தமிழ் ராக்கர்ஸ்க்கு சவால்விட்ட சன் பிக்சர்ஸ் !

தமிழ் ராக்கர்ஸ்க்கு சவால்விட்ட சன் பிக்சர்ஸ் !

தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது. அதை தொடர்ந்து இந்தப் படத்தை இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டி சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்நிலையில் சர்கார் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் நிரந்திரத் தடை  விதித்துள்ளது.

இணையதள விஷியங்களை பொறுத்தவரை எந்த விஷியத்திற்கு தடை விதித்தாலும் அது பயனற்றது என்பது தான் தற்போதைய நிலைமை. அப்படி இருக்கையில் சர்கார் படத்திற்கு தடை விதித்தால் மட்டும் படம் வெளியாகாமல் இருக்கப் போவதில்லை. இயங்கி வரும் பல இணைய தளங்களை முடக்கினாலும்  எதோ ஒரு புதிய தளத்தின் மூலம் படம் வெளியாகத் தான் போகிறது. அதே சமயம் தமிழ் ராக்கர்ஸ்க்கு இன்னொரு தலைவலியும் இருக்கிறது.

கும்பலோடு கும்பலாக இருந்து திருட்டுத் தனமாக மொக்கை பிரிண்டில் எடுத்து வர மட்டுமே முடியும். காரணம், தியேட்டர்களில் அவ்வளவு கெடுபிடி.

சமீபத்தில் சில தியேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வீடியோ எடுக்க உதவும் தியேட்டர்கள் என்ற ரீதியில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அந்த தியேட்டர்களின் பட்டியல்:

கிருஷ்ணகிரி முருகன் – மனுசனா நீ

கிருஷ்ணகிரி நயன்தாரா – கோலிசோடா டூ

மயிலாடுதுறை கோமதி – ஒரு குப்பைக் கதை

கரூர் எல்லோரா – ஒரு குப்பைக் கதை

ஆரணி சேத்பட் பத்மாவதி – மிஸ்டர் சந்திரமௌலி

கரூர் கவிதாலயா – தொட்ரா

கரூர் கவிதாலயா – ராஜா ரங்குஸ்கி

பெங்களூரு சத்யம் – இமைக்கா நொடிகள்

விருத்தாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா தியேட்டர் – சீமராஜா

மங்களூர் சினிபொலிஸ் – சீமராஜா

ஆக, இணையதளங்களில் இனி நல்ல பிரிண்ட் உடன் படம் வெளியாவதற்கு வாய்ப்புகள் பெரும்பான்மையான வரை குறைவு என்பதால் தமிழ் ராக்கர்ஸ்க்கு ஓரளவுக்கு தலைவலி தான். அதே சமயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான 96 படத்தை, ” இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படம் ” என்று விளம்பரம் செய்து வருகிற செவ்வாய் கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்ப இருக்கிறார்கள். தமிழ் ராக்கர்ஸே இன்னும் இந்தப் படத்தை HD யில் வெளியிடவில்லை என்பதால் ரசிகர்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இவ்வளவு வேகத்தில் தொலைக்காட்சிகள் புதுப்படத்தை ஒளிபரப்புகிறதா? அப்படினா எப்படியும் சர்கார் படத்தை வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கோ அல்ரது பொங்கலுக்கோ சன்டிவியில் போட்டு விடுவார்கள் அதுவரைக்கும் காத்திருக்கலாம் என்று சிலர் இப்போதே கட்டுப்பாடோடு இருக்க தொடங்கி இருக்கிறார்கள்.

Related Articles

பூ ராமு” – நம் மனதில் நீங்கா... " இவர் தான் உன் அப்பாவா... "" ஆமா சார்... ""இப்படியொரு அப்பாவியான அப்பாவ வச்சிக்கிட்டு ஆள மாத்தி கூட்டி வந்துருக்கியேடா... "" உனக்கொரு விஷ...
வங்கி மோசடி புகாரில் சிக்குகிறார் பஞ்சாப... விஜய் மல்லையா ஆரம்பித்து வைத்த வங்கி மோசடி நாடெங்கும் பரவி இன்று நிரவ் மோடி வரை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தினமும் வங்கி மோசடி குறித்த செய்திகள் நா...
யோகி பாபு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!... அப்பா விஸ்வநாத். இராணுவ வீரர். 24 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றி உள்ளார். அம்மா விசாலாட்சி. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஸ்போர்ட்ஸ் கோட்டாவி...
புழுதி படிந்துக் கிடைக்கும் பேன்சி ஸ்டோர... மௌனம் பேசியதே படம் பார்த்திருக்கிறீர்களா? அந்த படத்தில் தன் மனதுக்குப் பிடித்தமானவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் காதலை தெரிவிக்கும் அட்டைகள் போன்ற க்ரீட்...

Be the first to comment on "தமிழ் ராக்கர்ஸ்க்கு சவால்விட்ட சன் பிக்சர்ஸ் !"

Leave a comment

Your email address will not be published.


*