1000 ஆண்டுகள் பழமையான ராஜ ராஜ சோழன் சிலை மீட்பு

1000 ஆண்டுகள் பழமையான ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவியின் சிலைகள் மீட்கப்பட்டு இருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிலைகள் மீட்கப்பட்டு தஞ்சை பெரிய கோவிலில் ஒப்படைக்கப்பட்டன. ராஜ ராஜ சோழன் மற்றும் லோகமாதேவியின் இந்தச் சிலைகள் வரலாற்றில் பதிவான அவர்களது ஒரே சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத்தின் காலிகோ அருங்காட்சியகத்தில் இருந்து சிலைகளை தமிழ்நாட்டின் சிலை மீட்பு பிரிவினர் மீட்டனர். மூன்று நாட்களுக்குள் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மீட்கப்பட்ட சிலைகள் மீண்டும் நிறுவப்படும் என்று தெரிகிறது.

முன்னாள் அமைச்சர் வி.வி. ஸ்வாமிநாதன் இந்த ஆண்டு மார்ச் மாதம் உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காணாமல் போன வெண்கல சிலைகளை மீட்குமாறு தமிழ்நாடு சிலை மீட்பு பிரிவினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு சிலை மீட்பு பிரிவினர் வழக்கு ஒன்றைப் பதிவு செய்து இருந்தனர்.

 

இன்ஸ்பெக்டர் ஜெனரல் பொன் மாணிக்கவேல் தலைமையில் விசாரணை

காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை மீட்பு குழு, கௌதம் சாராபாய் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் அகமதாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் விசாரணை நடத்தி சிலைகளை மீட்டது. சிலைகளின் மதிப்பு முறையே ரூ 60 கோடி மற்றும் ரூபாய் 40 கோடி இருக்கும் எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது.

ராஜ ராஜ சோழனின் இருபத்து ஒன்பதாவது ஆண்டு ஆட்சியில் கொடம்பலரின் தலைவன் 13 வெண்கல சிலைகளை கோவில்களுக்கு நன்கொடையாக வழங்கினான்.  அதில் ராஜ ராஜ சோழன்  மற்றும் லோகமாதேவின் சிலைகளைத் தவிர, மற்ற 11 சிலைகள் குறித்த எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

கும்பகோணம் அருகே உள்ள பாண்டநல்லூர் கிராமத்தில் பசுபதிதேஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்களின் பார்வைக்கு  இந்த ஆண்டு பிப்ரவரியில் 107 பழங்கால சிலைகள் வைக்கப்பட்டன. கும்பகோணத்தில் உள்ள நாகேஷ்வரஸ்வாமி கோவிலில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் பாண்டநல்லூர் கிராமத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, தங்கள் கோவிலுக்கு சொந்தமான சிலைகளை அடையாளம் காணும் பணி,  தமிழ்நாடு சிலை மீட்பு குழுவின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.

Related Articles

ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்... The platform Trapped Monos The shawshank redemption  Gantumoote (kannada) The occupant (spain movie) Ayyapanum koshiyum (...
எஸ் ராமகிருஷ்ணனின் “கடவுளின் நாக்க... தின இந்து நாளிதழலில் தொடராக வந்த கடவுளின் நாக்கு கதைகளின் தாயகம், மனிதன் நல்லவனா?, அன்பின் அடையாளம், காட்டின் அரசன்!,சிலந்திப் பெண்!, கண் திறவுங்கள், ...
ஜெய் பீம் ராஜாகண்ணு மனைவிக்கு அரசாங்கம் ... ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு ராகவா லாரன்ஸ் செய்த நல்ல காரியம் என்று தான் முதலில் தலைப்பு வைக்க தோன்றியது. ஆனால் மாற்றிவிட்டோம். சின்ன கட்டுரை தான் பொ...
உலகிலயே அதிக தனியார் பள்ளிகளை கொண்ட நாடு... உலகிலயே அதிக அளவில் தனியார் பள்ளிகளைக் கொண்ட நாடு, உலகில் அதிக அளவில் தற்கொலை நடக்கும் நாடு போன்ற கேள்விகளுக்கு எல்லாம் தயங்காமல் இந்தியா என்று பதில் ...

Be the first to comment on "1000 ஆண்டுகள் பழமையான ராஜ ராஜ சோழன் சிலை மீட்பு"

Leave a comment

Your email address will not be published.


*