ஒருத்தர் விடாம எல்லோரையும் கலாய்ச்சிருக்காங்க – தமிழ்ப்படம் 2.O டீஸர்!

தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதும் பதற்றம் படபடப்பு என்ற சூழல் நிலவ அந்த சமயத்தில் அனைவரையும் கிச்சு கிச்சு மூட்டும் வகையில் சில நிகழ்வுகள் நடக்கும். அதுபோலத் தான் இப்போது நடக்கிறது. ஒருபுறம் சூப்பர் ஸ்டாரை எல்லோரும் கலாய்க்க, மறுபுறம் அகில உலக சூப்பர் ஸ்டாரின் தமிழ்ப்படம் 2.O டீஸர் ரீலிசாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப்படம் ரிலீசாகி பலத்த வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது என்றதும் நெட்டிசன்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை. அதன்படி பர்ஸ்ட் லுக் டீஸரே படு கலாயாக இருந்தது. அதைத் தொடர்ந்து மகளிர் தினத்தன்று ஆண்களையும் ஆணாதிக்கத்தை கலாய்க்கும் வகையில் “எவடா உன்னப் பெத்தா” பாடல் ரிலீசாகி யூத்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இன்று டீஸர் ரிலீசாகி உள்ளது. வெறும் 42 நொடிகள் என்றாலும் கலாய்களுக்கு பஞ்சம் இல்லை. ஓபிஎஸ் தொடங்கி துப்பாக்கி, மங்காத்தா, மெர்சல், விக்ரம் வேதா வரை பல படங்களை வச்சு செய்து இருக்கிறார்கள். டபுள் மீனிங், செக்ஸ் காமெடிகள் இல்லாமல் இருந்தால் இருட்டு அறையில் முரட்டுக்குத்து  படத்துக்குப் பதிலடியாக இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Related Articles

“நம்மள மாதிரி பசங்களாம் ஒவ்வொரு வா... தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்இசை : இமான்எடிட்டிங் : ரூபன்ஒளிப்பதிவு : நீரவ் ஷாகதை திரைக்கதை வசனம் இயக்கம் : பாண்டியராஜ்நடிகர்கள் : சிவ...
தனுஷ் படங்களும் ஆனந்த விகடன் மதிப்பெண்கள... புதுப் பேட்டை - 45 திருவிளையாடல் ஆரம்பம் - 41 பொல்லாதவன் - 43 யாரடி நீ மோகினி - 42 உத்தமபுத்திரன் - 41 ஆடுகளம் - 44 வேங்கை - 37 ...
படைப்பாளிகள் கலைஞர்கள் இவர்களெல்லாம் தங்... தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமா அளவில் ஏன் உலக சினிமா அளவில் கூட மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவில் பிரபலமான அல்லது மக்களுக்கு மிகவும...
அசீஃபா பானுவின் மரணத்துக்கு நீதி வழங்கப்... ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்துக்கு உட்பட்ட ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி அச...

Be the first to comment on "ஒருத்தர் விடாம எல்லோரையும் கலாய்ச்சிருக்காங்க – தமிழ்ப்படம் 2.O டீஸர்!"

Leave a comment

Your email address will not be published.


*