பிக்பாஸ்ஸில் அரசியல் பிரபலங்கள் பங்கேற்றால் எப்படி இருக்கும் – ஆனந்தவிகடன் நடுப்பக்கத்தில் வருவது போல ஒரு ஜாலியான கட்டுரை

bigboss

பிக்பாஸ்ஸில் அரசியல் பிரபலங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் இல்லாமல் சில அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டால் எப்படி இருக்கும்?ஒரு சின்ன கற்பனை

தமிழிசை

மைக்கிற்கு பதிலாக எப்போதும் ஆதார் கார்டையே கழுத்தில் மாட்டிக்கொண்டு சுத்துவார். மேடம் சாப்டிங்களா என்று யாராச்சும் கேள்வி கேட்டால் உன்னுடைய ஆதார் கார்டை காட்டு அப்பத்தான் பதிலளிப்பேன் என்று ஸ்ட்ரிக்டாக இருப்பார். வாங்க இன்னிக்கு நர்ஸ் அக்காவுக்கு பிறந்தநாள் என்று மற்ற கண்டஸ்டன்ஸ்லாம் நள்ளிரவில்  வாழ்த்து சொல்லி கேக் வெட்ட வந்தால் ஐயோ நான் நர்ஸ் இல்ல டாக்டர் என செல்லமாய் சொல்லிவிட்டு, கேக்கை தன் கையாலயே பிசைந்து உருண்டை பிடித்து அவர்களுக்கு ஊட்டிவிடுவார். மாட்டுக்கறி தான் சாப்பிடுவேன் என யாராச்சும் வம்பு பண்ணால் அவரை ஆண்டி இந்தியன் என்று திட்ட ஆரம்பித்துடுவார்சோறு, தண்ணி வேண்டாமென சொல்லிவிட்டு மூணு வேளைக்கும் ஆயிலையே உணவாக உட்கொள்வார்.

சின்னம்மா

பெங்களூர் பைவ் ஸ்டார் ஜெயிலைக்காட்டிலும் இங்க கொஞ்சம் வசதி கம்மியா தான் இருக்கு, இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் என்று சீன் போடுவார். கேமராவில் ஸ்ப்ரே அடித்துவிட்டு, ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு ஜாலியாக ஷாப்பிங் போய்ட்டு வருவார். சுற்றியிருப்பவர்களில் யாராச்சும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டால் உடனே அவர்களை எலிமினேஷனுக்கு நாமிநேட் செய்துவிடுவார். தன்னை கிண்டல் செய்பவர்களிடம், எல்லாத்துக்கும் ஒரு பொறுமை இருக்கு என்று முறைத்து பேசுவார் எலிமினேட் ஆனபிறகு நான் திரும்ப வருவேன்டா என்று பிக்பாஸ் தலையில் அடித்து சபதம் எடுப்பார்.

வைகோ

இவர் கஞ்சா கருப்பா இல்ல பரணியா என்று சுத்தி இருப்பவர்களால் கணிக்கவே முடியாதபடிநடந்துகொள்வார். தோளில் துண்டை போட்டுக்கொண்டு ஓயாமல் நடந்து கொண்டே இருப்பார். மற்ற போட்டியாளர்களுடன் கூட்டணி வைத்தே அவர்களை எலிமினேட் ஆக்கிவிடுவார். பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆகி வந்தாலும் கூட எனக்கு வெளி உலகத்தை விட பிக்பாஸ் வீடே ரொம்ப பிடிச்சிருக்கு, இங்கயே இருக்கிறேன் என அழுது அடம்பிடிப்பார். போர் அடித்தால் ஸ்விம்மிங் புல்லில் மீன்பிடிப்பார். அப்படி இல்லையென்றால் காய்கறி வெட்டும் கத்தியில் அங்கு வளர்ந்திருக்கும் புல்லை வெட்ட தொடங்கிடுவார்.

ஸ்டாலின்

சுத்தி நடக்குற தப்பை எதிர்த்து, கமல் மாதிரி கேள்வி கேட்க நினைப்பார். ஆனால் இவர் பேசத்தொடங்குவதற்கு முன்பே எலிமினேட் செய்துவிடுவார்கள். சட்டை கிழிந்து, வீட்டிலிருந்து வெளியேறுவார். வெளியே வந்து தன் சட்டையை காட்டி, ஆக! இங்க யாருக்கும் மரியாதை என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியவில்லை என்று புலம்புவார். ஆக ஆக என்று இவர் எவ்வளவு சொன்னாலும் எதும் ஆகாதது போலவே மற்றவர்கள் இருப்பார்கள்.

விஜய்காந்த்

ஆண்டவருக்கே புரியாத படி பேசுவார். கேப்டன் என்று அழைக்கிறார்களே தவிர ஒரு வாரம் கூட என்னை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கலயே என்று கோபித்துக்கொள்வார்நீங்க ஷட்அப் பண்ணுங்க என்று யாராச்சும் சொன்னால், தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ என்று சிவந்த கண்களுடன் மிரட்டுவார். மிரட்டிய கொஞ்ச நேரத்தில் அடிக்க மாட்டேன் கிட்ட வா என்று அன்பாய் அரவணைப்பார். இவர் பேசிட்டு இருக்கும்போது குறுக்க யாராச்சும் தொந்தரவு செய்தால் அவரை குனிய வைத்து முதுகிலயே துணி துவைப்பார். வீட்டில் யாராவது வயிறு வலிக்கிறது என்று அழுதால் எல்லாத்துக்கும் இந்த பாகிஸ்தான் தீவிரவாதி பய தான் காரணம் என்று ஆவேசப்படுவார். எல்லோரும் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருக்க, இவர் மட்டும் நீங்க சாப்பிட்டிங்களா பிக்பாஸ் என்று வெள்ளந்தியாய் பிக்பாஸின் நலன் விசாரிப்பார். அதே சமயம், டாஸ்க் மேல டாஸ்க் கொடுத்து பிரசர் செய்தால் இந்த வெண்ண என்னடா எனக்கு வேல கொடுக்கறது என்று பிக்பாஸையே திட்டுவிட்டு வெளியேறவும் தயங்கமாட்டார்.

சீமான்

தமிழில் மட்டுமே பேச வேண்டும்னு விதி விதிச்சுருக்கிங்கஆனா நிகழ்ச்சியோட பேரே ஆங்கிலத்துல இருக்கேனு, பிக்பாஸ் என்ற பெயரை பெரிய தலைவர் என மாத்தியிருப்பார். விதியை மீறி யாராச்சும் ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழியிலோ பேசினால், ரகசியம் பேசுவதுபோல அவர்களை தனியாக அழைத்துச் சென்று என் முப்பாட்டன் இருக்கானே என்று கத்தி பேசுவார். அப்படி பேசத்தொடங்கினாள்மழை பெய்தாலும் கூட நனைந்து கொண்டே பேசுவார். வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை என் மக்களே! என்று பிக்பாஸ்க்கே காதுவலிக்கும்படி கேமரா முன்பு பேசுவார் என்பதால் இவரிடமிருந்து மைக்கை பிக்பாஸ் பிடுங்கிகொள்வார். பிக்பாஸ் பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியராக பொறுப்பேற்றுக்கொள்வார். தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் தாயுமானவர் என்று சொன்னால் தலயிலயே ஒன்னு வைப்பார். தவறானவர்களுக்கு ஓட்டுப்போட்டு எலிமினேட் ஆகாமல் காப்பாற்றினாள், ஓட்டுபோட்டவன் கைல குஷ்டம் வரட்டும் என்று சாபமிடுவார்.

ஓபிஎஸ்

எப்போதும் மூலையில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பார். திடீர் திடீரென்று அவருக்கு பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்திடும். உடனே அவர் யார்யார் என்ன பேசினார்கள், எவ்வளவு திருடினார்கள் என்பதை ஒன்னுவிடாமல் கேமரா முன்பு ஒப்புவிப்பார். யார் எப்போது டீ கேட்டாலும் சலிக்காமல் போட்டுத் தருவார். சார் மிக்சர் சாப்பிடுறிங்களா என்று யாராச்சும், தெரியாத்தனமாக கேட்டுவிட்டால் அவ்வளவு தான்!,  எல்லாரும் கார்னர் பண்றாங்க பிக்பாஸ், என்னால முடியல பிக்பாஸ் டார்ச்சர் பண்றாங்க என்று சுவர் ஏறி குதித்து வெளியேறிடுவார்.

Related Articles

தமிழ் சினிமாவிற்கு இன்னொரு பாலா கிடைத்து... சென்னை மனநல காப்பகத்தில் இருந்து படம் துவங்குகிறது. மனநல காப்பகத்தில் வரும் ஆர்யாவின் அறிமுக காட்சியும் பின்னணி இசையும் போதும் இது எப்படிபட்ட படம் என்...
Vikatan Awards – Zee Awards –... Zee Cine Awards Tamil 2020Best actor - Dhanush (Asuran) Favourite actor - Vijay (Bigil) Sridevi inspiring woman of indian cinema award - N...
மூடப்பட்டு வரும் சினிமா தியேட்டர்கள்? தி... துருப்பிடித்துப் போன இரும்புக் கேட்டுகள், வெள்ளை படிந்து போன ஜன்னல் கண்ணாடிகள்,  புழுதிகளும் பறவை எச்சங்களும் நிறைந்த, சாயம் இழந்துபோன தியேட்டர் சுற்ற...
விரல் அளவு கூட இல்ல! இதுல ஒருவிரல் புரட்... கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் சிறுவன் ஒருவனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. தளபதி விஜயின் தீவிர ரசிகர் ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கும் அந்த சி...

Be the first to comment on "பிக்பாஸ்ஸில் அரசியல் பிரபலங்கள் பங்கேற்றால் எப்படி இருக்கும் – ஆனந்தவிகடன் நடுப்பக்கத்தில் வருவது போல ஒரு ஜாலியான கட்டுரை"

Leave a comment

Your email address will not be published.


*