ஜியோ போன் வாங்கியவர்கள் என்ன பாவம் செய்தவர்களோ? – அலையவிடும் அலைபேசிகள்!

What's wrong with Jio phone buyers

“குறைந்த விலையில் நிறைந்த சேவை” இந்த வாக்கியம் மக்களை முட்டாளாக்கும் வாக்கியம். மக்களை முட்டாளாக்கும்படியே நடந்துகொள்கிறது ஜியோ கம்பெனி.

ஜியோ கீபேட் போன் மற்றும் லைப் போன் :

வெறும் ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வாட்சப் வசதியோடு இலவச இண்டர்நெட் வசதியுடன் போன் தருகிறோம், மாதம் 49 ரூபாய் மட்டுமே எவ்வளவு கால்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கலாம்… ப்ரீ… ப்ரீ… ப்ரீ… என்று தெருவுக்கு தெரு கடையை விரித்து கூவி கூவி விற்கிறார்கள். அதை நம்பி மக்களும் வாங்குகிறார்கள். ஆனால் கொடுத்த காசுக்கு தகுந்தாற்போல அந்தப் போன்கள் இயங்குவது இல்லை. வாங்கிய நாலாவது நாளே ஸ்பீக்கர் அவுட், பேட்டர் அவுட், சார்ஜர் அவுட் என்று ஏகப்பட்ட பிரச்சினைகள்.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சர்வீஸ் சென்டரை அணுகுங்கள் என்கிறார்கள். ஆனால் அங்கு சென்றாலோ ஒரு பயலும் கண்டுகொள்வதில்லை. அப்படியே பிரச்சினையை காது கொடுத்து கேட்டாலும் அதை உடனடியாக கிளியர் பண்ணி அனுப்புவதில்லை. வெயிட் பண்ணுங்க… என்கிறார்கள். வெயிட்டிங் வெயிட்டிங் என்று ஒருநாள் வேலையே கெடும் அளவிற்கு வெயிட் பண்ண வைத்து இறுதியாக ஏன்டா இந்த போனை வாங்கினோம் என்ற அளவுக்கு வாடிக்கையாளர்களை நோகடித்து விடுகிறார்கள் சர்வீஸ் சென்டரில் இருக்கும் புண்ணியவான்கள்.

என்னங்க இப்படி பண்றிங்க… என்று யாராவது கேள்வி எழுப்பினால் இந்த ரேட்டுக்கு வாங்குன போனு இவ்வளவு தான் உழைக்கும்… அடிக்கடி பிரச்சினை வரத் தான் செய்யும்… ஒவ்வொரு தடவையும் நீங்க இங்க வந்து வேலைய கெடுத்துட்டு இங்க வெயிட் பண்ணித் தான் ஆகணும்… போனு வாங்குன காசவிட அதற்கு பண்ற செலவு அதிகமா தான் இருக்கும்… உங்களால என்ன பண்ண முடியும்,.. எதுக்கும் வக்கு இல்லாம தான இந்தப் போன வாங்குன… என்று திமிரோடு பேசுவதோடு மட்டுமில்லாமல் ஒருமையில் பேசி மனதை நோகடித்து வெளியே அனுப்பிவிட்டு ஊரை ஏமாத்தி காசு திங்கும் நாய்களோ ஏசி காற்றுக்குள் குளுகுளுவென்று சொகுசாக இருக்கிறார்கள்.

இந்த மாதிரி போன் வாங்கியவர்களோ சொகுவாதிகள் அல்ல. டிரைவர், பெயிண்டர் என்று நடுத்த வர்க்கத்தினரும் அதற்கும் கீழான வர்க்கத்தினரும் மட்டுமே இந்த போனை உபயோகிக்கிறார்கள். திடீரென்று இந்தப் போன்களீல் பிரச்சினை எதாவது ஏற்பட்டால் அவர்களுடைய அரைநாள் வேலையும் அவ்வப்போது முழுநாள் வேலையும் பாதிக்கப்படுகிறது. கொடுக்கற காசுக்கு கொஞ்சமாவது உழைக்கற மாதிரியான போன தாங்கய்யா…!

ஜியோ போன் மற்றும் லைப் போன் வாங்கும் முன் சற்று சிந்தித்து வாங்குங்கள் மக்களே!

 

Related Articles

ஓட்டுக்கு பணம் வாங்காத நேர்மையான குடிமகன... சர்கார் சந்தித்த பிரச்சினை என்னென்ன என்பது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் அதன் ரிலீஸ் தேதியில் சில குழப்பங்கள் எழுந்துள்ளது. நவம்பர் 2ம் தேதி ரிலீஸ் ஆ...
பாகுபலி நாயகனின் “சாஹோ” படம்... படம் ரிலீசான அடுத்த நொடிகளில் இருந்து இந்தப் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டு இருந்தாலும்  பாகுபலி நாயகனின் படம் என்பதால் இந்தப் படம் நல்...
பர்சு பத்திரம் மக்களே! – அவனே ஸ்ரீ... சர்டிபிகேட் U/A , காலம் : 172.53 நிமிடங்கள் தயாரிப்பு: புஷ்கர் பிலிம்ஸ் & வெளியீடு : Screen scene entertainment  ராவணன் மற்றும் அனுமன...
அர்ஜூன் ரெட்டியை ஓரங்கட்டிய எனை நோக்கி ப... தயாரிப்பு : எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் & ஒன்றாக எண்டர்டெயின்மென்ட்ரிலீஸ் : வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல் ஐசரி கணேஷ்எழுத்து இயக்கம் : கௌதம் வாசுதே...

Be the first to comment on "ஜியோ போன் வாங்கியவர்கள் என்ன பாவம் செய்தவர்களோ? – அலையவிடும் அலைபேசிகள்!"

Leave a comment

Your email address will not be published.


*