12வது நாளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டது பெட்ரோல், டீசலின் விலை

12வது நாளாகத் தொடர்ந்து பெட்ரோலின் விலை 36 பைசா உயர்த்தப்பட்டு மும்பையில் லிட்டர் 85.65 ரூபாயாக விற்கப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்களாக உயர்த்தப்பட்டுக்கொண்டே வந்தே விலை டீசலுக்கு 24 பைசா என வைத்து லிட்டருக்கு 77 . 83 ரூபாயாக மும்பையில் விற்கப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோலுக்கு 36 பைசா உயர்த்தப்பட்டு லிட்டருக்கு 77.83 ரூபாய் எனவும்,டீசலுக்கு 22 பைசா உயர்த்தப்பட்டு 68.75  ரூபாய் எனவும் விற்கப்படுகிறது.

கடந்த 12 நாட்களில் மட்டும் மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 11.02 ரூபாயும்,டீசலுக்கு 7.27 ரூபாயும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான்  இதுகுறித்து பேசும் போது ‘அரசு தலையிட்டு இந்த  விலை உயர்வைக் குறைக்கும்’ என்றார்.

 

ஈரான் மற்றும் வெனிசுலாவில் சாதகமற்ற நிலை

மத்திய அமைச்சர் இது குறித்து பேசும் போது ‘பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க மானியம் அளிக்கும் பட்சத்தில் அரசின் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி இல்லாமல் ஆகும்’ என்றார்.  இரான் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதார தடை மற்றும் வெனிசுலாவில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய ஜனாதிபதி தேர்தல் ஆகியன விலையைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைந்திருக்கின்றன.

இந்திய எண்ணெய்  நிறுவனம் தனது ஆண்டு தேவையில் எழுபது சதவீதத்தை மத்திய கிழக்கு உற்பத்தியாளர்களிடமிருந்தே கேட்டு பெறுகிறது. இந்திய எண்ணெய் நிறுவன  தலைவர் சஞ்சீவ் சிங், ஈரானில் இருந்து இறக்குமதியைக் குறைக்க மத்திய  அரசாங்கம் இதுவரை எந்த ஒரு அறிவுறுத்தலையும் தரவில்லை  என்றார்

Related Articles

டிடிவி தினகரன் இன்னும் சில தினங்களில் ஜெ... கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பிரான செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறினார். இது குறித்து தினகரனும்,...
“ஊர் முழுக்க கட் அவுட்டு! ஊழல் அரச... பேருந்து கட்டண உயர்வை அடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கட்டண உயர்வை எதிர்த்து முதலில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் க...
பெற்றோர்களே முதலில் நீங்கள் நிதானமாக இரு... முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் நீட் தேர்வு என்ற ஆபத்தில் இருந்து மாணவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. அவருடைய இறப்பிற்கு பிறகு ஆளாளு...
ஜெயகாந்தனிடம் பத்து கேள்விகள்!... எழுத்து துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? நான் வரவில்லை. எங்கோ போய்க்கொண்டிருந்த வழியில் எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதி பத்தி...

Be the first to comment on "12வது நாளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டது பெட்ரோல், டீசலின் விலை"

Leave a comment

Your email address will not be published.


*