இந்திய அளவில் சிறந்த நிர்வாகம் செய்வதில் கேரள மாநிலத்துக்கு முதலிடம்!

Kerala topped the list of best management in India

சாமுவேல் பால் என்ற பிரபல பொருளாதார நிபுணர் பப்ளிக் அப்பேர்ஸ் சென்டர் என்ற மையத்தை 1994ல் தொடங்கினார். நாட்டில் சிறந்த நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அமைப்பாக இந்த மையம் இருந்து வருகிறது. இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் இருந்து வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக முதல் முறையாக சிறந்த நிர்வாகம் செய்யும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டார். சமூகப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் இந்த அட்டவணை வெளியிடப் படுகிறது. இந்த வருடத்திற்கான பட்டியல் கடந்த சனிக்கிழமை அன்று வெளியிடப் பட்டது.

அதில் சிறந்த நிர்வாகம் செய்யும் மாநிலமாக கேரளா முதல் இடம் பிடித்து உள்ளது. இது கேரளாவுக்கு மூன்றாவது வருடம் ஆகும். இந்த வருடத்தோடு கேரளா தொடர்ந்து முதல் இடம் பிடித்து வருகிறது.

அடுத்த இடத்தில் இருப்பது எந்த மாநிலம் என்று யூகிங்கள் பார்ப்போம். பதில் கொஞ்சம் அதிர்ச்சியான உண்மை தான். இரண்டாம் இடத்தை நமது தமிழ்நாடு மாநிலம் பிடித்து இருக்கிறது. அதைத் தொடர்ந்து தெலுங்கான மூன்றாம் இடத்தையும், கர்நாடகா நான்காம் இடத்தையும், குஜராத் ஐந்தாம் இடத்தையும் பிடித்து இருக்கிறது.

அதே போல இந்த அட்டவணையில் கடைசி இடங்களை மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் போன்ற மாநிலங்கள் இடம் பிடித்து இருக்கிறது.

மிகச் சிறிய மாநிலங்களாக கருதப்படும் அதாவது 2 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் இமாச்சல பிரதேசம் முதலிடத்தையும் கோவா, மிசோரம் போன்ற மாநிலங்கள் இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் முறையே பிடித்து இருக்கின்றன. இதே போல கடைசி இடங்களை நாகலாந்து, மணிப்பூர், மேகலயா மாநிலங்கள் இடம் பிடித்து இருக்கின்றன.

Related Articles

நடிகர்களை நம்பாதிங்க – சத்யராஜ்! ந... கமல், ரஜினி இருவரும் தங்களது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில், " நடிகர்களை நம்பாதி...
இந்தியாவில் நிலவும் பிரச்சினைகளும் ̵...  குழந்தைத் தொழிலாளர்கள் –காக்கா முட்டை, குட்டி, வாகை சூடவா, மெரினா, கோலிசோடா, காதல் கொண்டேன், பாலாஜி சக்திவேல் படங்கள் – காதல், கல்லூரி, வழக்கு எண...
ஆதார் இணைக்கக் கால கெடு நீட்டிப்பு. தீர்... மார்ச் 31 ஆம் தேதிக்குள் மொபைல் எண்கள் மற்றும் வங்கி கணக்கு ஆகியவற்றோடு கட்டாயம் ஆதார் காரடையும் இணைக்க வேண்டும் என்ற கால கெடுவை மறு உத்தரவு வரும் வர...
இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் வன்புணர... நம்மில் பெரும்பாலோனோர் கேட்டதும் பதறும் குற்றமென்றால் அது பாலியல் வன்புணர்வு தான். காரணம் அது ஒருவரை உடல்ரீதியாக, மனரீதியாக வாழ்நாள் முழுவதும் பாதிப்ப...

Be the first to comment on "இந்திய அளவில் சிறந்த நிர்வாகம் செய்வதில் கேரள மாநிலத்துக்கு முதலிடம்!"

Leave a comment

Your email address will not be published.


*