அரசாங்கம் உணவு தராதபோது, பிச்சையெடுத்தல் எப்படி குற்றமாகும்? கேட்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்

அரசாங்கம் வேலையோ, உணவோ தராத போது, பிச்சையெடுத்தல் எப்படி குற்றமாகுமென்று டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிச்சையெடுத்தலைக் குற்றவிலக்கு செய்யகோரிய இரண்டு பொதுநல வழக்குகளை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளது. நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் சி.ஹரி ஷங்கர் ஆகியோர் இரண்டு பேர் கொண்ட அமர்வில் இடம்பெற்றிருந்தனர்.

‘நம்மிடம் ஒரு கோடி ரூபாய் இருக்கும் பட்சத்தில் நாம் யாரிடமும் பிச்சை கேட்கப் போவதில்லை. பிச்சையெடுத்தல் என்பது நிர்பந்தமே அன்றி தேர்வு அல்ல. ஒரு அரசாங்கம் உணவோ, வேலையோ தராதபோது பிச்சையெடுத்தல் எப்படி குற்றமாகும்?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பிச்சைத் தடுப்பு சட்டம், மும்பையின் படி பிச்சையெடுத்தலைக் குற்றச்செயலாக கருத முகாந்திரம் இருப்பதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் அது வறுமையின் காரணமாக பிச்சையெடுத்தல் தவறில்லை என்றும், எனினும் பிச்சையெடுத்தலை குற்றவிலக்கு செய்ய முடியாது எனவும் தெரிவித்தது.

 

பிச்சைக்காரர்களுக்கு ஆதரவாகப் பொதுநல வழக்குகள்

ஹர்ஷ மந்தர் மற்றும் கர்னிகா சாவ்னி ஆகியோர் பிச்சைக்காரர்களுக்கு ஆதரவாகப் பொதுநல வழக்கைத் தொடர்ந்தவர்கள். பிச்சையெடுத்தலைக் குற்றவிலக்கு செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்கும் முயன்று வருகிறார்கள். பிச்சைத் தடுப்பு சட்டம், மும்பைக்கு எதிராகவும் போராடி வருகிறார்கள்.

சமூக நீதி அமைச்சகம் ,பிச்சைக்காரர்கள் மற்றும் வீடற்ற மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்க ஒரு மசோதாவைத் தயாரித்துள்ளதாக மத்திய அரசும், ஆம் ஆத்மீ அரசாங்கமும் நீதிமன்றத்திடம் அக்டோபர் 2016 ஆம் ஆண்டு   தெரிவித்திருந்தது. ஆனால் பின்னர் சட்டத்தை திருத்தும் முன்மொழிவு கைவிடப்பட்டது

தற்போதைய பிச்சை தடுப்பு சட்டம், மும்பை அடிப்படையில் ஒருவர் பிச்சை எடுப்பாரேயானால் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க முடியும். தொடர்ந்து அவர் தண்டிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் வரைக்கும் கூட சிறைத் தண்டனை வழங்க முடியும். ஆனால் தேசிய அளவிலான சட்டம் இன்று பிச்சையெடுத்தலுக்கு எதிராக இல்லை.

Related Articles

அரை மில்லியன் இந்தியர்கள் நிம்மதி பெருமூ... H1B விசா காலம் முடிந்து, அமெரிக்காவில் நிரந்தரமாகத் குடியேறுவதற்கான  க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்துக் காத்திருந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற்ற இருப...
” தெருவிளக்கு வெளிச்சத்துல நாங்க ம... இன்று காலா படத்தின் இசை வெளியீடு விழா சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்து உள்ளது. படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். அந்தப் பாடல்களைப் பற்றி பார்ப்போம்...
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு மொத்தம... சமீபத்தில் தான் 96, பரியேறும் பெருமாள், ராட்சசன் என்று அட்டகாசமான படங்கள் எல்லாம் குறிப்பிட்ட ஒரே நாளில் வெளிவந்து பர்சை காலி செய்தன. தற்போது அதே போல ...
தைவானைத் தாக்கியது கடும் நில நடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 6 .4 என்று பதிவாகி இருக்கும் நில நடுக்கம் தைவானில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு தைவானின் சுற்றுலா நகரமான ஹுவாலியனை இந...

Be the first to comment on "அரசாங்கம் உணவு தராதபோது, பிச்சையெடுத்தல் எப்படி குற்றமாகும்? கேட்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்"

Leave a comment

Your email address will not be published.


*