ப்ளாக் பஸ்டர் படங்கள் இயக்குவது எப்படி?

How to direct blockbuster movies
  1. முதலில் வில்லனுக்கான அறிமுக காட்சி இருக்க வேண்டும். காரணம் வில்லன் தான் படத்தின் நாயகனே என்பதற்காக.வில்லனின் எண்ட்ரி செம மாஸாக இருக்க வேண்டும். அறிவாளியாக (பிரிலியண்டாக) திறமைசாலியாக யாருக்கும் அஞ்சாதவனாக காண்பிக்க வேண்டும். சிறிய வயதிலயே வில்லத்தனத்தை கற்றுக்கொண்டவனாக அல்லது வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலால் வில்லனாக ( தனி ஒருவன், ஸ்பைடர் ) மாறியதாக காண்பிக்க வேண்டும்.
  1. வில்லனின் எண்ட்ரி முடிந்த பிறகு டைட்டில் கார்டு கொடுக்க வேண்டும். டைட்டில் கார்டுக்கு பிஜிஎம் மரண மாஸாக இருக்க வேண்டும். கதைக்கு சம்பந்தமான புகைப்படங்களையோ செய்தி துணுக்குகளையோ காண்பிக்க வேண்டும்.
  1. சீன் பை சீன் சின்ன ட்விஸ்ட் இருக்க வேண்டும்.
  1. ஹீரோ எண்ட்ரி காது, தலை, காலை, கையை போன்றவற்றை ஸ்லோமோசனில் காண்பிக்காமல் எங்கையோ நுழைவது போல் வருவது போல் மிகச் சாதாரணமாக காட்சி அமைத்தாலே போதுமானது.
  1. முடிந்தவரை லாஜிக் மிஸ்டேக்குகள் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மாஸ், பைட் சீன், பஞ்ச் என்றில்லாமல் குடும்ப பாசம், நட்பு பாசம், பற்று, போன்றவற்றை காண்பிக்க வேண்டும். காட்சிகள் அனைத்தும் மிகையாக இல்லாமல் உண்மைக்கு மிக நெருக்கமானதாக இருக்க வேண்டும்.
  1. அழுத்தமான(சந்தோசம் or துக்கம்) காட்சிகளை ஸ்லோ மோசனில் காண்பிக்க வேண்டும்.
  1. ஹீரோயின் எண்ட்ரி ஆகும்போது பிஜிஎம் சூப்பராக இருக்க வேண்டும். ஹீரோயின் காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல் செமயாக, ஒளிப்பதிவு சூப்பராக இருக்க வேண்டும். அதே சமயம் மேக்கப் குறைவாக இருக்க வேண்டும்.
  1. ஹீரோவையும் பிரிலியண்டான ஆளாக அஞ்சாதவனாக காட்ட வேண்டும். ஹீரோவின் நண்பர்களும் பலமானவர்களாக (ஹீரோவைவிட சற்று குறைவானவர்களாக) இருக்க வேண்டும்.
  1. பைட் சீன் பத்தடி தூரம் காற்றில் பறப்பது போல இருக்க வேண்டாம். பைட் சீனும் பிரிலியண்டாக இருக்க வேண்டும்.
  1. டபுள்மீனிங் வசனம் இருக்க கூடாது.
  1. ப்ளாஸ்பீக் சீன் மொட்டைமாடியில் இருள் சூழ்ந்த இடத்தில் இருந்து தொடங்குவது போல இருந்தால் ஓகே ரகம்.
  1. வில்லன் எப்படி ஹீரோவின் பாதையோடு தொடர்புடையவனாக இருக்கிறான். வில்லனை நெருங்க ஹீரோ எப்படி திட்டமிடுகிறான். வில்லன் பெரிய அதிகார பலமிக்கவனாக இருக்க வேண்டும். ஹீரோ சாமான்யனாக இருக்க வேண்டும்.
  1. இடைவேளையின் கடைசி பத்து நிமிடங்கள் விறுவிறுப்பாக செல்ல வேண்டும். ஆச்சர்யங்கள், குழப்பங்கள் இருக்க வேண்டும். வில்லன் எண்ட்ரி மரண மாஸாக இருக்க வேண்டும். வில்லன் எதற்கும் அசராதவனாக பெண் சுகம், தீய பழக்கங்கள் உடையவனாக இருக்க வேண்டும். வில்லன் அதிகம் பேசக் கூடாது. அதே சமயம் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சுருக் சுருக்கென்று இருக்க வேண்டும்.  இடைவேளை சவால் உடையதாக இருக்க வேண்டும்.
  1. வில்லன் பக்கம் ஒரு காமெடியன் ஹீரோ பக்கம் ஒரு காமெடியன் இருக்க வேண்டும்.
  1. இடைவேளைக்குப் பின் 30 நிமிடங்கள் வில்லனின் அசுர ஆட்டம் இருக்க வேண்டும். ஹீரோவை அலற விடவேண்டும். நாயகனுக்கு வேண்டியவர்களில் யாரேனும் சிலர் உயிரிழக்க வேண்டும்.

Related Articles

இவ்விடம் உங்கள் பணம் நல்ல முறையில் குட்ட... நீங்கள் அன்றாடம் வேலைக்குச் சென்று திரும்பும் எளிய வாழ்க்கையை வாழும் ஒரு சாமானியர். சிறுக சிறுக மயிலிறகுகளைச் சேமித்து வைத்திருப்பவர். ஒரு பெரிய புத்த...
12வது நாளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டது ... 12வது நாளாகத் தொடர்ந்து பெட்ரோலின் விலை 36 பைசா உயர்த்தப்பட்டு மும்பையில் லிட்டர் 85.65 ரூபாயாக விற்கப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்களாக உயர்த்தப்பட்டுக...
உலகிலயே அதிக தனியார் பள்ளிகளை கொண்ட நாடு... உலகிலயே அதிக அளவில் தனியார் பள்ளிகளைக் கொண்ட நாடு, உலகில் அதிக அளவில் தற்கொலை நடக்கும் நாடு போன்ற கேள்விகளுக்கு எல்லாம் தயங்காமல் இந்தியா என்று பதில் ...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து... தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. ...

Be the first to comment on "ப்ளாக் பஸ்டர் படங்கள் இயக்குவது எப்படி?"

Leave a comment

Your email address will not be published.


*