மாஸ் படம் எடுப்பது எப்படி? தமிழ்சினிமா உருட்டல்கள்!

How to direct a Mass Tamil cinema

* முதலில் யாராவது சிக்கலில் இருக்க வேண்டும். சிக்கலில் இருப்பவரை நாயகன் சண்டை போட்டு காப்பாற்ற வேண்டும். நாயகனின் முகத்தை நேரடியாக காட்டாமல் காலை, நடையை, விரலசைவை, பின்தலையை காட்டிவிட்டு கடைசியாக முகத்தை காட்ட வேண்டும். நாயகனைச் சுற்றி புயல் வீச நாயகனின் தலைமுடி காற்றில் கலைந்தாட வேண்டும்.

சீரியசான கண்டன்டுடன் டைட்டில் கார்டு போட வேண்டும்.

* எண்ட்ரி பைட் சீன் முடிந்ததும் கொண்டாட்டாமான எண்ட்ரி சாங். எண்ட்ரி சாங் கோவில் முன்போ கிரவுண்டிலோ சாலையிலோ கல்லூரி வளாகத்திலோ மொட்டை மாடியிலோ பாருக்கு உள்ளவோ இருக்க வேண்டும். எண்ட்ரி சாங்கில் நாயகன் கண்டிப்பாக நாலு ஸ்டெப்பாவது ஆட வேண்டும்.

* சைடு கதாபாத்திரங்கள் எந்நேரமும் நாயகனை புகழ்ந்து பேச வேண்டும். சைடு கதாபாத்திரங்கள் பலசாலிகளாக இருந்தாலும் அவர்களுடைய பிரச்சினையை நாயகனே தீர்க்க வேண்டும். சைடு கதாபாத்திரங்கள் உதவி செய்ய நாயகனே பெரிய சாகசம் செய்ய வேண்டும். சைடு கதாபாத்திரங்கள் மட்டும் வரும் சீன் சடசடவென நகர வேண்டும். நாயகன் வரும் சீனெல்லாம் கொஞ்சம் அழுத்தமாக மெதுவாக நகர வேண்டும்.

* உரிமையோடு அதிகாரம் செய்யும் ஒரு பெண் கதாபாத்திரம் இருக்க வேண்டும். ஹீரோயின் எண்ட்ரி ஆகும்போதும் நாயகனைப் போலவே காலை கையை காது தோடை காற்றில் பறக்கும் காதோர முடியை காட்ட வேண்டும்.

* அராத்து பண்ணக்கூடிய மாஸ் எண்ட்ரி சீன் வில்லனுக்கும் இருக்க வேண்டும். வில்லனும் அறிமுக காட்சியிலயே நாலு பேரை தூக்கிப் போட்டு மிதிக்கனும்… முதல் இருபது நிமிடத்துக்குள் காட்ட வேண்டும். அல்லது இடைவேளைக்கு முன்பு காட்ட வேண்டும்.

* காமெடியனுக்கும் ஒரு சிரிப்பு மாஸ் சீன் இருக்க வேண்டும். முதல்பாதியில் நிறைய காமெடிகளும் இரண்டாம் பாதியில் ஆங்காங்கே காமெடி பண்ணலாம்..,

* நாயகன் கண்டிப்பாக சிகரெட் பிடிக்க, மது அருந்த வேண்டும்.

* எதிர்பார்க்காத இடத்தில் எதாவதொரு நடிகர் வந்து ஆச்சர்ய படுத்த வேண்டும்.

* நாயகனைப் பார்த்து நல்லவனா கெட்டவனா என்று சைடு கதாபாத்திரம் கேள்வி கேட்க             வேண்டும்.

* நாயகன் கண்டிப்பாக காப்பு அல்லது காதில் கடுக்கன், கழுத்தில் ரூபாய் காய்ன் அல்லது வளையம் மாட்டிய செயின், டைட்டான டீசர்ட் ( முடிந்தால் மேலே ஒரு சட்டை ) அணிந்திருக்க வேண்டும்.

* ஹீரோ – ஹீரோயின் டூயட் பாடல் அல்லது கில்மா பாடல் கண்டிப்பாக இன்ட்ரோவுக்கும் இடைவேளைக்கும் இடையில் அமைய வேண்டும்.

* முதல்பாதியில் ஆங்காங்கே ஒன்லைனர் காமெடி இருக்க வேண்டும். கொஞ்சம் காதல், கில்மா இருக்க வேண்டும்.

* இடைவேளைக்கு முன் பத்து நிமிடங்களில் பதட்டம் கூடிவிட வேண்டும். என்ன நடக்குது இங்க? என்ன நடக்கப் போகுது? என்ற கேள்வியை ரசிகர்கள் மனதில் ஓடவிட வேண்டும். பதட்டம் உண்டாக்கும் பிஜிஎம் மற்றும் அந்த ஹீரோ மாஸ் பிஜிஎம் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். தடதட வென காட்சிகள் நகர வேண்டும். கண்ணை கலங்க வைக்கும்படி எதாவது நடக்கலாம். நாயகன் சுடப்படுவது, காதலிக்கு திடீர் திருமணம் நாயகனுக்கு திடீர் திருமணம் போன்றவற்றுடன், நாயகனின் நெருக்கமான உறவூ இறப்பது போல

* இடைவேளைக்குப் பின் வரும் முதல் காட்சி கண்டிப்பாக சீரியஸாக தொடர வேண்டும். இடைவேளைக்குப் பின் பிளாஸ்பேக் அறிமுகத்தில் இன்னொரு மாஸ் சாங் ஓடவிடலாம். ஆனால் இந்த மாஸ் சாங் பயங்கரமாக கொண்டாட்டமாக துள்ளலாக இருக்க வேண்டும்.

* ப்ளாஸ்பேக் தடதடவென ஒன்லைன், காதல், வஞ்சகம் போன்றவற்றை அடக்கியபடி செல்ல வேண்டும்.

* சைடு கதாபாத்திரங்களு முடிந்தவரை குடும்பம் காதல் என்று முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் பைட் சீன் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அப்படியே சீன் இருந்தாலும் சில நிமிடங்களில் சுருண்டுவிட ஹீரோ அவனை காப்பாற்ற வேண்டும். இல்லாவிடின் ஹீரோவின் கெத்து போய்விடும்.

* இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் அழுத்தமாக இருக்க வேண்டும். மாஸ் பிஜிஎம்முடன் ஹீரோவுக்கு இன்னொரு எண்ட்ரி வேண்டும். இரண்டாம் பாதியில் முடிந்தவரை காதல், காமெடியை குறைத்திட வேண்டும். நினைவுகளை சுமக்கும் சோகப் பாடல் வேண்டுமானால் இடம்பெறலாம். முன்னொரு காலத்தில் நாயகன் வீழ்ந்த கதையை நாயகனுக்கு நேர்ந்த கதையை மிக அழுத்தமாக சொல்ல வேண்டும்.

* இட்வேளை முடிந்த முதல் இருபது நிமிட மாஸ், கொண்டாட்டம், கொஞ்சம் காதல், பீலிங் போன்றவை முடிந்த பிறகு நாயகன் ஏமாற வேண்டும்… டென்சன் ஆக வேண்டும்… கண் கலங்க வேண்டும்… இவையெல்லாம் முடிந்த பிறகு ஓட்டமும் துரத்தலுமாக இருக்க வேண்டும். கடைசி 40 நிமிடங்களுக்கு முன் வில்லனின் அதிரடி ஆட்டம் அனல் பறக்க வேண்டும்.

* எவ்வளவு பேர் எதிரில் இருந்து சுட்டாலும் ஹீரோவின் மேல் மட்டும் ஒரு புல்லட் கூட படக்கூடாது. அப்படியே பட்டாலும் அது கைகால்களில் மட்டுமே பட வேண்டும். ஒருவேளை நெஞ்சில் பட்டால் மீண்டும் உயிர் பிழைத்திட வேண்டும்.

* மொத்தம் 5 பாடல் இருக்க வேண்டும். 5 ம் சூப்பர்ஹிட் சாங்காக இருக்க வேண்டும்.

முதல்பாதிக்கு ஒரு மாஸ் இன்ட்ரோ பாடல்… ஒரு டூயட் அல்லது கில்மா பாடல்…

இரண்டாம் பாதிக்கு ஒரு மாஸ் இன்ட்ரோ பாடல்… ஒரு சோகப் பாடல்… ஒரு ஐட்டம் பாடல்…

* முதல் பாதியில் இரண்டு/மூன்று பைட் சீன்களில் ஹீரோ மாஸ் இன்ட்ரோ கொடுக்க மாஸ் பிஜிஎம் ஒலிக்க வேண்டும்…

* இரண்டாம் பாதியில் இரண்டு/மூன்று பைட் சீன்களில் ஹீரோ மாஸ் இன்ட்ரோ கொடுக்க மாஸ் பிஜிஎம் ஒலிக்க வேண்டும்…

* கிளைமேக்ஸின் கடைசி 15 நிமிடங்களுக்கு தோட்டா சத்தமாக ஒலிக்க வேண்டும்… பிஜிஎம் தடதடவென ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்… நாயகனும் வில்லனும் ஒரு புள்ளியில் இணைய வேண்டும்… வில்லனின் சவால்களை பலத்த சக்தியுடன் (ப்ளாஸ் பேக் காட்சிகள் கண்முன்னே வந்து செல்ல…) வில்லனை அழிக்க வேண்டும்…  வில்லன் அழிந்ததும் ஒரு டுவிஸ்ட்டுடன் படத்தை முடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நாயகன் இறந்துபோக ஒரு டுவிஸ்டுடன் படத்தை முடிக்கலாம்… ஆனால் டுவிஸ்ட்டுகள் கடைசி ஐந்து நிமிடங்களில் மட்டுமே அவிழ வேண்டும்… டுவிஸ்ட் கொடுக்கும் கதாபாத்திரம் எதிர்பார்க்காத ஆனால் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நாயகனின் கூடவே வந்தவையாக இருக்கலாம்… அல்லது சில காட்சிகளில் மட்டுமே வந்த யூகிக்க முடியாத சின்ன கதாபாத்திரமாக இருக்கலாம்… ஆனால் டுவிஸ்ட் முடிந்தவரை கொண்டாடத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும்… முடிச்சு அவிழும் காட்சிகள் ப்ளாக் & ஒயிட்டில் இருந்தால் சிறப்பு… கொண்டாட்டமான டுவிஸ்ட் விரியும் இடமென்றால் மாஸ் பிஜிஎம் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்… கடைசியில் நாயகன் எதாவதொரு சின்ன வசனத்தை பேச டைரக்டர் பேரை போட வேண்டும்…

* வில்லன் ஹீரோவைப் பற்றி புகழ்ந்து பேச வேண்டும்.

* ஹீரோ எண்ட்ரி ஆகும்போது கார் கதவை ஹெலிகாப்டர் கதவை திறக்கும்படி சைக்கிள் பைக்கை ரயிலை விமானத்தை… தலைமுடி தெறிக்க ஓட்டிவருவது போன்று ஸ்லோமோசனில் வைக்கலாம். ஹீரோ எதாவது ஒரு கார்னரில் இருந்து என்ட்ரி ஆகிறார். கால் வைக்கிறார், முகம் தெரிகிறது. கண்ணாடி தெறிக்க… காற்றில் புழுதி பறக்க… பேப்பர் பறக்க… இப்படி பலவற்றை பறக்க விட்டால் அது மாஸ் படம்.

Related Articles

பிரதமர் மோடிக்கு பிரபலங்கள் எழுதிய கடிதம... இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகை ரேவதி, நடிகையும்  இயக்குநருமான அபர்ணா சென் உள்ளிட்ட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு இப்பட...
2.0 படத்திற்கு எதிர்பார்ப்பு அவ்வளவாக இல... தமிழ் சினிமாவை உலக அரங்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் சினிமா எடுக்கும் இயக்குனர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இயக்குனர் ...
கருப்பு சட்டை காரர்களையும் கருப்பு நிற ம... கருப்பு - அழகு:கருப்பு நிறம் பெண்களுக்கு ஏன் அவ்வளவு பிடித்திருக்கிறது என்று பெண்களிடம் கேள்வி எழுப்பினால் இதற்கெல்லாம் சரியான பதில் சொல்ல முடியாத...
ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் எங்களை கரு... கருவிலயே குழந்தைகளுக்குப் பாதிப்பு உண்டாக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுங்கள் அல்லது இப்பகுதியில் வசிக்கும் எங்களை கருணைக்கொலை செய்து ...

Be the first to comment on "மாஸ் படம் எடுப்பது எப்படி? தமிழ்சினிமா உருட்டல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*