள், நடிகை கஸ்தூரி வயதுக்கு வந்ததிலிருந்து  மிரட்டி மிரட்டியே வேட்டையாடும் நடிகர்,  சற்றுமுன் பிரபல நடிகை திடீர் மரணம் – புற்றுநோயால் விபரீதம்!, பட வாய்ப்புக்காக மீசையமுறுக்கு நடிகை செய்த கேவலம், இந்த மாதிரியான தலைப்புகள் பிரபல பத்திரிகையின் யூடியூப் சேனல் ஆகவும் இல்லாமல், பிரபல யூடியூப் சேனல் ஆகவும் இல்லாமல்   நியூஸ் பேப்பரில் வரும் சின்ன சின்ன கிசுகிசு செய்திகளை வைத்து அதை யூட்யூப் வீடியோவாக போடுபவர்கள், இந்த மாதிரியான தலைப்பு வைத்திருக்கும் யூடியூப் வீடியோக்களை நன்கு கவனித்தால் அதில் வேறு தகவல்கள் சொல்லப்பட்டிருக்கும்.  அதே சமயம் இந்த மாதிரியான ஆபாச செய்திகள் ஆபாச தலைப்புகள் வைத்திருக்கும் வீடியோக்களை தொகுத்து வழங்குவது அல்லது அந்த செய்தியை வாசிப்பது யார் என்று பார்த்தால் அது பெரும்பாலும் பெண்கள் ஆகத்தான் இருக்கும். 

இந்த மாதிரியான சின்னச் சின்ன யூடியூப் சேனல்கள் தம்னைல் வைக்கும் புகைப்படங்களை கவனித்தால்,  அதில் பெரும்பாலும் நடிகைகள் அழுது கொண்டு இருப்பது போலவோ அல்லது அக்குளை காட்டி நிற்பது போலவோ, அல்லது குனிந்து மார்பகத்தை காட்டுவது போலவோ,  நீச்சல் உடையில் நிற்பது போலவோ அல்லது பாவாடையை தூக்கிக் கொண்டு நிற்பது போலவோ, வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது போலவோ,   போலீஸ்களுக்கு மத்தியில் நிற்பது போலவோ புகைப் படங்களை வைத்து தம்னைல் அமைத்திருப்பார்கள். 

சில சமயங்களில் பிரபல பத்திரிக்கையின் யூடியுப் வீடியோக்களில் கூட இந்த மாதிரியான புகைப்படங்களை பார்க்கலாம்.  அதேபோலத்தான் பிரபல யூடியூப் சேனல்களிலும் இத்தனைக்கும் அந்த யூடியூப் சேனல்கள் அந்த சினிமா நடிகைகளை நேர்காணல்கள் செய்கிறார்கள், அவர்கள் நடத்தும் விருது விழாக்களுக்கு இதை யூட்யூப் சேனல் நிறுவனர்கள் நடிகைகளை சிறப்பு விருந்தினராக பங்கேற்பளராக அழைக்கிறார்கள்.  அப்படி சினிமா பிரபலங்களுடன் நெருக்கமாக இருந்த போதிலும் அவர்கள் இந்த மாதிரியான தலைப்புகள் வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். 

இந்த மாதிரி கவனயீர்ப்புக்காக தலைப்பு வைக்கும்  யூடியூப் சேனல்கள் மீது பத்திரிக்கை நிறுவனம் யூடியூப் சேனல்கள் மீது நடிகைகள் நடிகர்கள் எதுவும் நடவடிக்கைகள் எடுக்க மாட்டார்களா என்கிற கேள்வி எழுகிறது.  பல வருடங்களாக பல முன்னணிப் பத்திரிகைகள் கூட எந்த மாதிரியான செய்திகளை எழுதி வருவதால் நடிகைகள் இந்த மாதிரியான செய்திகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தும் எந்த மாற்றமும் ஏற்படாததால் இந்த மாதிரியான விஷச் செடிகளை ஒருபோதும் அழிக்க முடியாது என்று நன்கு தெரிந்து கொண்டனர். பாவம் அந்த யூடியூப் மக்கள், அவர்களுக்கு சம்பாதிக்க சரியான வழி இல்லாததால் இந்த மாதிரியான பாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் போல என்று தங்களைப் பற்றி எந்த அவதூறான செய்தி வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் நடிகைகள் பெருந்தன்மையுடன் இருக்கிறார்களா?,  எந்த செலவும் செய்யாமல் மக்களிடம் தங்களை பற்றிய செய்திகள் சென்றடைகிறது அது நல்ல செய்தியா கெட்ட செய்தியா தேவையில்லை மக்களிடம் நாம் சென்றடைகிறோம் என்ற விளம்பரத்துடன் இருக்கிறார்களா? என்ற கேள்விகள் முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது. இவையெல்லாம் 18 வயது அடைந்த அவர்கள் பார்க்க வேண்டிய செய்தி என்ற பிரிவில் வருவதால்  இவர்களுக்குப் பெரும்பாலும் வருமானம் குறித்து எந்த கவலையும் இருக்காது  என்கின்றனர் சிலர். ஆனால் இன்னும் சிலரோ,  இந்த மாதிரி செய்திகளை வெளியிடுவதால் செய்தி வெளியிடும் அவர்களுக்கு எந்த வருமானமும் கிடைக்காது. அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் சினிமாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  அதனால் அதே சினிமாவை அவதூறு செய்யும் வகையில் சினிமா மீது சாமானிய மக்களுக்கு வெறுப்பு வரும் வகையில்  தங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இந்த மாதிரியான செய்திகளை பரப்பிவிட்டு அதன்மூலம் கொஞ்சம்  மனம் மகிழ்கிறார்கள்  என்கின்றனர் சிலர். எது எப்படியோ ஆனால் இந்த மாதிரியான வீடியோக்கள் போடுபவர்களின் வாழ்க்கையும் இந்த வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பவர்களின் வாழ்க்கையும் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. 

Related Articles

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்சார்?... இந்தியாவில் வெளியாகின்ற திரைப்படங்களுக்கு இந்திய சென்சார் குழு சான்றிதழ் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் வகையிலோ, குறிப்பிட்ட நபரை தாக்...
அரசியல் லாபகரமாக இல்லாத போது, அலுப்புத் ... ரஷ்ய புத்தகங்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருபவை மாக்சிம் கார்க்கியின் புத்தகங்கள் தான். அவருடைய கட்டுரைகள் சிறுகதைத் தொகுப்புகள் நாவல்கள் பல உலகின் ...
ஜெய் பீம் ராஜாகண்ணு மனைவிக்கு அரசாங்கம் ... ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு ராகவா லாரன்ஸ் செய்த நல்ல காரியம் என்று தான் முதலில் தலைப்பு வைக்க தோன்றியது. ஆனால் மாற்றிவிட்டோம். சின்ன கட்டுரை தான் பொ...
சில நேரங்களில் சில மனிதர்கள் – பார... (புத்தகமாக காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கிறது)சாகித்திய அகாடமி விருது பெற்ற ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பீம்சிங், எம்.எஸ்.வி...

Be the first to comment on "பிரபல யூடியூப் சேனல்கள் வைக்கும் தலைப்பை பாருங்கள்! – அசந்து போய் விடுவீர்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*