உங்களுக்குத் தரப்படும் மருந்துகளில் 10% போலியானவை என்றால் நம்புவீர்களா?

10-medicinal

எல்லா நம்பிக்கைகளும் அற்றுப் போன பிறகும் கூட ஒரு சாமானியன் சிறிய வைராக்கியத்துடன் சென்று சேரும் இடங்கள் இரண்டு. ஒன்று கோவில், அது ஒரு வழிப் பாதை. அங்கே அவனுக்கு தன் வேண்டுதல்களுக்குப் பதிலாக எதுவுமே திருப்பி தரப்படுவதில்லை. இரண்டாவது மருத்துவமனை. அங்கே அவனுக்குத் தரப்படுவதில் 10.5% சதவீதம் தரம் குறைந்த அல்லது போலியான மருந்துகள் என்று சொன்னால் நம்புவதற்குக் கொஞ்சம் கடினம் தான். ஆனால் நமக்கு வேறு வழியில்லை, நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அதைச் சொல்லியிருப்பது உலக சுகாதார நிறுவனம் (WHO).

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு

பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக பொருளாதாரத்தில் தரமற்ற போலி மருந்துகள் ஏற்படுத்தும் தாக்கம் (Public Health and socioeconomic impact of substandard and falsified medical products) என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்ட உலக சுகாதார நிறுவனம் இந்தியா உள்ளிட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் பயன்படுத்தப்படும் மருந்துகள் 10.5 சதவீதம் தரமற்றவை அல்லது போலியானவை என்று கண்டுபிடித்துள்ளது.

நிமோனியா காய்ச்சலால் உலகம் முழுவதும் நிகழ்ந்த 72430 குழந்தை மரணங்களுக்கான காரணம் இந்தத் தரமற்ற அல்லது போலி மருந்துகள் தான் என்றும்,  மேலும் இந்த எண்ணிக்கை 169271 வரை அதிகரிக்கலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஜனவரி 1 2017 முதல் டிசம்பர் 31 2016வரை வெளியான நூறு ஆய்வு அறிக்கைகளை மதிப்பாய்வு செய்ய எடுத்துக்கொண்டனர் உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள். இந்தியா உள்ளிட்ட 88 நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட 48218 மருத்துவ மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மேலும் அமெரிக்க அரசாங்கத்தால் எவரும் அணுகக்கூடிய வகையில் பராமரிக்கப்படும் (Medical Quality DataBase) என்னும் தகவல் பெட்டகத்திலிருந்தும் தகவல்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 48218  மருத்துவ மாதிரிகளில் கிட்டத்தட்ட 5094 மருத்துவ மாதிரிகள் தர பரிசோதனையில் தோல்வி அடைந்தன. அப்படித் தர பரிசோதனையில் தோல்வி அடைந்த மருந்துகளில் கணிசமானவை மக்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தும் மலேரியா எதிர்ப்பு மருந்துகள், ஆண்ட்டி பயாட்டிக் மருந்துகள் மற்றும் ஆண்ட்டி மைக்ரோபியல் மருந்துகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட நூறு ஆய்வறிக்கைகளில், மலேரியா எதிர்ப்பிற்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளில் 11.8சதவீதம் போலியானவை என்று தெரியவந்துள்ளது. மேலும் வலிப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளில் 65% சதவீதமும், பாலியல் ஹார்மோன் மருந்துகளில்56% சதவீதமும் தரமற்ற மற்றும் போலியான மருந்துகள் எனவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலியானவை என்று கண்டறியப்பட்ட மருத்துவ மாதிரிகளில் 60 சதவீதம் அரசு மற்றும் தனியார் மையங்களிலிருந்து பெறப்பட்டவை. ஆனால் போலிகளில் கணிசமான அளவுக்கு அதாவது 29சதவீதம் தனியார் மையங்களிலிருந்தே பெறப்பட்டுள்ளன.

இந்தியாவில் போலி மருந்துகள்

இந்தியாவில் மிக அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மருந்துகளான Combliflam மற்றும் D-Cold ஆகியவை தரம் குறைந்தவை என்று மத்திய மருந்துகள் தர கட்டுப்பாடு அமைப்பு அறிவித்துள்ளது.

‘இந்தியாவில் போலி மருந்துகள் பிரச்சனை மிகப் பெரியதாக உருவெடுத்துள்ளது. அதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு தர நிர்ணயிப்பாளானாக, இது போன்ற போலி மருந்துகள் உற்பத்தி ஆவதையும், விற்பதையும், மக்களிடம் சென்று சேர்வதையும் தடுக்கும் வழிமுறைகளை உருவாக்கி வருகிறோம்’ என்று இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் திரு.ஜி.என்.சிங் தெரிவித்தார்.

மக்களுக்கு மருத்துவமனைகள் மீதிருக்கும் எஞ்சிய நம்பிக்கையும் பொய்த்து போவதற்கு முன்பு மத்திய, மாநில அரசுகள் போலி மருந்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கடுமையாக்க வேண்டும்.

 

 

Related Articles

இந்த உலகம் ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்க... கடந்த ஆண்டு வெளியான படங்களில் மிக முக்கியமான படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து மிக அழகாக உருவாக்கி இருந்தார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இ...
முதலையை பிடித்த பிரதமர்! – கலாய்த்... மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பாரத பிரதமர் மோடி. நேற்று (ஆகஸ்ட் 13) அந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்ப பட்டது. அந்த நிகழ்ச்சியில் ...
பறையர்கள் தானே செத்தால் சாகட்டும்! ̵... இந்தியாவின் உயர்சாதியினரை விட மிகமிக மேலான மனசாட்சியும் பண்பாடும் கொண்டவர்கள் இந்த வெள்ளையர். இது தான் இந்த நாவலின் மையக்கரு.எழுத்தாளர் ஜெயமோகனின...
தெலுங்கானாவில் தேர்வு முறைகேடுகளில் ஈடுப... மெட்ரிக் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க தெலுங்கானா கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இணைப்பு நீ...

Be the first to comment on "உங்களுக்குத் தரப்படும் மருந்துகளில் 10% போலியானவை என்றால் நம்புவீர்களா?"

Leave a comment

Your email address will not be published.


*